siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 27 பிப்ரவரி, 2022

அடிக்கடி உங்கள் கண்கள் துடிக்கிறதா இது நல்லதா கெட்டதா

நம்முடைய கண்கள்  ஒரு சில சமயங்களில் வழக்கத்திற்கு மாறாக நம்முடைய கண்கள் திடீரென துடிக்க ஆரம்பிக்கும். எந்த ஒரு விஷயமும், வழக்கத்திற்கு மாறாக நடக்கும் பொழுது நமக்கு ஒரு பதட்டம் வந்து விடுகிறது. இந்த வகையில் கண்கள் துடித்த உடன் என்னவாக இருக்கும்? என்ன நடக்கப் போகிறது? என்கிற ஒரு உள்ளுணர்வு மனதை குழப்பிக் கொண்டிருக்கும். அறிவியல் ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் கண்கள் துடிப்பது நல்லதா? கெட்டதா? எப்படி துடித்தால், என்ன பலன்? என்பதை தான் இந்த பதிவின்...

சனி, 26 பிப்ரவரி, 2022

கிளிநொச்சியில் முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கிளிநொச்சியில் பல்வேறு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.இந்நிலையில் 2 நாட்களாக தமது வாழ்வாதாரம் இழந்த நிலையில் இருப்பதாக முச்சக்கரவண்டி சாரதிகள் தெரிவித்துள்ளனர்.இதுதொடர்பாக சாரதிகள் மேலும் தெரிவிக்கையில்,எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாகதனியார் விற்பனை நிலையங்களில் அதிக விலைக்கு எரிபொருள் கொள்வனவு செய்து முச்சக்கரவண்டியினை...

வெள்ளி, 25 பிப்ரவரி, 2022

கொடூரமாக யாழில் கொலை செய்யப்பட்ட பெண்! சந்தேகநபர் வாக்குமூலம்

மோட்டார் சைக்கிள் லீசிங் பணம் கட்டுவதற்கு பணம் தேவைப்பட்டதால் வயோதிப பெண்ணை கொலை செய்துவிட்டு அவர் அணிந்திருந்த சங்கிலியை அபகரித்துச் சென்றேன் என யாழில் தனிமையிலிருந்த வயோதிப பெண் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட இளம் குடும்பத்தலைவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் இராசாவின் ஒழுங்கையில் உள்ள வீடொன்றில் தனிமையில் வசித்த வயோதிப பெண் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்.மரியநாயகம் காணிக்கையம்மா...

நாட்டில் இன்னும் ஒரு நாட்களில் எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலையில் பாரியமாற்றம்

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலைத் தொடங்கியுள்ள நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை மற்றும் தங்கத்தில் விலை என்பன எகிறியுள்ளது. அதன்படி கச்சா எண்னெய் பரல் ஒன்றுக்கு 100 அமெரிக்க டொலர் என்றளவில் உயர்ந்துள்ளதுடன் தங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளது.சர்வதேச சந்தையின் ஒரு பரல் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை கடந்த ஜனவரி 31ஆம் திகதி 91.03 டொலருக்கு வர்த்தகமானது. இந்த நிலையில் தற்போது பிரென்ட் கச்சா எண்ணெய் ஒரு பரல் 98 டொலரில் இருந்து வந்தது....

புதன், 23 பிப்ரவரி, 2022

நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு பற்றிய செய்தி

நாட்டில் கடந்த சில நாட்களாக எரிவாயு, அரிசி, சீனி, பனை, சீமெந்து ஆகியவற்றின் தட்டுப்பாடு மற்றும் விலைவாசி உயர்வை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.இன்று நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண இதனை தெரிவித்தார்.தற்போது எரிவாயு, சீனி மற்றும் அரிசிக்கு தட்டுப்பாடு இல்லை எனவும், விலை உயர்வாகவே உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பால் மா மற்றும் சீமெந்து பிரச்சினை தீர்க்கப்படவில்லை...

வவுனியா வைத்தியசாலையின் கவனகுறைவால் பறிபோன குழந்தையின் உயிர்

வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 9 மாத சிசு ஒன்று மரணமடைந்துள்ளதுடன், வைத்தியசாலையின் தவறே குழந்தையின் இறப்புக்கு காரணம் என பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.22-02-2022.அன்று பிற்பகல் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, தவசிகுளம் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பம் ஒன்றின் 9 மாதக் குழந்தைக்கு சுகயீனம் ஏற்பட்ட நிலையில் 22-02-2022.அன்று இரவு வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். இதன்போது குழந்தையை...

செவ்வாய், 22 பிப்ரவரி, 2022

நாடு அபாய கட்டத்தில் எரிபொருள்களுக்காக நீண்ட வரிசையில் காத்திருப்பு.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அதன் விநியோகஸ்தர்களுக்கு எரிபொருள் விநியோகத்தை கட்டுப்படுத்தியுள்ளதனால் நீண்ட வரிசையில் பவுசர்கள் எரிபொருள் கொள்வனவுக்காக காத்திருக்கின்றன. நாட்டில் டொலர் நெருக்கடி காரணமாக இறக்குமதி செய்யப்படும் எரிபொருளுக்கு பணம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதே இதற்குக் காரணம் ஆகும்.ஏற்கனவே நாட்டின் பல பகுதிகளில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் எரிபொருள் நிரப்பு நிலையங் களுக்கு முன்னால் வாகனங்கள் நீண்ட வரிசை யில் நிற்கின்ற...

திங்கள், 21 பிப்ரவரி, 2022

விரைவில் இலங்கை மக்களுக்கு விடுதலை வெளியாகிய முக்கிய செய்தி

இலங்கையில் விரைவில் முகக் கவசமின்றி நிகழ்வு நடத்துவது உட்பட நாட்டை முழுமையாக திறப்பதற்கு வாய்ப்புகள் உள்ளதென சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக் கொண்டதன் பின்னர் இலங்கையின் அனைத்து மக்களினதும் நோய் எதிர்ப்பு சக்தி எதிர்பார்த்த மட்டத்தை எட்டினால் இந்த நடவடிக்க மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, சில சமயங்களில் ஒரே நபர் பல சந்தர்ப்பங்களில் கோவிட் வைரஸால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள்...

நாட்டில் மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களுக்கு எதிராக புதிய சட்டம்

நாட்டில் போதைப்பொருள் பயன்படுத்தி விட்டு வாகனங்களை செலுத்துபவர்களுக்கு எதிராக புதிய சட்டமொன்று உருவாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.சாரதிகளின் பொறுப்பற்ற செயற்பாடுகள் காரணமாக வீதி விபத்துகள் அதிகரித்துள்ளதாகவும், இதனை கட்டுப்படுத்துவதற்காக விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இதற்கமைய, கடந்த ஆண்டு இடம்பெற்ற 22 ஆயிரம்...

ஞாயிறு, 20 பிப்ரவரி, 2022

பாக்ரோவில் வான் ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஸ்கெலியா – சாமிமலை பிரதான வீதியில் பாக்ரோ பகுதியில் நேற்று இரவு 11.45 மணியளவில் வான்  ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 10 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணம் செய்த 5 பேர் கடும் காயங்களுக்குள்ளாகி டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.மாத்தறை – கோட்டேகொட பகுதியிலிருந்து சிவனொளிபாதமலைக்கு யாத்திரைகளை மேற்கொண்டு விட்டு மீண்டும் வீட்டுக்கு...

இலங்கையில் கடந்த 18 மாதங்களில் இளைஞர்-யுவதிகள் நீரில் மூழ்கி மரணம்

இலங்கையில் கடந்த 18 மாதங்களில் 168 மாணவர்கள் மற்றும் இளைஞர்-யுவதிகள் நீரில் மூழ்கி இறந்துள்ளனர்.எனவே பாதுகாப்பற்ற சுற்றுலாக்களை ஏற்பாடு செய்யவேண்டாம் என்று பாடசாலை நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.குருநாகல் மாவட்ட சிரேஸ்ட கல்விப் பணிப்பாளர் டபிள்யூ.எம்.பாலசூரிய இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பொறுப்பற்ற நடத்தைகளே இந்த துயரமான போக்குக்கு இட்டுச் சென்றுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.எனவே இதுபோன்ற பயணங்களுக்கு...

வெள்ளி, 18 பிப்ரவரி, 2022

மரண அறிவித்தல் அமரர் சுப்பிரமணியம் கனகராசா 18.02.22

யாழ் சிறுப்பிட்டி மத்தியைசேர்ந்த‌ சுப்பிரமணியம் கனகராசா அவர்கள் 18-02-2022 இன்று மதியம் 12.00 மணியளவில் அவரது இல்லத்தில் இயற்கை எய்தினாா். இவர் ஓய்வு நிலை அதிபரும் சமூக சேவையாளாரும் சிறுப்பிட்டி முதியோா் சங்கத்தினுடைய தலைவரும் ஆவாா். அன்னாாின் இறுதிக் கிாியைகள் பற்றிய விபரம் பின்னா் இதே இணைப்பில் இணக்கப்படும் இவ் அறிவித்தலை உற்ரார், உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேம் எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின்  கண்ணீர்...

வியாழன், 17 பிப்ரவரி, 2022

வவுனியாவில் வர்த்தக நிலையங்களில் சீனியில் செய்யப்படும் மோசடி

வவுனியா, பஜார் வீதியில் அமைந்துள்ள பிரபல வர்த்தக நிலையத்தில் விற்பனை செய்யப்பட்ட சீனி பையில் ஒரு வகையான இரசாயன பொருள் கலப்படம் செய்யப்பட்டுள்ளமை கணடறியப்பட்டுள்ளது.இது தொடர்பில் பொதுமகன் ஒருவர் வவுனியா மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையில் முறைப்பாடு மேற்கொண்டுள்ளார்.சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,வவுனியா, பஜார் வீதியில் பொலிஸ் நிலையத்திற்கு பின்புறமாக அமைந்துள்ள பிரபல வர்த்தக நிலையத்தில் பொதுமகன் ஒருவர் பொதியிடப்பட்ட சீனி பை ஒன்றினை...

அமரர் நாகலிங்கம் பத்மநாதன் 1ம் ஆண்டு நினைவஞ்சலி 17.02.22

பிறப்பு-28-02-1956-இறப்பு-17-02-2021.யாழ் யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த நாகலிங்கம் பத்மநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.ஆண்டொன்று ஆனாலும் ஆறமுடியவில்லை எம்மால்இப் பூமியில் உங்களை நாம் இழந்த துயரைஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம்!உங்களையே உலகமென உறுதியாய்நாமிருக்க ஏன் விண்ணுலகம்நிரந்தரமாய் விரைந்தீரோ?எம்மை எல்லாம் அன்பால் அரவணைத்துபண்பால் வழிநடத்திய அந்த நாட்கள்எம்மை விட்டு நீண்ட...

புதன், 16 பிப்ரவரி, 2022

நாட்டில் எரிபொருள் விலை அதிகரிப்பு இன்னும் தீர்மானிக்கப்படவில்லை

இலங்கைக்கு போதியளவு டீசல் கையிருப்பு கிடைத்துள்ளதுடன், எரிபொருள் விலையை அதிகரிப்பது தொடர்பில் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்பதன் பின்னணியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஐஓசி நிறுவனம் பெப்ரவரி 06ம் திகதி முதல் எரிபொருள் விலையை உயர்த்துவதாக அறிவித்திருந்தது.இதனைத் தொடர்ந்து, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் (CPC) விலையேற்றத்திற்கு...

செவ்வாய், 15 பிப்ரவரி, 2022

மரண அறிவித்தல் திருமதி அம்பலவாணர் சுசிலா 14.02.22

தோற்றம்.17 08 1957-மறைவு-14 02 2022யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அம்பலவாணர் சுசிலா அவர்கள் 14-02-2022 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற சண்முகம், செல்லம்மா தம்பதிகளின் ஆசை மகளும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற அம்பலவாணர் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம், சுந்தரலிங்கம் மற்றும் வெற்றி வேலாயுதம் பிள்ளை(சிவம்) ஆகியோரின்...

எரிவாயு அடுப்பு வவுனியாவில்வீடொன்றில் வெடித்து சிதறியது

வவுனியாவில் சிங்கள பிரதேச செயலக வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவம் ஒன்று பாதிவாகி இச்சம்பவம்  13-02-2022.ஞாயிற்றுக்கிழமை  அன்று  அதிகாலை இடம்பெற்றுள்ளது.குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,வவுனியா சிங்கள பிரதேசசெயலக வீதிக்கு அருகாமையில் அமைந்துள்ள வீடு ஒன்றில் நேற்றையதினம் இரவு சமையல் செய்த பின்னர் சமையலறை கதவினை மூடிவிட்டு தூங்கச்சென்றுள்ளனர்.அதன் பின்னர் அதிகாலை தேநீர் தயாரிப்பதற்காக...

திங்கள், 14 பிப்ரவரி, 2022

பருத்தித்துறை பகுதியில் தீடிரென உயிரிழந்த இரண்டு பிள்ளைகளின் தாய்

கொழும்பில் வசித்து வந்த வடமராட்சி பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாய் .14-02-2022.இன்று அதிகாலை 5-00 மணியளவில் தீடிரென உயிரிழந்தார் .சுகயீனமுற்ற வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த சத்தியேஸ்வரன் ஜெபினா வயது 41 என்ற இளம் பெண்ணே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார் இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>...

யாழ் சித்தங்கேணி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சித்தங்கேணி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.இவ்விபத்து சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.மோட்டார் சைக்கிளும் முச்சக்கரவண்டியும் மோதியமையினாலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதியும் முச்சக்கர வண்டி சாரதியும் சங்கானை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றனர்.இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இங்குஅழுத்தவும்...

கோப்பாய் பகுதியில் இடம் பெற்ற கோர விபத்து (புகைப் படங்கள்)

யாழ் கோப்பாய் பகுதியில் முச்சக்கர வண்டியுடன் வான் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது14-02-2022..இன்று மாலை 6.15 மணியளவில் இவ் விபத்து இடம் பெற்றுள்ளது. வாகனத்தில் பயணித்தவர்கள் சிலர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரியவருகின்றது. இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>...