siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 24 நவம்பர், 2026

இலங்கையில் வட்டுவாகல் வீதி விபத்தில் முதியவர் உயிரிழந்துள்ளார்

நாட்டில் முல்லைத்தீவு – வட்டுவாகல் வீதியில் 23-11-2026-அன்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில், துவிச்சக்கர வண்டியில் பயணித்த வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவு நகரிலிருந்து மாலை வட்டுவாகல் நோக்கிப் பயணித்த கெப் ரக வாகனம் ஒன்று, முன்னால் துவிச்சக்கர வண்டியில் சென்று 
கொண்டிருந்த குறித்த வயோதிபர் வீதியின் மறுபக்கத்திற்குத் திரும்ப முற்பட்டபோது அவர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது, 65 வயதுடைய வட்டுவாகல் பகுதியைச் சேர்ந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்தில் படுகாயமடைந்து உயிருக்குப் போராடிய நிலையில் மீட்கப்பட்ட வயோதிபர், உடனடியாக 
வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navakkiri.blogspot.com/2026/10/blog-post_20.html


0 கருத்துகள்:

கருத்துரையிடுக