இலங்கை அம்பாறை - சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தைப் பகுதியில் நேற்று (20) மாலை இடம்பெற்ற கோர விபத்தில் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் உ**யி**ரிழந்துள்ளதுடன், அவருடன் பயணித்த 21 வயதுடைய மற்றொரு இளைஞர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மல்வத்தைப் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் லொறியும் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்துச் சம்பவித்துள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் உடனடியாக அம்பாறை மாவட்ட பொது
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், மல்வத்தை 02, புதுநகர் பகுதியைச் சேர்ந்த இராசேந்திரன் வர்ஷன் (வயது-23) என்ற இளைஞன் சிகிச்சை பலனின்றி உ**யி**ரிழந்துள்ளார்.
படுகாயமடைந்த 21 வயதுடைய மற்றைய இளைஞர் தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார்.
மோட்டார் சைக்கிள் செலுத்துநரின் கவனயீனமே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸாரர் மேற்கொண்டு வருகின்றனர்.
''பாதுக்காப்பாகவும், போக்குவரத்து விதிமுறைகளுக்கு உட்பட்டு வாகனங்களை செலுத்துவதன் மூலம் விபத்துகளையும் உயிரிழப்புகளையும் குறைத்துக்கொள்ள முடியும்''
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம்
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
தகவல்: குடும்பத்தினர்
https://navakkiri.blogspot.com/2026/10/blog-post_20.html








0 கருத்துகள்:
கருத்துரையிடுக