siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 28 ஏப்ரல், 2015

உங்கள் இராசி பலன்கள் 27-4-15முதல்3-5-15வரை

மேஷம்
1.மேசம்:-மேசராசி அன்பர்களே சூரியன் நன்மை தரும் கிரகமாகும்.ஏப்ரல்27,28,29 வேலை இல்லாதவர்களுக்கு வெகு நாட்களாக எதிர் பார்த்து இருந்த புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும் காலமாகும்.உடம்பில் தோல் மற்றும் ரத்த சம்பந்தமாகிய பிணிகள் வந்து போகும். விட்டுப் போன பழைய வழக்குகள் மீண்டும் தொடர வாய்ப்பு உள்ளதால் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
 கண்களில் கவனமுடன் இருப்பது நல்லது. பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டாலும் மிகுந்த பிரயாசையின் பேரில் சமாளித்துக் கொள்வீர்கள்.குடும்பத்தில் ஏற்படும்.ஏப்ரல்30;மே1உடல் நிலை பாதிப்புகள் நீங்குவதற்காக மருத்துவத்திற்காக வெளியுர் பயணங்களை மேற் கொள்வீர்கள். பேப்பர்,பேனா பென்சில் போன்ற எழுது பொருட்கள் போன்ற ஸ்டே~னரி சம்பந்தமான பொருட்களை விற்பனை செய்வோர்கள்,அச்சுத் துறையைச் சார்ந்த பொருட்கள் விற்பனையாளர்கள்,கவிஞர்கள்,
எழுத்தாளர்கள்,பாடலாசிரியர்கள்,தபால் தந்தித் துறைகளைச் சார்ந்தவர்கள்,காய்கரிகள்,இலை மற்றும் சிற்றுண்டி வியாபாரிகள் ஆகியோர்கள் நல்ல லாபம் அடைவார்கள். மே2,3நெடு நாட்களாகப் பிரச்சனையில் இருந்த குடும்பச் சொத்துக்கள் கைக்கு வந்து சேரக் கூடிய காலமாகும்.அரசு வழக்குகளில் சாதகமான நல்ல தீர்ப்புகளை எதிர் பார்க்கலாம்.விபரீத எண்ணங்களை விட்டுக் காரியத்தைக் கவனிக்கவும்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.
இராசியான எண்:-5
இராசியான நிறம்:-பச்சை
இராசியான திசை:-வடக்கு
பரிகாரம்:-மஹாவி~;ணு வழிபாடு செய்து அன்ன தானம் செய்த வரவும்.
ரிசபம்
2.ரிசபம்:-ரிசபராசி அன்பர்களே சூரியன் நன்மை தரும் கிரகமாகும்.ஏப்ரல்27,28,29வராத கடன் கொடுத்துள்ள பணம் எதிர் பாராமல் திரும்பக் கிடைக்கும்.உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் முன் கோபத்தை தவிர்த்துப் பணியாற்றுதல் நல்லது. உடம்பில் மூளை நரம்பு எலும்பு போன்ற உபாதைகள் வந்து போகலாம். கணவன் மனைவி உறவுகளில் இருந்து வந்த பிரச்சனைகள் தீர்ந்த சுமூகமான உறவுகள் ஏற்புடும்.புதிய கூட்டுத் தெழில் முயற்சிகளை சற்று கால தாமதமாக
 தொடங்குவது நல்லது.ஏப்ரல்30,31எதிர் பாராமல் வட திசையில் இருந்து பொருள் வரவும், நல்ல செய்திகளும் வந்து சேரும். வீடுகளைப் புதுப்பித்துக் கட்டுவதற்காக பணச் செலவுகள் வந்து சேரும்.பூர்வீக இடங்களை விட்டு மாறிச் செல்லத் திட்டம் போடுவீர்கள். ஆதரவு அற்ற ஏழைகளுக்காக உதவி செய்து அதனால் மன மகிழ்ச்சி அடைவீர்கள்.மே1,2நண்பர்களால் வீண் விவாதங்களும் தொல்லைகளும் வந்து போகும். கட்டிட சம்பந்தமான செங்கல் மணல்,கல் போன்ற பொருட்களை விற்பனை செய்வோர்கள்.அழகு கலைக் கூடங்களை நடத்துவோர்கள்,சினிமா நாடகம் போன்ற துறை சார்ந்தவர்கள்,ஆடு மாடு,கார் லாரி போன்ற வாகனத் தொழிற் செய்வோர்கள்,கலைக் கல்லூரி மாணவர்கள்,ஆசிரியர்கள் ஆபரணங்கள் மற்றும் நவ ரத்தின வியாபாரிகள் ஆகியோர்கள் நற் பலன் அடைவீர்கள்.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.
இராசியான எண்:-6
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை:-தென்கிழக்கு
பரிகாரம்:-மஹாலட்சுமி வழிபாடு செய்து அன்னதானம் செய்து வரவும்.
மிதுனம்
3.மிதுனம்:-மிதுனராசி அன்பர்களே புதன் நன்மை தரும் கிரகமாகும்.ஏப்ரல்27,28,29 கம்யுட்டர் சம்பந்தமாகிய பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள், பழ வியாபாரிகள்,அநாதை ஆசிரமங்களை நடத்துவோர்கள்,அற நிலையத்துறை சார்ந்தவர்கள்,பூஜைப் பொருள் வியாபாரிகள்,உணவு தானிய வியாபாரிகள் ஆகியோர்கள் நல்ல இலாபம் பெறுவார்கள்.தாயின் உடல் நிலையில் பாதிப்புகள் உண்டாகுவதோடு மருத்துவச் செலவுகள் ஏற்படும். நீண்ட காலமாகக் காணாமற் போன பொருட்கள் மற்றும் நபர்கள் திரும்ப வீடு வந்து சேரும் காலமாகும்..ஏப்ரல்30மே1திருமணம் போன்ற சுப காரிய நிகழ்சிகளுக்காக நீண்ட தூரப் பயணங்களை மேற் கொள்ளுவீர்கள்.யாத்திரையில் கவனமுடன் பயணம் செய்யவும். போட்டி லாட்டரி மூலமாகத் திடீர் தன வரகவள் உண்டாகும்.சொத்து சம்பந்தமாகிய வழக்கு விசயங்களில் நல்ல முடிவுகள் ஏற்படும். மே2,3பிள்ளைகளால் எதிர் பாராத சிற்சில ஆதாயங்களை அடைய வாய்ப்பு உள்ளது.எதிர் பார்த்த பண உதவிகள் உறவினர்களால் கிடைக்கும். குல தெய்வ ஆலய வழிபாடு செய்து வருவதற்கான மயங்சிகளில் ஈடு படுவீர்கள். தீர்த்த யாத்திரைகளுக்காக நீண்ட தூரப் பிரயாணங்களை மேற் கொள்வீர்கள். புதிய கடன் வாங்கிப் பழைய கடன்களை அடைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.
இராசியான எண்:-3
இராசியான நிறம்:-மஞ்சள்
இராசியான திசை:-வடகிழக்கு
பரிகாரம்:-சிவ ஆலய வழிபாடு செய்து அன்ன தானம் செய்து வரவும்.
கடகம்
4.கடகம்:-கடகராசி அன்பர்களே ராகு நன்மை தரும் கிரகமாகும்..ஏப்ரல்27;,28சேர் மார்க்கெட், கணிதம்,எழுத்துத் துறை சார்ந்தவர்கள், அரசியல் வாதிகள், அரசு உயர் பதவிகள் வகிப்பவர்கள்,நெருப்பு சம்பந்தமான உணவு பொருட்களின் வியாபாரிகள்,நிலக்கரி மற்றும் விறகு பொன்ற எரி பொருள் வியாபாரிகள் ஆகியோர்கள் மிகவும் ஆதாயம் அடைவார்கள்.ஏப்ரல்29,30மே1,2வெளிநாடு சென்று வருவதற்கான புதிய முயற்சிகளில் சம்பந்தம் இல்லாத நபர்களால் சில ஆதாயங்கள் வந்து சேருவதற்கான வாய்ப்புக்கள் உள்ளது. குல தெய்வ ஆலயங்களைப் புதுப்பிதலுக்கான முயற்சிகளில் நற்பெயர் பெறுவீர்கள். ரேஸ்,லாட்டரி போன்ற சூதாட்ட சம்பந்தமான விசயங்களினால் பணம் கை விட்டுப் போக இருப்பதால் கூதட்டங்களைத் தவிர்ப்பது நல்லதாகும்.சம்பந்தம் இல்லாத அடுத்தவர்களின் பிரச்சனைகளில் தலையிட்டு மனக் கவலை அடையாதீர்கள்.
முன் கோபத்தை தவிர்த்து அண்டை அயலாருடன் கவனமாகப் பேசி; பழகுதல் நல்லது.குல தெய்வ வழிபாடு செய்து வருதலால் கிரக தோசங்கள் நீங்க வாய்ப்பு உள்ளது.மே3உறவினர்கள் மற்றும் சொந்த பந்தங்களால் ஆதரவு இல்லை. பண விசயங்களுக்கான நீண்ட தூரப் பயணங்களைச் சற்று தள்ளிப் போடுதல் நல்லது குல தெய்வ ஆலயங்களைத் திருத்தி கட்டப் போட்ட திட்டங்களில் சிறிய தடைகளின் பேரில் வெற்றி அடைவீர்கள். பொதுவாக இது ஒரு நற்பலன் தராத வாரமாகும்.
இராசியான எண்_1
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை:-கிழக்கு
பரிகாரம்:-சிவ ஆலய வழிபாடு செய்து அன்ன தானம் செய்த வரவும்.
சிம்மம்
5.சிம்மம்:-சிம்மராசி அன்பர்களே சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும்.ஏப்ரல்27,28தீராத நாட் பட்ட நோய்களுக்கு விடை காணுவீர்கள்.உற்றார்  உறவினர்களின் எதிர் பாராத திடீர் வரவுகளால் பொருட் செலவுகள் ஏற்பட்டாலும் அவர்களால் எதிர் பாராத சிற்சில ஆதாயங்களை அடைவீர்கள்.. வெளி நாடு செல்லுதல் போன்ற புதியமுயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.கண் காதுகளில் கவனமுடன்
 இருக்கவும். கூட்டுத் தொழில் முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள்.ஏப்ரல29,30பொருளாதார நெருக்கடிகள் மாறித் தேவையான பொருளாதாரம் வந்து சேரும்.உடம்பில் முதுகு மற்றும் வயிறு ஆகிய உபாதைகள் வந்து போகும்.விபரீதமான எண்ணங்களை விட்டொழித்து காரியத்தில் கவனமாய் இருங்கள். சொத்து சம்பந்தமாகிய வழக்கு விசயத்தில் சாதகமான நல்ல முடிவுகளை எதிர் பார்க்கலாம்.மே1,2,3ஆடம்பர அலங்காரப் பொருள் வியாபாரிகள்,இரும்பு இயந்திரம் எண்ணை சம்பந்தமான வியாபாரிகள்,பலசரக்கு தொழிற் செய்வோர்கள்,பழைய இரும்பு பொருட்கள் மற்றும் கழிவுப் பொருட்களின் வியாபாரிகள்,அலுவலகப் பணி உதவியாளர்
கள்,மிசினரி சம்பந்தமான உதிரிபாகங்களை ஏற்றுமதி இறக்குதி செய்வோர்கள்,பெட்ரோல்,
டீசல்,மண் எண்ணை போன்ற எரி பொருட்களின் வியாபாரிகள் ஆகியோர்கள் மிகவும் ஆதாயம் அடைவார்கள்.புதிய கடன்கள் வாங்கிப் பழையகடன்களை அடைப்பீர்கள்.தேவை
யற்ற நண்பர்களின் தொடர்புகளால் பிரச்சனைகள் வர இருப்பதால் கவனமுடன் பழகுதல் நல்லதாகும்..பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.
இராசியான எண்:-8
இராசியான நிறம்:-நீலம் 
இராசியான திசை:-தென்மேற்கு
பரிகாரம்:-ஐயப்பன் வழிபாடு செய்து வரவும்.
கன்னி
6.கன்னி:-கன்னிராசி அன்பர்களே செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும்.ஏப்ரல்27,28 திருமண தகவல் மையங்கள்,வாகனங்களில் பணியாற்றுவோர்கள்,அரசுத் துறையைச் சார்ந்த வழக்கறிஞர்கள்,நெருப்பு சம்பந்தமான ஹோட்டல் தொழிற் செய்வோர்கள், அரசுத் துறை சார்ந்த மந்திரி பதவி வகிப்போர்கள்,வெளி நாட்டுத் தூதுவர்கள்,ஜவுளி மற்றும் நூல் வியாபாரிகள் ஆகியோர்கள் மிகவும் நற்பலன் அடைவார்கள்.மூத்த சகோதரர்களால் பொருட் செலவுகள் மற்றும் மன நிம்மதிக் குறைவுகள் ஏற்படலாம்.. ஏப்ரல்29,30மே1உத்தியோகத் துறையினருக்கு பணி இட மாற்றமும் பதவி உயர்வுகளும் வரக் கூடும். பெண்கள் சம்பந்தமான காதல் விசயத்தில் எதிர் பார்த்து இருந்த நல்ல செய்திகள் வந்து சேரும் காலமாகும்.குல தெய்வ வழிபாட்டிற்காக
 துலை தூரப் பயணங்களை மேற் கொள்ள நேரும். நாட் பட்ட பழைய கடன்கள் மீண்டும் தொல்லை தர வாய்ப்பு உள்ளது. நீண்ட காலமாக புதிய கட்டிடம் கட்டப் போட்ட திட்டங்கள் நிறைவேறும்மே.2,3ரேஸ்லாட்டரி போன்றவற்றின் மூலம் திடீர் தனவரவுகள் உண்டாகும்.குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரிய நிகழச்சிகள் நடைபெற வாய்ப்பு உள்ளது. யாத்திரையின் போது புதிய பெரிய மனிதர்கள் சந்திப்பு உண்டாகி அவர்களால் காரியங்களைச் சாதித்து கொள்வீர்கள்.மற்றவர்களுக்காக ஜாமீன் போடுவதை தவிர்க்கவும்.பொதுவாக இது ஒரு சுமாரான நற் பலன் தரும் வாரமாகும்
இராசியான எண்:-1,2
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை:-கிழக்கு,மேற்கு
பரிகாரம்:-சிவன் மற்றும் அம்மன் வழிபாடு செய்து அன்னதானம் செய்து வரவும்.
துலாம்
7.துலாம்:-துலாம்ராசி அன்பர்களே வியாழன் நன்மை தரும் கிரகமாகும்.ஏப்ரல்27,28; அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் காரணமற்ற பிரச்சனைகள் வர இருப்பதால் மிகவும் எச்சரிக்கையுடன் பேசிப் பழகுதல் நல்லதாகும். விளையாட்டுத் துறைகளைச் சார்ந்தவர்களுக்குப் பரிசு மற்றும் பாராட்டுகள் கிடைக்கும்.சூதாட்டம் போன்ற காரியங்களில் தலையிட்டு பொருள் இழப்பு ஏற்பட இருப்பதால் சூதாட்டங்களைத் தவிர்தல் நல்லதாகும்.ஏப்ரல்29,30;மே1எதிர் பாராத நீண்ட தூரப் பயணங்களின் மூலம் மன நிறைவடைய வாய்ப்பு உள்ளது.திருட்டுப் போன பொருட்கள் நண்பர்களின் உதவியால் திரும்ப வீடு வந்து சேரும். புதிய பெரிய மனிதர்களையும் அரசியல் வாதிகளையும் 
சந்திக்க எடுத்துக் கொண்ட முயற்சிகள் வெற்றி அளிக்கும்.பொருளாதாரத்தில் இது நாள் வரையில் இருந்து வந்துள்ள நெருக்கடிகள் மாறிச் சற்று முன்னேற்றம் காணப்படும். மே2,3நெருப்புத்தொழில்,காவல் துறை,இராணுவம் சார்ந்தவர்கள், இணைய தளங்களை நடத்துபவர்கள்,மின்சாரத் துறையை சார்ந்தவர்கள், மின்சார சம்பந்தமான பொருட்களை விற்பனைகளைச் செய்வோர்கள் ஆகியோர்கள் நற் பலன்களை அடைவார்கள். வெகு தூரப் பயணங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் சென்று வருவது நல்லது.பூர்வீகச் சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனைகள் தீர்ந்து நல்ல சூழ் நிலைகள் காணப்படும்.
பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.
இராசியான எண்:-9
இராசியான நிறம்:-சிகப்ப
இராசியான திசை:-தெற்கு
பரிகாரம்:-முருகன் வழிபாடு செய்து வரவும்.
விருச்சிகம்
8.விருச்சிகம்:-விருச்சிகராசி அன்பர்களே சனி நன்மை தரும் கிரகமாகும்.ஏப்ரல்27,28புதிய வீடுகளை வாங்கப் போட்ட திட்டங்களுக்காக வங்கிகளில் எதிர் பார்த்திருந்த கடன் தொகைகள் கிடைக்கக் கூடிய காலமாகும்.நீண்ட நாட்களாக தடை பட்டு வந்த சகோதர சகோதரிகளின் திருமண காரியங்களில் வெற்றி அடைவீர்கள்.ஒரு சிலருக்கு புதிய வீடு மாற்றம் ஏற்படலாம். ஏப்ரல் உறவினர்களின் வரவால் பொருள் வரவும் மனச் சந்தோசமும் உண்டாகும். புதியகடன் வாங்குவதற்காக முயற்சிப்பீர்கள்.ஏப்ரல்29,30மே1 சுப காரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மன மகிழ்ச்சி அடைவீர்கள்.உத்தியோகத் துறையினர்களுக்கு பதவி உயர்வுகள் மற்றும் மேலதிகாரிகளின் ஆதரவுகள் நிரம்ப உண்டாகும்.விவசாயம் செய்வோர்களுக்கு நல்ல விளைச்சலும்,லாபமும் கிடைக்கும். தோல் சம்பந்தமான பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்வோர்கள், பழைய இரும்பு வியாபாரிகள்,சாயப் பவுடர் தொழிற் சாலைகளை நடத்துபவர்கள், விஞ்ஞானத் துறை சார்ந்தவர்கள்,ஆசிரம வாசிகள், கழிவுப் பொருள்களின் வியாபாரிகள்,கோர்ட்டுகளில் பணி செய்வோர்கள்,தரகு மற்றும் வட்டித் தொழிற் செய்வோர்கள்,மீன், முட்டை,மாமிசம் போன்ற உணவுப் பொருட்களின் வியாபாரிகள்,அணுஆராய்ச்சி செய்பவர்கள்ஆகியோர்கள் லாபம் அடைவார்கள்.மே2உடல் நிலையில் இருந்து வந்த நாட்பட்ட நோய்கள் நீங்கி மன நிம்மதி உண்டாகும். நண்பர்களால் ஆதாயம் இல்லை.பெண்கள் விசயத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நன்று.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.
இராசியான எண்:-4
இராசியான நிறம்:-கருப்பு
இராசியான திசை:-வடமேற்கு
புரிகாரம்:-அம்மன் மற்றும் பிதுர் வழிபாடு செய்து அன்ன தானம் செய்து வரவும்.
தனுசு
9.தநுசு:-தநுசுராசி அன்பர்களே வியாழன் நன்மை தரும் கிரகமாகும்.ஏப்ரல்27,28,29 குடும்பத்தில் தடை பட்டிருந்த சுபகாரிய நிகழ்ச்சிகள் நடக்கும். உடல் நிலையில் கண் காதுகளில் மிகவும் கவனமுடன் இருத்தல் நல்லதாகும்.விட்டுப் போன கணவன் மனைவி உறவுகள் மீண்டும் தொடர வாய்ப்பு உள்ளது. தண்ணீர்,
கூல்டிரிங்ஸ்,திரவ சம்பந்தமான பொருள் வியாபாரிகள்,பூஜைப் பொருள் வியாபாரிகள், மருந்து கம்பெனி நடத்துபவர்கள், மருத்துவ கல்லூரி மாணவர்கள், ஜவுளி, நூல் வியாபாரிகள், பூஜைப் பொருட்களின் வியாபாரிகள்,கப்பல் பணி செய்பவர்கள்,உப்பு உற வியாபாரிகள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள்.ஏப்ரல்30மே1தந்தை மகன் உறவுகளில் இருந்து வந்த மனக் கசப்புகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும்.பல காலமாகத் தீராத நோய்களுக்கு புதிய மருத்துவர்களின் உதவியால் நோய் நீங்கும். திடீர் அதிர்~;டம் மூலம் எதிர் பாராத தனவரவு உண்டாகும்.மகான்களின் நல்லாசிகளுக்காக நீண்ட தூரப் பயணங்களை மேற் கொள்வீர்கள். நண்பர்களால் எதிர் பார்த்த ஆதாயம் கிடைக்க இன்னும் சற்று கால தாமதம் ஆகலாம்.மே2புதிய தொழில் ஆரம்பம் செய்வதற்காக வங்கிகள் மூலம் நீண்ட காலமாக எதிர் பார்த்திருந்த கடன் தொகைகள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது.காதல் சம்பந்தமான விசயங்களில் பெண்களால் அவப் பெயர்கள் வரக் கூடும் என்பதால் எச்சரிக்கையுடன் பழகுதல் நல்லது. பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.
இராசியான எண்:-2
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை:-மேற்கு 
பரிகாரம்:-அம்மன் வழிபாடு செய்து அன்ன தானம் செய்து வரவும்.
மகரம்
10.மகரம்:-மகரராசி அன்பர்களே கேது நன்மை தரும் கிரகமாகும்..ஏப்ரல்27,28நெருப்பத் தொழிற் செய்வோர்கள்.கேஸ்,வெல்டிங் போன்ற வியாபாரிகள்,காவல் துறை,ராணுவம் சார்ந்தவர்கள், தீயணைப்பு துறையைச் சேர்ந்தவர்கள்,காரமான உணவுப் பொருள் வியாபாரிகள், நிலக்கரி வியாபாரம் செய்பவர்கள்,விறகு வியாபாரிகள்,மசால் பொடிகளை ஏற்றுமதி இறக்குமதி செய்வோர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவீர்கள். பொருளாதாரத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீர்ந்து நிம்மதி அடைவீர்கள்.ஏப்ரல்29;,30 உடல் நிலையில் வாயு மற்றும் வாதம் ஆகிய தொல்லைகள் வந்து போகும்.யாத்திரைகளில் மிகுந்த கவனமுடன் சென்று வருதல் நல்லதாகும்.திருமண 
விசயங்களுக்காக முயற்சி செய்யலாம்.பிள்ளைகளுக்கு எதிர் பார்த்து வந்த வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.கணவன் மனைவி உறவில் விரிசல்களும் வீண் மனக் குழப்பங்களும் வந்து போகும்.மே1,2,3நீண்ட நாட்களாக வராத பணம் திரும்பக் கை வந்து சேரக் கூடிய காலமாகும்.உறவினர்களால் வீண் பொருட் செலவுகள் உண்டாகும்.மற்றவர்களை நம்பிப் பணம் பொருள் கடன் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம். அநாதைகளுக்கு உதவுவதில் மன மகிழ்ச்சி அடைவீர்கள்.வெகு காலமாக நினைத்துக்கொண்டு இருந்த கூட்டுத் தொழில் முயற்சிகளைத் தொடங்கினால் மிகவும் நல்ல பலன்கள் கிடைக்கும். புதிதாக வீடு, வாகனம் மற்றும் நில புலன்கள் வாங்க வாய்ப்பு உள்ள காலமாகும்.
பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.
இராசியான எண்:-9
இராசியான நிறம்:-சிகப்பு
இராசியான திசை:-தெற்கு
பரிகாரம்:-முருகன் வழிபாடு செய்து அன்னதானம் செய்து வரவும்.
கும்பம்
11.கும்பம்:-கும்பராசி அன்பர்களே செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும்.ஏப்ரல்27,28 குடும்பச் சொத்துக்கள் போன்ற விசயத்தில் நல்ல தீர்ப்புகளை எதிர் பார்க்கலாம். உடம்பில் உ~;ணம்,சுரம் போன்ற உபாதைகள் வந்து போகும். தந்தை மகன் உறவில் சிறிய கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும்.உடம்பில் வாயு மற்றும் வயிறு ஆகிய உபாதைகள் வந்து போகும். குடும்பத்தில் தடை பட்டு வந்த சகோதர சகோதரிகளின் திருமணம் போன்ற சுப காரியங்கள் நிறைவேறும் வாய்ப்பு உள்ளது.ஏப்ரல்29,30 கொடுக்க வேண்டிய பழைய கடன்களைக் கொடுத்துப் பதிய கடன்களை வாங்கத் திட்டம் போடுவீர்கள் விவசாயம் செய்வோர்கள்,
 அரசியல் வாதிகள், கலைத் துறையினர்கள்,அணு ஆராய்ச்சித் துறையைச் சார்ந்தவர்கள்,கழிவுப் பொருள்களின் வியாபாரிகள்,அடிமைத் தொழிற் செய்வோர்கள்,மீன் முட்டை மாமிசம் போன்ற உணவுப் பொருட்களின் வியாபாரிகள்,துப்புரவுப் பணிகளைச் செய்பவர்கள் ஆகியோர்கள் நல்ல ஆதாயங்களை அடைவார்கள்.மே1,2,3அரசு சம்பந்தமான வழக்கு விசயங்களில் வெகு காலமாக எதிர் பார்த்து இருந்து வந்த நல்ல முடிவுகள் கிடைக்கும். பொது நலக் காரியங்களுக்காக மிகுந்த அக்கரையுடன் செயல் பட்டு நற் பெயர்,புகழ் எடுப்பீர்கள்.சேர்மார்க்கெட் மற்றும் தங்கம் வெள்ளி போன்ற நகை வியாபாரிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் வர்த்தகத்தில் ஈடு படுவது நல்லது..பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.
இராசியான எண்:-7
இராசியான நிறம்:-கருஞ்சிகப்பு
இராசியான திசை:-வடமேற்கு 
பரிகாரம்:-விநாயகர் வழிபாடு செய்து அன்ன தானம் செய்து வரவும்.
மீனம்
12.மீனம்:-மீனராசி அன்பர்களே சந்திரன் நன்மை தரும் கிரகமாகும்.ஏப்ரல்27,28,29 பூபழம், பூஜைப் பொருள் வியாபாரிகள்,இனிப்புத் தின்பண்ட வியாபாரிகள்,கம்யுட்டர் துறையை சார்ந்தவர்கள்,ஆலயப் பணி செய்வோர்கள், அற நிலையத் துறை சார்ந்தவர்கள்,அநாதை ஆசிரமங்களை நடத்துபவர்கள், மடாதிபதிகள், கல்லூரி பேராசிரியர்கள் ஆகியோர்கள் மிகவும் நற் பலன்களை அடைய வாய்ப்புகள் உள்ளது.ஏப்ரல்30மே1சொத்து சம்பந்தமாகிய வழக்கு விசயங்களில் எதிர் பார்த்த முடிவுகள் கிடைக்கச் சற்று கால தாமதம் ஆகலாம்.வீடு நிலம் வாங்குவது போன்ற முயற்சிகளில் அரசு சம்பந்தமாக எதிர் பார்த்து வந்த 
உதவித் தொகைகள் கிடைக்கும். கணவன் மனைவி உறவுகளில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி சுமூகமான சூழல் உருவாகும்.காதல் விசயத்தில் மிகுந்த கவனமுடன் இருத்தல் நல்லது. வங்கிகளால் எதிர் பார்த்து இருந்த கடன் தொகைகள் கிடைக்கும். சம்பந்தம் இல்லாத நபர்களால் எதிர் பாராத தன வரவுகள் உண்டாகும். வீட்டைத் திருத்திக் கட்டுவதில் மிகுந்த அக்கரையடன் திட்டம் போடுவீர்கள்.
மே2 யாத்திரையில் மிகுந்த கவனமுடன் பயணம் செய்து வருவது நல்லதாகும்.உற்றார் உறவினர்களின் வருகையால் பொருட் செலவுகள் உண்டாகலாம்.புதிய நண்பர்களின் சேர்க்கையால் செய்யாத குற்றங்களுக்காக காரணமற்ற வீண் பிரச்சனைகள் வந்து சேரும் என்பதால் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கவும்.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.
இராசியான எண்:-3
இராசியான நிறம்:-மஞ்சள்
இராசியான திசை:-வடகிழக்கு
புரிகாரம்:-சிவ வழிபாடு செய்யவும்...

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

மறைக்கப்படும் வேற்று கிரகவாசிகள்! (காணொளி இணைப்பு)

வேற்று கிரகவாசிகள் ஆயிரகணக்கான ஆண்டுகளாக நமது கிரகத்திற்கு வருவதாக கனடா நாட்டின் முன்னாள் பாதுகாப்பு துறை மந்திரி பால் ஹெல்யர் தெரிவித்துள்ளார். வேற்றுகிரக வாசிகள் தொடர்பான சந்தேகங்கள் நீடித்து வரும் நிலையில், இன்னும் 25 ஆண்டுகளில் நாம் அவர்களை நேரில் சந்திக்கலாம் என சேத் ஷோஸ்டாக் விஞ்ஞானி தெரிவித்துள்ளார். மேலும், வேற்று கிரக வாசிகள் நமக்கு அருகிலோ, வெகு தொலைவிலோ நம்மை போலவே ஒரு கூட்டம் உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறு இருக்கிறது என்றும், ஆனால் நம்மை போலவே இருப்பார்களா என்பது சந்தேகம் தான் எனவும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில் கனடா நாட்டின் முன்னாள் பாதுகாப்பு துறை மந்திரி பால் ஹெல்யர் கூறுகையில், உலக அரசுகள் வேற்று கிரகவாசிகளை ரகசிய மறைவிடத்தில் வைத்து கண்காணித்து வருகிறார்கள். வேற்று கிரகவாசிகளின் வாழ்க்கையை மனித இனத்திடம் இருந்து மறைக்கிறார்கள். குறைந்தது 4 வகையான வேற்று கிரகவாசிகள் மற்றும் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத பறக்கும் பொருள் பூமிக்கு வந்து இருக்கலாம். பல செய்தி ஊடகங்கள் இந்த விடயங்களை தொடுவது இல்லை. சிலர் வெகுஜன பார்வை கிடைக்கும் என நம்பும் செய்திகளையே தேடுகிறார்கள். மிஸ்டர் ஜனாதிபதி, மிஸ்டர் பிரதமர் எங்களுக்கு உண்மை வேண்டும். நமக்கு இப்போது அது தேவை ஏனெனில் அது நமது வாழ்க்கையை பாதிக்கும் என்று கூறியுள்ளார். வேடிக்கையான இந்த கூற்றுகள் குறித்து ஹெல்யர் கேள்வி எழுப்புவது இது முதன்முறையல்ல. இவர் 2005 ஆம் ஆண்டு முதலே வேற்று கிரகவாசிகள் குறித்து பேச ஆரம்பித்தார். பால் ஹெல்யர் (91), கனடா நாட்டின் முன்னாள் பாதுகாப்பு துறை மந்திரியாக 1963 ஆம் ஆண்டு முதல் 1967 ஆம் ஆண்டு வரை இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
  இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வெள்ளி, 24 ஏப்ரல், 2015

வெடிமருந்துடன் நீர்வேலி பகுதியில் இருவர் கைது

யாழ். நீர்வேலி பகுதியில் தடை செய்யப்பட்ட இறப்பர் வெடிமருந்துகளை வைத்திருந்த இரண்டு சந்தேகநபர்களை கைது செய்ததாக அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இன்று தெரிவித்தார்.
சந்தேகநபர்களிடமிருந்து 9 கிலோ 416 கிராம் இறப்பர் வெடிமருந்து கைப்பற்றப்பட்டது.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து அப்பகுதிக்கு சென்ற பொலிஸார், கூலித் தொழிலாளியாக பணிபுரியும் சந்தேகநபர்கள் இருவரையும் கைது செய்ததுடன், நான்கு பைகளில் இருந்த வெடிமருந்துகளையும் கைபற்றியதாக பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 22 ஏப்ரல், 2015

சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம்: இளையன் சிறை !!!!

 யாழ்.சிறுப்பிட்டிப் பகுதியில் வீட்டில் தனித்திருந்த சிறுமியைத் துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுக் கைதான சந்தேகநபரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் பெண்கள், சிறுவர் நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமார் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (19.04.2015) உத்தரவிட்டார்.
கடந்த சனிக்கிழமை வீட்டில் யாருமில்லாத சமயம் வீட்டில் தனித்திருந்த சிறுமியை இளைஞரொருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தினார்.
இது குறித்துச் சிறுமியின் பெற்றோர் அச்சுவேலிப் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகத்தின் பேரில் அப்பகுதியைச் சேர்ந்த 22 வயதான இளைஞர் ஒருவரைக் கைது செய்து பொலிஸார் விசாரணை நடாத்தினர்.
குறித்த இளைஞரை நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை சட்ட வைத்திய அதிகாரியிடம் அழைத்துச் சென்று மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்திய பொலிஸார் அதே தினத்தில் சிறுவர் பெண்கள் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இதன் போதே குறித்த இளைஞரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

திங்கள், 20 ஏப்ரல், 2015

இயந்திரத்தில் திடீர் தீ: பல லட்சம் ரூபாய் சாம்பல்!

ஜெய்ப்பூர் : ராஜஸ்தானில் ஏ.டி.எம். இயந்திரத்தில் தீப்பிடித்ததில், அதில் இருந்த பல லட்ச ரூபாய் எரிந்து நாசமானது.
ராஜஸ்தான் மாநில தலைநகரான ஜெய்ப்பூரில் சன்ட்போல் பகுதியில் பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் ஒன்று உள்ளது. இன்று காலை சுமார் 10.30 மணியளவில் இந்த ஏ.டி.எம். மையத்தில் திடீரென தீப்பிடித்தது.
அக்கம்பக்கத்தார் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்தனர். ஆனால், அதற்குள்ளாக ஏ.எடி.எம். இயந்திரம் அதிலிருந்த பணத்தோடு முழுவதும் தீக்கிரையானது.
மின்கசிவு காரணமாக இந்த விபத்து 
நிகழ்ந்திருக்கலாம் என வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தீவிபத்தில் எரிந்து போன பணத்தின் அளவு குறித்து வங்கி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சனி, 28 மார்ச், 2015

யாராலும் இதுவரை வாசிக்க முடியாத மர்ம புத்தகம் ???

 மர்ம புத்தகம் Voynich..!! வாய்னிச் கைப்பிரதி என்னும் புத்தகத்தைப் பற்றி கேள்விப் பட்டிருக்கின்றீர்களா?வாய்னிச் கைப்பிரதி என்னும் புத்தகம் அச்சடிக்கப்படாத இன்னும் யாராலும் விளக்கம் சொல்ல முடியாத வரி வடிவங்களாலும் படங்களாலும் கையால் எழுதப்பட்டுள்ளது.இது எப்போது எழுதப்பட்டது
என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.கதிரியக்க கார்பன் தேதியாக்க முறைமூலமாக இது எழுதப்பட்ட காலம் 15ம் நூற்றாண்டுக்கு முற்பட்டது என்று அறியப்பட்டுள்ளது.
இது இத்தாலி மறுமலர்ச்சி காலத்தில் வடக்கு இத்தாலியில் எழுதப்பட்டது என்று அரியப்படுகின்றது.புத்தகப் பதிப்புரிமையாளர் ஒருவர் 1912 ம் ஆண்டு வில்பிரடு வாய்னிச் என்பவர் இந்தக் கைப்பிரதி புத்தகத்தை வாங்கினார்.இதில் காணமால் போன அல்லது தவறிப் போன பக்கங்களைத் தவிர 240 பக்கங்கள் இந்தக் கைப்பிரதியில் மீதம் இருக்கின்றது.
இதில் உள்ள எழுத்துக்கள் இடமிருந்து வலமாக எழுதப்பட்டு உள்ளது. பெரும்பாண்மையான பக்கங்களில் ஏதாவது ஒன்றை விளக்கும் வகையில் உள்ளது அல்லது படங்கள் இருக்கின்றது .பெரும் பாண்மையான மக்கள் இதனைப் பார்த்துவிட்டு இதில் உள்ள புரியாத எழுத்துக்களும் படங்களும் முட்டாள்தனமானது என்று கூறுகின்றார்கள்.
2013 ம் ஆண்டு மான்செஸ்டர் பலகலைக் கழகத்தைச் சேர்ந்த சொற்பொருள் ஆய்வாளர்கள் இதனை பேப்பரில் பதிப்பித்தும் இதில் கண்டுள்ள விசயங்கள் சங்கேதக் குறியில் எழுதப்பட்டுள்ள விசயங்கள் என்று கூறுகின்றார்கள்.
சில ஆராய்ச்சியாளர்கள் இது முழுக்க 
முழுக்க எந்த ஒரு விசயத்தையோ செய்தியையோ வெளிப்படுத்துவதற்காக வெளியிடப்படவில்லை என்று கூறுகின்றார்கள்.ஆனால் இது ஏதோ ஒரு அர்த்தத்துடன் வெளியிடப்பட்ட ஆராய்ச்சிக் குறிப்புகளாக இருக்கலாம் எனபது ஒருசாராரின் கருத்து.ஆனால் எப்படியோ நமக்கும் இது புரிந்த மாட்டில் இல்லை.இந்தப் புத்தகம் கூறும் மர்மம் 
விளக்கப்பட முடியுமா ?
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



வியாழன், 22 ஜனவரி, 2015

குழந்தையை மாடியில் இருந்து வீசி கொலை செய்த இளம்பெண்!!

தகாத உறவால் பிறந்த குழந்தையை 6–வது மாடியில் இருந்து தூக்கி வீசி கொலை செய்த இளம்பெண் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பிறந்த குழந்தை 
மும்பை வெர்சோவா ஜே.பி. ரோடு பகுதியில் அட்லாண்டா என்ற 6 மாடி கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த கட்டிடத்தின் கீழே உள்ள நீச்சல் குளத்தின் அருகே பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தை ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது. இது குறித்து தகவல் அறிந்த வெர்சோவா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அந்த கட்டிடத்தின் அருகே உள்ள மருத்துவமனையில் விசாரணை நடத்தினர். இதில் கடந்த 4 நாட்களாக எந்தவொரு பெண்ணிற்கும் பிரசவம் ஆகவில்லை எனதெரியவந்தது.
தகாத உறவு 
இதையடுத்து அட்லாண்டா கட்டிடத்தில் குடியிருப்பவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அந்த கட்டிடத்தின் 6–வது மாடியில் வசிக்கும் 20 வயது இளம்பெண் நிறைமாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று பார்த்தபோது, அந்த இளம்பெண் ஆடையில் ரத்தக்கரையுடன் சோர்வடைந்த நிலையில் மயங்கி கிடந்தார். உடனே போலீசார் அந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த வீட்டின் உரிமையாளர் வெளியூரில் இருப்பதால் வீட்டின் பாதுகாப்புக்காக அந்த இளம்பெண் கடந்த 6 மாதங்களாக அங்கு தங்கியிருந்துள்ளார்.
குழந்தை கொலை 
திருமணமாகாத அந்த இளம்பெண் தகாத உறவால் கர்ப்பம் அடைந்துள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து அவர் பிறந்த குழந்தையை யாருக்கும் தெரியாமல் 6–வது மாடியில் உள்ள கழிவறை ஜன்னலில் இருந்து தூக்கி வெளியே வீசி கொலை செய்தது தெரியவந்துள்ளது.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, மருத்துவமனையில் சிகிச்சை பெறும் இளம்பெண் இயல்பு நிலைக்கு திரும்பியவுடன் அவரிடம் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 19 நவம்பர், 2014

நவக்கிரி புத்தூர் கிணற்றிலிருந்து பெண்ணொருவர் சடலம் மீட்பு

யாழ். நவக்கிரிபுத்தூர்ரயை சேர்ந்த பெண்ணொருவர் 17.11.14. ஞாயிற்றுக்கிழமை இரவு அதே பகுதியிலுள்ள வயல் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அதே இடத்தை சேர்ந்த சேர்ந்த சின்னையா மகாதேவி (வயது 64) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார். கணவனை இழந்த மேற்படி பெண் சகோதரர் ஒருவருடன் வசித்து வந்திருந்த நிலையிலேயே காணாமல் போயுள்ளார். இந்நிலையில், வயல் கிணறு ஒன்றில் பெண்ணொருவரின் சடலம் மிதப்பதாக அப்பகுதி மக்கள் தகவல் வழங்கியதையடுத்து சடலம் மீட்கப்பட்டு, யாழ். போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஞாயிறு, 19 அக்டோபர், 2014

அம்மன் கோவிலில் துப்பாக்கியுடன் சென்ற குழுவினரால் கொள்ளை!

குருநாகல் மாவத்தகம பகுதியிலுள்ள அம்மன் கோவிலில் துப்பாக்கியுடன் சென்ற குழுவினரால் ஆலயத்திலுள்ள பணம் உள்ளிட்ட தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
வெள்ளை நிற கார் ஒன்றில் நேற்று  மாலை 3.45 அளவில் வருகை தந்த சிலரே ஆலயத்தில் கொள்ளையிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.
மாவத்தகம  பரந்தன வீதியிலுள்ள அம்மன் கோவிலிலே பெறுமதியான தங்க நகைகளும் பல இலட்சம் ரூபா பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
எனினும் கொள்ளையிடப்பட்டுள்ள பணம் மற்றும் தங்க நகைகளின் மொத்த பெருமதி இதுவரை கணிப்பிடவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
சந்தேகநபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் மாவத்தகம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வியாழன், 16 அக்டோபர், 2014

, பொலிஸ் நிலையம் முன்பு திரண்ட மக்கள் !

கல்முனை பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் பொலிஸ்
உத்தியோகஸ்தர் பெண்ணொருவருடன் தகாத முறையில் நடந்து கொண்டதாக அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்
நேற்று மாலை கல்முனை சிறீ முருகன் கோயிலில் பொலிஸ் உத்தியோகஸ்தர், பெண்ணொருவருடன் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் அதனை அறிந்த பொதுமக்கள் அவ்விடத்திற்கு விரைந்து இருவரையும் நேரடியாக பிடித்துள்ளனர். அதன்பின்னர்
பொதுமக்களிடம் தாங்கள் இருவரும் காதலர்கள் என தெரிவித்துள்ளனர்.அங்கு வந்த  பொலிஸார்  அங்கு நடைபெற்ற சம்பவத்தை விசாரிக்காமல் ஆலய பிரதம குருவையும்
 இரண்டு இளைஞர்களையும் வலாத்காரமாக பிடித்து பொலிஸ் வண்டியில் ஏற்றிச் சென்றுள்ளனர்
 இந்த சம்பவத்தால் கல்முனை மக்கள் பொலிஸ் நிலையம் முன்பு திரண்டு  சம்மந்தப்பட்டவர்களை  கைது செய்யும்படியும்  அப்பாவிகளை விடுமாறு கோசம் எழுப்பினர்அப்பகுதியில் கட்டுக்கோப்பிற்கு  கொண்டுவரும் பொருட்டு கைது செய்தவர்களை விடுவித்துள்ளனர்

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 15 அக்டோபர், 2014

தேயிலை தொழிற்சாலையில் தீ விபத்து

பலாங்கொடை வெலேகொட பகுதியிலுள்ள தேயிலை தொழிற்சாலை இன்று அதிகாலை பரவிய தீயினால் முற்றாக சேதமடைந்துள்ளது.
இன்று அதிகாலை மூன்று மணியளவில் தீ பரவியமை தொடர்பான தகவல் கிடைத்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தீயினால் தொழிற்சாலை முற்றாக சேதமடைந்துள்ள போலும் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பலாங்கொடை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் >>>

சனி, 5 ஏப்ரல், 2014

அமரர் திரு நடராசா அற்புதராசா


அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்

        தோற்றம் : 17 ஒக்ரோபர் 1957 — மறைவு : 8 மார்ச் 2014
  அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும், நவக்கிரியை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திரு நடராசா அற்புதராசாஅவர்களின் அந்தியேட்டி அழைப்பிதழ் எதிர்வரும்.0.....திங்கட்கிழமை


விழிநீர் அஞ்சலி அமரர் திரு நடராசா அற்புதராசா.

நன்றி நவிவிலல்

 மலர்வு.17 ஒக்ரோபர் 1957.,,உதிர்வு.08 மார்ச் 2014.
                                        
    அமரர் திரு நடராசா அற்புதராசா.
 தோற்றமும்.மறைவும் இயற்கை வகுத்த நியதி என்றாலும்
இன்பமும்துன்பமும் வாவின்மேடயில் அரங்கேறும்நாடகமானாலும்பார்த்த்துப்பழகியகண்களும்பேசிப்பழகியவாயும்
கேட்டு மகிழ்ந்தகாதுகளும்நினவுகள்பதித்தநென்சமும்அய்யகோ
அன்னாரின் பிரிவுத்துயரால் தவிக்கிறதே குடும்பம்!
 காலமே விரைந்துவந்து இவர்களுக்குஅறுதல்தராயோ!!
ஓம்சாந்தி!சாந்தி!!சாந்தி!!!அன்னாரின்பிரிவால் துயரும்!!அன்பு மனைவி பிள்ளைகள்அன்பு உறவுகள்!!!
அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்
 

செவ்வாய், 25 மார்ச், 2014

பிறந்தநாள் வாழ்த்து. செல்வி சாருகா (25 -03 -2014)

நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும் பால முரளி தம்பதிகளின் செல்வப்புதல்வி சாருகா தனது 12வது
 பிறந்த தினத்தை தனது இல்லத்தில் வெகு விமர்சையாக இன்று (25 -03 -2014)  கொண்டாடுகிறார்.
இவரை அன்பு அப்பா அம்மா அண்ணா மார் அக்காமார் அப்பம்மா அம்மம்மா மருமகள் பெறாமகள் மற்றும் பெரியப்பா பெரியம்மா மார் மாமா மாமி மார்
 மச்சான் மச்சாள் மார் அத்தான் அண்ணி மற்றும் உறவினர்கள் பல் கலைகளும் பெற்று
 பல்லாண்டு காலம் வாழ்க வென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இனைந்து http://lovithan.blogspot.ch
நவற்கிரி இணையங்களும் நிலாவவரை இணையங்களும்  உறவு இணையங்களும் வாழ்த்துகின்றன,.


புதன், 19 மார்ச், 2014

குறை நிறைகளை தெரிவிக்க அபிப்பிராய பெட்டிகள்

 
வவுனியா வைத்தியசாலையில் உள்ள குறை நிறைகளை நோயாளர்கள் அறிவிப்பதற்காக அபிப்பிராய பெட்டிகள் பொருத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் அத்தியட்சகர் கு. அகிலேந்திரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,
வவுனியா வைத்தியசாலையின் தரத்தினை மேம்படுத்தும் நோக்கோடு நோயாளர்களின் கருத்தக்கள் உள்வாங்கப்படவேண்டிய தேவையுள்ளது.
எமது வைத்தியசாலையில் நோயாளர்களின் அபிப்பிராயங்களை கேட்பதனூடாக எமது வைத்தியசேவையை இன்னுமோர் தரத்திற்கு முன்னோக்கி நகர்த்த முடியும் என கருதப்பட்டதன் காரணமாக நாம் வைத்தியசாலையில் 12 அபிப்பிராய பெட்டிகளை பொருத்தியுள்ளோம்.
இவ்வாறான பெட்டிகள் சிகிச்சை நிலையங்கள் மற்றும் விடுத்திகள் வைத்தியசாலையின் வாயில் பகுதி என்பன வற்றில் பொருத்தப்பட்டுள்ளது.
எனவே பொது மக்கள் மற்றுமு; நோயாளர்கள் தாம் வைத்தியசாலையில் எதிர்நொக்கும் பிரச்சனைகள் மற்றும் தமக்கு திருப்திகரமான சேவை என்பனவற்றின் கருத்துக்களை இப் பெட்டியினுள் இடமுடியும்.
அத்துடன் நோயாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் உத்தியோகத்தர்கள் தொடர்பிலும் சேவையை வழங்க மறுப்பவர்கள் தொடர்பிலும் ஆலோசனைகளை வழங்க முடியும். அத்துடன் வதை;தியசாலையின் மேம்பாட்டுக்கான ஆலோசனைகளையும் தெரிவிக்க வேண்டும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.
அத்துடன் இப் பெட்டிகள் அனைத்தும் மூன்று நாட்களுக்கு ஒரு முறை நேரடியாக எனக்கு முன்னால் திறக்கப்பட்டு என்னால் பரிசீலிக்கப்படும் என்பதனால் உடனடி தீர்வுகளையும் வழங்க தீர்மானித்துள்ளதாகவும் வைத்தியசாலையின் அத்தியட்சகர் தெரிவித்தார்.


புதன், 12 பிப்ரவரி, 2014

நாஜி கால ஓவியங்கள் கண்டுபிடிப்பு !

 ஜேர்மனியில் நாஜி கால கலைப்படைப்புகளில் 60 ஓவியங்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஜேர்மனியில் ஹிட்லரின் ஆட்சி நடைபெற்று வந்த போது, 1930- 40 ஆண்டு காலகட்டத்தில் ஹில்டிபிரான்ட் குர்லிட் என்பவர் கலைப்படைப்புகளை விற்பனை செய்து வந்தார்.
அப்போது அரசு அதிகாரிகள், யூதர்களிடமிருந்து திருடிய மற்றும் சிதைந்ததாக கருதிய ஓவியங்களை இவரிடம் விற்பனைக்கு கொடுத்துள்ளனர்.

ஆனால் காலப்போக்கில் விற்பனையாகாமல் இவரிடமே இருந்த இவ்வோவியங்கள் தற்போது இவரது மகன் கோர்னிலியஸ் குர்லிட் வசித்துவரும் மியூனிச் வீட்டில் இருப்பது கலைப்பொருள் முதலீட்டாளர்களின் கவனத்திற்கு வந்தது.

இதனைதொடர்ந்து ஆஸ்திரியாவின் சால்ஸ்பர்க் வீட்டில் பிக்காசோ, ரெனோயர், மோனெட் போன்ற பழம்பெரும் ஓவியர்களின் 60 கலைப்படைப்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கோர்னிலியசின் தகவல் தொடர்பாளர் ஸ்டீபன் ஹோல்சிங்கர் தெரிவித்துள்ளார்.

இது யூதர்களிடமிருந்து திருடப்பட்ட கலைப்பொருட்களா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வாறு திருடப்பட்டதாய் இருந்தால் உரியவர்களிடம் கலைப்பொருட்கள் திருப்பி கொடுக்கப்படும் என ஜேர்மனி அரசு குறிப்பிட்டுள்ளது.
                           

ஞாயிறு, 2 பிப்ரவரி, 2014

100 அடி உயரம் வரை பறக்கும் காணொளி


சில வகை பாம்புகளால் 100 அடி உயரம் வரை பறக்க முடியும் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.ஆசிய காடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி பாம்புகள் தமது   தட்டையாக்கிக் கொண்டும் உடலை நீட்டிக்கொண்டும் பறக்கும் தன்மையைப் பெறுவதாக கண்டறியப்பட்டுள்ளது. சில பாம்புகள் 100 அடி உயரமான மரங்களிலிருந்தும் தாவுவதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவின் வேர்ஜீனியா டெக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கலாநிதி ஜெக் சோச்சா தலைமையிலான குழுவினர் பாம்புகளால் எவ்வாறு பறக்க முடிகிறது என்பது தொடர்பான ஆய்வை மேற்கொண்டனர். மும்பரிமாண (3டி) அச்சிடல் முறையில் உருவாக்கப்பட்ட பாம்புகளின் தன்மையைக்கொண்ட உருளைகளை வைத்து பல ஆய்வுகளை இவர்கள் மேற்கொண்டனர். தட்டையான உடலமைப்புடன் சில கோணங்களில் இருக்கும்போது பாம்புகள் காற்றில் மிதக்கும் ஆற்றலைப் பெறுகின்றன என இக்குழுவினர் கூறுகின்றனர்.

வியாழன், 26 டிசம்பர், 2013

ஆயிரம் மக்கள் பலியெடுக்கப்பட்ட மெரீனா!!!

கடற்கரையில் சுனாமி நினைவு தினம் அனுஷ்டிப்பு
தமிழகத்தில் கடலோர கிராமங்களில் பெருவாரியாக வசிக்கும் கிறிஸ்தவ மக்கள் 2004–ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25–ம் திகதி கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடிய களைப்பில் 26–ம் திகதி அதிகாலையில் நல்ல தூக்கத்தில் இருந்தனர்.

அப்போது கடலில் உருவான சுனாமி பேரலைகள் ஆக்ரோஷமாக ஊருக்குள் புகுந்தது.
அயர்ந்த தூக்கத்தில் இருந்த மக்களை அப்படியே வாரி சுருட்டி கடலுக்கு கொண்டு சென்றது.
நாகப்பட்டினம், கடலூர், வேளாங்கண்ணி தொடங்கி குமரி மாவட்டத்தின் கன்னியாகுமரி, மணக்குடி, கொட்டில்பாடு, குளச்சல் என பல மீனவ கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சில நிமிடங்களிலேயே மாண்டு போனார்கள்.



10 நிமிடங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை காவு வாங்கியது சுனாமி. இயற்கையின் சீற்றம் ஏற்பட்டு இன்றோடு 9 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன.

இதை முன்னிட்டு, சென்னை மெரினாவில் சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

திங்கள், 21 அக்டோபர், 2013

இரும்புக்கடையில் வெடிப்பு : ஒருவர் படுகாயம்


மாதம்பை சுதுவெல்ல பகுதியிலுள்ள இரும்புக்கடையொன்றில் இன்று திடீரென இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பழைய இரும்புப் பொருளொன்றை வெட்டும் போது இவ்வனர்த்தம் பதிவானதாகவும் ஆட்லெறிக்கு பயன்படுத்தப்படும் ஒரு வகை ரவைகள் சில வெடித்ததிலேயே குறித்த வெடிப்புச்சம்பவம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த வெடிப்புச் சம்பவம் பதிவான இடத்துக்கு அருகில் இரும்பு - உருக்கு தொழிற்சாலையொன்றும் உள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை மாதம்பை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சனி, 19 அக்டோபர், 2013

புகைத்தலினால் நாளாந்தம் 60 பேர் உயிரிழக்கின்றனர்:


 புகைத்தலுடன் தொடர்புபட்ட சுகாதார பிரச்சினைகளினால் தினமும் ஏறக்குறைய 60 பேர் உயிரிழப்பதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

தொற்றா நோய்கள் பலவற்றின் முக்கிய காரணியாக விளங்குவது புகைப்பிடித்தல் செயற்பாடாகும். புகைப்பிடித்தலுடன் சம்பந்தப்பட்ட சுகாதாரப் பிரச்சினைகளினால் தினமும் ஏறக்குறைய 60 பேர் மரணிப்பதுடன் வருடமொன்றுக்கு 20 ஆயிரம் பேர் வரை உயிர் துறக்கின்றனர்.
புகைத்தலினால் ஏற்படும் பாதிப்புகளின் தன்மைகளை மாணவர்கள்

நேரடியாக காண்பதற்காக மஹரகம புற்று நோய் வைத்தியசாலையை பார்வையிட அனுமதிக்க வேண்டும். மேலும், கொழும்புக்கு சுற்றுலாவை மேற்கொள்ளும் சிரேஷ்ட தர வகுப்பு மாணவர்களை அங்கொடை தேசிய உளச் சுகாதார நிறுவனத்திற்கும் மஹரகம புற்று நோய் வைத்தியசாலைக்கும் அழைத்துச் செல்ல வேண்டும்.

மஹரகம புற்று நோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் புற்று நோயாளர்களில் அதிகமானோர் 35 வயதுக்கும் 45 வயதுக்குமிடைப்பட்டவர்கள். இவர்களில் அதிகமானோர் தீவிர புகைப்பிடித்தல் பழக்கமுடையவர்களாக காணப்படுகின்றனர்.

வாய் மற்றும் நுரையீரல் புற்று நோய்ச்சிகிச்சைக்காக அரசாங்கம் வருடமொன்றுக்கு 15 மில்லியன் ரூபாவை செலவு செய்கிறது. புகைத்தலால் பாதிக்கப்படுவோரை மருந்துகளினால் பாதுகாக்க முடியாது. ஒரு புற்றுநோயாளருக்கு ஊசி ஏற்றுவதற்காக 3 இலட்சம் ரூபா செலவிடப்படுகிறது. இருந்தும் புற்று நோயாளர்களை மருந்துகளினால் காப்பாற்ற முடியாமல் இருக்கிறது என்றார்.

புதன், 16 அக்டோபர், 2013

இணையத் தொடர்பு சேவைகள் மூலம் தகவல் திரட்டும் அமெரிக்க !


 
யாஹூ, ஜீமெயில், பேஸ்புக், ஹாட் மெயில் போன்ற இணையத்தள சேவைகள் மூலம் லட்சக்கணக்கானவர்களின் தொடர்புகளை அமெரிக்க உளவுப்பிரிவுகளில் ஒன்றான தேசிய பாதுகாப்பு அமைப்பு (என்எஸ்ஏ) சேகரித்து வைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனினும், இதுகுறித்து என்எஸ்ஏ அமைப்பு செய்தி தொடர்பாளர் கூறுகையில், சாதாரண அமெரிக்கர்களின் விவரங்களை சேகரிப்பது எங்கள் நோக்கம் இல்லை. பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்களை மட்டும்தான் நாங்கள் கண்காணிக்கிறோம். குறிப்பிட்ட முகவரிகளை மட்டுமே நாங்கள் கையகப்படுத்தி, தகவல்களை சேகரித்து வருகிறோம் என்று தெரிவித்தார்.
   
அமெரிக்காவில் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் தொடர்ந்து இருந்து கொண்டே வருகிறது. இதைத் தடுக்க அமெரிக்க அரசின் கீழ், பல உளவுப் பிரிவு அமைப்புகள் இயங்கி வருகின்றன. பயங்கரவாதிகளின் செயல்பாடுகள் மற்றும் ஊடுருவல்களை இந்த அமைப்புகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன. இந்நிலையில் என்எஸ்ஏ, இணையதள சேவைகள் மூலம்

அமெரிக்கர்கள் உள்பட லட்சக்கணக்கானவர்களின் விவரங்களை சேகரித்து வைத்துள்ளதாக அமெரிக்காவின் "வாஷிங்டன் போஸ்ட்' செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
யாஹூ, ஜீமெயில், பேஸ்புக், ஹாட் மெயில் போன்ற இணையத்தள சேவைகள் மூலம் அனுப்பப்படும் தகவல்களை கொண்டு

 லட்சக்கணக்கான அமெரிக்க மக்களின் விவரங்களை என்எஸ்ஏ சேகரித்து வைத்துள்ளது. இதுபோல் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்களின் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.அமெரிக்க உளவுப் பிரிவுகளின்

செயல்பாடுகளை உலகத்துக்கு வெளிச்சம் போட்டு காட்டிய ஸ்னோடென் வெளியிட்ட ஆவணங்கள் மூலம் இதுகுறித்து தெரியவந்துள்ளது.
அவ்வாறு சேகரித்த மக்களின் விவரங்களை கொண்டு சர்வதேச அளவில் ஏதேனும் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதா என்பதை

என்எஸ்ஏ அமைப்பு ஆய்வு செய்து வருகிறது. கடந்த ஆண்டு 4,40,000க்கும் அதிகமான இ-மெயில் தொடர்புகளை என்எஸ்ஏ சேகரித்துள்ளது. இதுபோன்ற செயல்பாடுகளை பல்வேறு நாடுகளின் ஒத்துழைப்புடன் என்எஸ்ஏ செய்து வருவதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

திங்கள், 14 அக்டோபர், 2013

யானையிடமிருந்து தப்பியவர் முதலையிடம் சிக்கி


மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்தில் யானைக்கும் மனிதனுக்குமிடையிலான மோதலில் தன்னை பாதுகாப்பதற்காக ஆற்றில் குதித்த விவசாயியொருவர் முதலையிடம் சிக்கி படுகாயமடைந்துள்ளார்..
போருக்கு பின்னர் மீள்குடியேற்ற கிராமமான உறுகாமம் கிராமத்தில் நேற்று இந்த பரிதாபகரமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதே கிராமத்தில் சம்பவத்திற்கு முதல்நாள் சனிக்கிழமை யானைக்கும் மனிதனுக்குமிடையிலான மோதலில் 12வயது டைய் ஜெமில் தஸ்லிம் என்ற மாணவன்; யானையின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளான்.

தமது கிராமத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மழை வேண்டி பிரார்;த்தனை நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இந்த மாணவன் சென்றிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது..

குறித்த சம்பவம் இடம்பெற்று 24 மணி நேரத்திற்குள் யானைக்கும் மனிதனுக்குமிடையிலான மற்றுமோர் மோதலில் தப்பி முதலையின் பிடியில் சிக்கி காயமடைந்த விவசாயி 27வயதான பி. செல்வக்குமார்

தற்போது மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
தனது கால்நடை பண்ணையில் பால் கறப்பதற்காக சென்றவேளை எதிர்கொண்ட யானையால் துரத்தப்படடு ஆற்றில் பாய்ந்ததாக இந்த சம்பவம் தொடர்பாக கூறப்படுகின்றது.

காட்டு யானைகளின் தொல்லை தற்போது இரவில் மட்டுமல்ல பகலிலும் அதிகரித்து வருவதாவே உறுகாமம் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
தமது கிராமத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்ற இந்த சம்பவங்களையடுத்து சில குடும்பங்கள் தற்போது வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளதாகவும்

வனஜீவராசிகள் தினைக்களத்திற்கு அறிவிக்கும் போது வருகை தந்து யானைகளை காடுகளுக்குள் விரட்டினாலும் பழக்கப்பட்ட யானைகள் போன்று அவை மீண்டும் அதேயிடங்களுக்கு வருவதாகவும் உள்ளுர் மக்களால் சுட்டிக்காட்டப்படுகின்றது.

அதேவேளை செங்கலடி- பதுளை நெடுஞ்சாலையை அண்மித்த காடுகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பகல் முழுவதும் காணப்பட்ட யானைக் கூட்டமொன்று வனஜீவராசிகள் தினைக்கள அதிகாரிகளினாலும் காவல் துறையினராலும் பகல் முழுவதும் கண்காணிக்கப்பட்டு மாலையில் சத்த வெடிகள் மூலம் காடுகளுக்குள் விரட்டப்பட்டன.

ஞாயிறு, 13 அக்டோபர், 2013

மாலியில் படகு விபத்து: 20 பேர் பலி - 200 பேர் மாயம்


மத்திய மாலியில் சுமார் 400 பயணிகளுடன் சென்ற படகு ஆற்றில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் 20 பேர் பலியாகினர்.

மாலியில் உள்ள கொன்னா என்ற இடத்தில் இருந்து சுமார் 400 பயணிகளை ஏற்றிக்கொண்டு திம்புக்டு நகரை நோக்கி நைஜர் ஆற்றில் சென்ற படகு திடீரென்று நீரில் மூழ்கியது. படகில் பயணித்த பலருக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி மூச்சு திணறி தத்தளித்தனர்.

விபத்து பற்றி தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்பு படையினர் 210 பேரை உயிருடன் மீட்டனர். மிதந்து வந்த 20 பிரதேங்களையும் கைப்பற்றினர். காணாமல் போன மேலும் 200 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பாலைவன பிரதேசமான வடக்கு மாலியில் சரியான சாலை வசதி இல்லாததால் அருகாமையில் உள்ள நகரங்களுக்கு செல்லும் மக்கள் பெரும்பாலும் படகு போக்குவரத்தையே நம்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

சனி, 12 அக்டோபர், 2013

அமெரிக்க படைகளிடம் சிக்கிய தலிபான் தளபதி


கிழக்கு ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகளிடம் தலிபான் இயக்கத்தின் முக்கிய தளபதி லத்தீப் மசூத் சிக்கியுள்ளார்.

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் தங்கியுள்ள தலிபான், அல்கொய்தா தீவிரவாதிகளை ஒழித்து கட்டும் நோக்கில் அமெரிக்க படைகள் முகாமிட்டுள்ளன.

சமீபத்தில் பாகிஸ்தான் தலிபான் தீவிரவாத தலைவர் லத்தீப் மசூத் என்பவர் அமெரிக்க படையிடம் பிடிபட்டார். இவர் கிழக்கு ஆப்கானிஸ்தான் எல்லையில் வைத்து கைது செய்யப்பட்டார்.

இத்தகவலை அமெரிக்க செய்தி தொடர்பாளர் மேரி ஹெர்ப் உறுதி செய்தார்.
அல்கொய்தா மற்றும் முல்லா ஓமர் தலைமையிலான தலிபான் இயக்கங்களுடன் லத்தீப் நெருங்கிய தொடர்பு வைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
 

வெள்ளி, 11 அக்டோபர், 2013

கடுமையான பனிப்பொழிவு முதன் முறையாக ஜேர்மனில்


 முதன் முறையாக கடுமையான அளவில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜேர்மனில் குளிர்காலங்களில் பனிப்பொழிவு ஏற்படுவது வழக்கம்.
இந்நிலையில் தெற்கு ஜேர்மனியின் பவேரியா பகுதியில் பனிப்பொழிவு ஆரம்பித்துவிட்டது.

இதன் காரணமாக பள்ளிகள் மற்றும் சிறுகுழந்தைகளுக்கு விளையாட்டுக் கூடம் போன்றவைகள் மூடப்பட்டுள்ளன.
மேலும் மக்களுக்கும், வாகன ஓட்டுனர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பெர்லினில் வெப்பநிலை ஆறு டிகிரி C முதல் 14 டிகிரி C  வரை காணப்படும் என்றும், முனிச்சில் 8 டிகிரி C-க்கு மேல் தாண்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
 

வியாழன், 10 அக்டோபர், 2013

சுற்றுலா பயணிகளுக்கு விசா விதிகள் தளர்வு !


 இந்திய அரசு இந்தியாவுக்கு சுற்றுலா வர விரும்பும் பயணிகளுக்கு விசா வழங்குவதில் சில விதிகளை தளர்த்தியிருக்கிறது.

அமெரிக்கா பிரிட்டன் பிரான்ஸ் ஆஸ்திரேலியா சீனா போன்ற 40 நாடுகளைச் சேர்ந்த பிரஜைகள் இந்தியாவுக்கு சுற்றுலா விசா பெற அவர்களின் நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களை அணுகாமலேயே இணையத்தின் மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து அனுப்பிவிட்டு இந்தியாவுக்கு வந்து சேர்ந்தவுடன் விமான நிலையத்தில் அவர்களுக்கு விசா வழங்கப்படும் என்று இந்திய அரசு அறிவித்திருக்கிறது.

இந்த அறிவிப்பில் தெற்காசிய நாடுகள் எதுவும் சேர்க்கப்படவில்லை.ஆனால் உலகின் அனைத்து நாடுகளிலும் உள்ள 60வயதுக்கு மேற்பட்ட அனைத்து சுற்றுலா பயணிகளுக்கும் விமான நிலையத்தில் வந்து சேர்ந்தவுடன் விசா வழங்கும் வசதி தரப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

செவ்வாய், 8 அக்டோபர், 2013

இதோ உங்களுக்கான உணவுகள்!! எடை அதிகரிக்க


ஆரோக்கியமான உடலை அடைய வேண்டுமெனில் எப்போதும் ஆரோக்கியமான உணவுகளையே உண்ண வேண்டும்.
பருமனாக உள்ள பல பேர் உடல் எடையை குறைக்க வேண்டி பாடுபடுவதை போல, ஒல்லியான தேகம் கொண்டவர்கள் உடல் எடையை அதிகரிக்க விரும்புகின்றனர்.

உடல் எடையை அதிகரிப்பது சுலபம் என்று நீங்கள் நினைக்கலாம்.
எண்ணெயில் பொரித்த கொழுப்பு நிறைந்த உணவுகளை எடுத்துக் கொண்டாலே போதுமானது என்று பலர் நினைக்கின்றனர். ஆனால் அது ஆரோக்கியமானது அல்ல.
உடல் எடை அதிகரிக்கும் போது ஆரோக்கியமாக இருப்பது பெரிய சவாலாக விளங்கும். ஆனால் அது ஒன்றும் அவ்வளவு கடினமானது கிடையாது.
போதுமான கலோரிகள் மற்றும் தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள உணவுகளையே உண்ணுங்கள்.
புரதம் அதிகமுள்ள உணவுகளை உட்கொண்டால், உடல் தசைகள் பெரிதாகி உடல் எடையும் அதிகரிக்கும்.
உலர்ந்த பழங்கள் மற்றும் நட்ஸ்
உலர்ந்த பழங்கள் மற்றும் நட்ஸ்களில் கலோரிகள், ஊட்டச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் வளமையாக உள்ளது.
அதனால் உலர் திராட்சை, பாதாம், வால்நட் மற்றும் முந்திரி பருப்புகளை உணவுகளில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
ஒரு கப் உலர் திராட்சையில் 449 கலோரிகளும், ஒரு கப் பாதாமில் 529 கலோரிகளும் அடங்கியுள்ளது.
அவைகளை ஐஸ்க்ரீம் அல்லது தயிரின் மேல் தூவி விட்டு உண்ணலாம். வேண்டுமானால், சாலட் மற்றும் உணவு தானியங்களிலும் கலந்து உண்ணலாம்.
சீஸ்
மற்ற அனைத்து பால் பொருட்களை போல சீஸிலும் (பாலாடை கட்டி) அதிமுக்கிய ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் உள்ளது.
இதில் ஆரோக்கியமான நல்ல கொழுப்பு அதிகமாக உள்ளதால், வேகமாக உடல் எடை கூட விரும்புபவர்கள் இதனை உட்கொள்ளலாம்.
கலோரிகள் மட்டுமின்றி, இதில் புரதம், கால்சியம், மற்றும் கொலஸ்ட்ராலும் அதிகமாக உள்ளது.
அதனால் உணவுகளில் கொஞ்சம் சீஸை தூவி விட்டால் போதும், உணவின் சுவை இன்னமும் அதிகரித்துவிடும். ஒரு முறை பரிமாறப்படும் சீஸில் 69 கலோரிகள் உள்ளது.

வேர்க்கடலை வெண்ணெய்
வேர்க்கடலை வெண்ணெயில் புரதமும், கொழுப்பும் அதிகளவில் உள்ளது. உடல் எடை அதிகரிக்க விரும்புபவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமையும்.
ஒரு ஸ்பூன் வேர்க்கடலை வெண்ணெயில் தோராயமாக 100 கலோரிகள் உள்ளது. மேலும் இதில் அதிமுக்கிய ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில்

அடங்கியுள்ளது. இதில் உள்ள கொழுப்பு தெவிட்டாத வகையை சேர்ந்ததாகும்.
அதனால் இது இதயத்திற்கு மிகவும் நல்லது. வேர்க்கடலை வெண்ணெயை முழுதானிய ரொட்டியில் தேய்த்து உண்ணுங்கள் அல்லது ஆப்பிள் உண்ணும் போது இதனை தொட்டுக் கொள்ளுங்கள்.
கொழுப்பு நீக்காத முழுமையான பால்
கொழுப்பு நீக்காத முழுமையான பாலை ஓட்ஸ் அல்லது தானியங்களுடன் கலந்து உண்ணலாம்.

வேண்டுமென்றால் ஒரு டம்ளர் பாலையும் அப்படியே குடிக்கலாம். வேண்டுமென்றால் அதனுடன் கொஞ்சம் சாக்லெட் பொடியையும் சுவைக்காக சேர்த்துக் கொள்ளலாம்.
கலோரிகள் அதிகமுள்ள இதில் வைட்டமின் டி மற்றும் ஏ சத்துக்களும் அடங்கியுள்ளது.
கொழுப்பு நீக்கிய பாலுக்கு பதில், கொழுப்பு நீக்காத பாலையே தேர்ந்தெடுங்கள்.

இது தான் எடையை வேகமாக அதிகரிக்கச் செய்யும். கொழுப்பு நீக்காத ஒரு டம்ளர் பாலில் 120-150 கலோரிகள் அடங்கியுள்ளது.
உருளைக்கிழங்கு

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் பொதுவாக தவிர்க்கும் ஒரு காய் தான் உருளைக்கிழங்கு.
ஆனால் ஏன் அதை விட்டு ஓடி போகிறீர்கள்? அதற்கு காரணம் அ
தில் உள்ள அதிகப்படியான கார்போஹைட்ரேட். இது வேகமாக உடல் எடையை அதிகரித்துவிடும்.

அதே போல் இதில் ஸ்டார்ச், நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் அதிக அளவில் உள்ளது. உருளைக்கிழங்கின் தோளில் புரதச்சத்து அதிகமாக உள்ளதால், தோலோடு சேர்த்தே உண்ணுங்கள்.
மேலும் அதனை மற்ற காய்கறிகளுடன் கலந்தும் உண்ணலாம். ஒரு இடைநிலை உருளைக்கிழங்கில் 150 கலோரிகள் அடங்கியிருக்கும்.
பாஸ்தா

கலோரிகள் நிறைந்த சுவைமிக்க உணவு தான் பாஸ்தா. மேலும் இதில் கார்போஹைட்ரேட் கூட அதிக அளவில் உள்ளது.
பல காய்கறிகளை இதனுடன் சேர்த்தால் அதிமுக்கிய ஊட்டச்சத்துக்களும் இதில் சேர்ந்துவிடும். ஒரு கப் மக்ரோனியில் 300 கலோரிகள் உள்ளது. இதுவே சமைத்த உணவில் 22 கலோரிகள் இருக்கும்.
வெண்ணெய்

தெகட்டாத கொழுப்பு வகையை சேர்ந்தவை வெண்ணெய். சமையலுக்கு அதனை சிறிதளவு பயன்படுத்திக் கொள்ளலாம்.
அதனை பிரட்டில் தேய்த்து உண்ணலாம் அல்லது நொறுக்குத் தீனியை வறுக்கும் போதும் இதனை கொஞ்சம் சேர்த்துக் கொள்ளலாம்.
பொதுவாக உணவுகளுக்கு சுவையை கூட்ட வெண்ணெயை சேர்ப்பது

வழக்கமான ஒன்று தான். வெண்ணெய் மற்றும் நெய்யில் நல்ல வாசனையும், சுவையும், உடல் எடை அதிகரிக்க தேவையான கலோரிகளும் உள்ளது.
ஆரோக்கியமான இனிப்பு பழங்கள்
மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம் மற்றும் அன்னாசிப்பழம் போன்ற பழங்கள் உடல் எடையை அதிகரிக்க உதவும்.

இவைகளில் இயற்கையான சர்க்கரை உள்ளது. அவைகள் உடலின் ஆற்றல் திறனை அதிகரிக்கும்.
குறிப்பாக உடல் எடை கூடுவதற்கு சரியான தேர்வாக விளங்குவது தான் அவகேடோ என்னும் வெண்ணெய் பழம்.
கொழுப்பு மற்றும் கலோரிகள் நிறைந்த இந்த பழத்தில் 300 கலோரிகள் அடங்கியுள்ளது.

அதனால் இவை இனிப்பாகவும், ஆரோக்கியமாகவும் விளங்கும். இதனை பழங்களை கொண்டு தயாரிக்கும் சாலட், டெசர்ட் மற்றும் ஜூஸ்களில் கலந்து உண்ணலாம்.
முட்டைகள்

கலோரிகள், ஊட்டச்சத்துக்கள் மற்றும் புரதம் நிறைந்துள்ளது தான் முட்டை. ஒரு முட்டையில் தோராயமாக 70 கலோரிகளும் 5 கிராம் கொழுப்பும் உள்ளது.
அதனால் தான் உடலை வளர்க்கும் ஆண் மகன்கள் முட்டையை விரும்பி உண்ணுகிறார்கள். இதில் ஒமேகா-3 கொழுப்பமிலங்களும் அதிகமாக உள்ளது.
முட்டையின் மஞ்சள் கருவில் ஆரோக்கியமில்லாத கொலஸ்ட்ரால் உள்ளதால் அதனை தவிர்த்திடுங்கள்.

ஆனால் இந்த முட்டையை முட்டை பொறியல், அவித்த முட்டை அல்லது ஆஃப்-பாயில் எடையை வேகமாக அதிகரிக்கச் செய்யும்.
கொழுப்பில்லா இறைச்சி

கொழுப்பில்லா இறைச்சி கலோரிகளால் நிறைந்துள்ளது. அதனால் அதனை உட்கொண்டால், உடல் எடை வேகமாக அதிகரிக்கும்.
ஆரோக்கியமான உடலை பெற இதனை ஆரோக்கியமான உணவுடன் சேர்த்து உட்கொள்ளுங்கள். இவைகளில் புரதமும் அதிகமாக உள்ளதால், தசைகள் வளர்ச்சியடைய உதவும்.

அதிலும் அதனை வறுத்து அல்லது வேறு விதமாக சமைத்தும் உண்ணலாம். இதனால் உடல் எடையும் வேகமாக அதிகரிக்கும்.

 

திங்கள், 7 அக்டோபர், 2013

அட்டகாசம் 6 வயது இரட்டை குழந்தைகளின்


இங்கிலாந்தில் 6 வயது இரட்டை குழந்தைகள் செய்த அட்டகாசத்தால் தந்தை அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.

இங்கிலாந்தின் செயின்ட் ஈவ்ஸ் நகரைச் சேர்ந்த அஷ்லே கிரிபித் என்பவருக்கு 6 வயதில் ஆண், பெண் குழந்தைகள் உள்ளனர்.
இரட்டை குழந்தைகளான இவர்கள் செய்த அட்டகாசத்தால் தந்தை அதிர்ச்சியில் உறைந்துள்ளாராம்.

அதாவது, கடந்த வார இறுதியில் அப்பிள் இணையத்தள நிறுவனத்தில் இருந்து கிரிபித்துக்கு தபால் ஒன்று வந்துள்ளது.
இதனை பிரித்த பார்த்த போது, 4 பக்க அளவுக்கு பில்கள் இருந்துள்ளது.
அதில் ரூ.97,010 கட்ட வேண்டும் என்றும், பாஸ்வேர்டுகளுக்காக ரூ.7,425 கட்ட வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

தவறாக பில் அனுப்பிவிட்டார்களோ என்று ஆச்சரியமாக பார்த்தபோது, தன் பெயருடன் முகவரியும் சரியாகத்தான் இருந்தது.

தன்னுடைய குழந்தைகள் தான் சுட்டியாச்சே, அவர்கள் இதை வாங்கினார்களா என்று கேட்டபோதுதான் உண்மை தெரியவந்தது.
அவரது குழந்தைகள் தந்தையின் ஐபேடை தங்களுடைய படிப்புக்காக பயன்படுத்திக் கொள்வது வழக்கம்.

அதில் இருந்த தந்தையின் பாஸ்வேர்டை நினைவில் வைத்து கொண்டு, இன்டர்நெட்டில் இவ்வளவையும் வாங்கியுள்ளனர்.
உடனடியாக இணையத்தள நிறுவனத்திடம் தொடர்பு கொண்டு நடந்ததை எடுத்துக்கூறவே, அவர்களும் பில்களை வாபஸ் பெற்றுள்ளனர்.
இதனை தொடர்ந்து தன்னுடைய பாஸ்வேர்டை மாற்றி விட்டாராம்.

ஞாயிறு, 6 அக்டோபர், 2013

நாங்கள் என்ன பாவம் செய்தோம்! 11 வயது சிறுவனின் கதறல்


சிரியாவில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது.
இதில் ஒரு லட்சத்திற்கும் மேலான மக்கள் பலியாகி உள்ளதுடன், மில்லியன் கணக்கானவர்கள் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.

பச்சிளம் குழந்தைகள், பெண்கள் உட்பட பலரும் கொடூரமாக கொலை செய்யப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சிரியாவில் நடந்த இரசாயன தாக்குதலில் நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர்.
இதனை தொடர்ந்து அமெரிக்காவும், அதன் நட்பு நாடுகளும் தாக்குதல் நடத்த திட்டமிட்டன.

ஆனால் இதற்கு தொடர்ந்து ரஷ்யா மறுப்பு தெரிவித்து வந்தது. இந்நிலையில் ரஷ்யாவின் கோரிக்கையின் படி, தங்களிடம் உள்ள இரசாயன ஆயுதங்களை ஒப்படைக்க சிரியா சம்மதம் தெரிவித்துள்ளது. இதன்படி அமெரிக்காவின் நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முகாம்களில் சிரியா அகதிகளின் நிலை குறித்து பிபிசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இங்குள்ள மக்களின் நிலை சற்றே கண்கலங்க வைக்கிறது.

பசியில் துடிக்கும் பிஞ்சுக் குழந்தைகள், கையில் எதுவுமே இல்லாத நிலையில் அடுத்த என்ன நடக்கும் என்று தெரியாத நிலையில் விழி பிதுங்கி இருக்கும் பெற்றோர்கள்.
11 வயது சிறுவன் ஒருவன், கடுமையான வலி வேதனையுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

நான் பள்ளிக்கூடத்தில் இருக்கும் போது ஏன் குண்டு போட்டார்கள்? ஏன் அவ்வாறு செய்தார்கள்? என அழுது கொண்டே கூறியிருப்பது நெஞ்சை உருக்குவதாய் உள்ளது.
 

சனி, 5 அக்டோபர், 2013

பேர்மிங்ஹாமில் இலங்கைப் பெண் மரணம்:


 
இலங்கைப் பெண்ணொருவர் இங்கிலாந்தின் பேர்மிங்ஹாமில் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். நேற்று காலை 6.45 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
அவர் பயணித்த சைக்கிள் லொறியொன்றுடன் மோதியமையால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
முத்துமனகா பின்ஹாமி என்ற 55 வயதான பெண்ணே விபத்தியில் உயிரிழந்துள்ளார். குறித்த பெண் 5 பிள்ளைகளின் தாயெனவும் அவரது கணவர் மற்றும் பிள்ளைகள் இலங்கையில் வசித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பெண்  பேர்மிங்ஹாமில்  ஆடைத் தொழிற்சாலையொன்றில் பணிபுரிபவரெனவும் காலையில் தொழிலுக்கு செல்லும்  போது ஹே மில்ஸ் பகுதியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் லொறி தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், லொறி சாரதியிடம் விரைவில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுமெனவும் அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்

இலங்கைப் பெண்ணொருவர் இங்கிலாந்தின் பேர்மிங்ஹாமில் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். நேற்று காலை 6.45 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
அவர் பயணித்த சைக்கிள் லொறியொன்றுடன் மோதியமையால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

முத்துமனகா பின்ஹாமி என்ற 55 வயதான பெண்ணே விபத்தியில் உயிரிழந்துள்ளார். குறித்த பெண் 5 பிள்ளைகளின் தாயெனவும் அவரது கணவர் மற்றும் பிள்ளைகள் இலங்கையில் வசித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பெண்  பேர்மிங்ஹாமில்  ஆடைத் தொழிற்சாலையொன்றில் பணிபுரிபவரெனவும் காலையில் தொழிலுக்கு செல்லும்  போது ஹே மில்ஸ் பகுதியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் லொறி தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், லொறி சாரதியிடம் விரைவில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுமெனவும் அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்

வியாழன், 3 அக்டோபர், 2013

பிரான்ஸ் நாடு நியூயார்க் அல்ல! தொழிற்சங்க தலைவர்


பிரான்ஸ் நாட்டில் உள்ள கடைகள் அதிக நேரம் திறந்திருக்க கூடாது என்று அந்நாட்டு அரசாங்கம் சட்டம் விதித்துள்ளது.

பிரான்ஸ் தலைநகரான பாரீசில் உள்ள செப்போரா (Sephora) ஒப்பனை தயாரிப்பு நிறுவனத்தில் இரவு 9.00 மணிக்கு மேலும் கூடுதல் சம்பளத்திற்கு பணியாளர்கள் வேலை பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து கடைகள் கூடுதல் நேரம் திறந்து வைக்க கூடாது என்று சட்டம் விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த சட்டமானது முட்டாள்தனமானது என்றும் பணியாளர்கள் குறைந்த அளவு வேலையை செய்துவிட்டு அதிக சம்பளம் வாங்குகின்றனர். மேலும் நாங்கள் இதற்காக அதிகமாக வரி செலுத்துகிறோம் என்று ஒரு வாசகர் டுவிட் செய்துள்ளார்.

புதிதாக விதிக்கப்பட்டுள்ள சட்டம் குறித்து தொழிற்சங்கங்களின் தலைவர் எரிக் செர் கூறுகையில், பிரான்சில் கடைகளானது அதிகாலை 4.00 மணிக்கு திறந்து பின்பு இரவு 11.00 மணிக்கு மூடுவதையே ஒரு சட்டமாக கொண்டுள்ளது.

ஆனால் இந்த நேரத்தினையும் மீறி தொழிலாளர்கள் வேலை செய்வது சட்டத்தை மீறுவதாகும். மேலும் பணியாளர்களையும் நாம் மதிக்கவேண்டும்.
ஏராளமான நாடுகளில் குழந்தை தொழிலாளர்கள் பாதுகாப்பு குறித்து

சட்டங்கள் உள்ளன. நாமும் அந்த சட்டத்தினை பின்பற்ற வேண்டும்.
மேலும் சில தொழிலாளர்கள் அதிக நேர உழைப்பினை விரும்புகிறார்கள் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் இதற்கான நேரத்தினை நீட்டித்தால் நாட்டில் மற்றவைகளுக்கும் விதிவிலக்குகள் செய்யவேண்டும்.
எனவே இது சட்டத்தினை மீறுவதாகும், ஆகவே பிரான்ஸ் நாட்டின் சட்டத்தினை பின்பற்றுவது நம் கடமையாகும்.

நியூயார்க் போன்ற நாடுகளில் கடைகள் நீண்ட நேரம் திறந்திருக்கின்றன என்றும் ஆனால் நாம் வாழ்வது பிரான்ஸ் நாட்டிலேயே தவிர நியூயார்க்கில் அல்ல எனவும் கூறியுள்ளார்.

புதன், 2 அக்டோபர், 2013

இளம் பெண் மரணம் கணவர் படுகாயம்


   
 
யாழ். தட்டாதெருச் சந்தியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் இராணுவ வாகன விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இளம் குடும்பப் பெண் பஸ் சில்லில் நசியுண்டு உயிரிழந்தார். கணவன் படுகாய மடைந்தார். இராணுவ வாகனம் மோட்டார் சைக்கிளின் பின்புறம் மோதியதிலேயே இந்த விபத்து நேர்ந்ததாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். யாழ். தட்டாதெருச் சந்தியில் நேற்றிரவு 10.15 மணியளவில் இந்த விபத்து

இடம்பெற்றது. இராச வீதி, கோப்பாயைச் சேர்ந்த திருமதி சதீஸ்குமார் கீர்த்தனா (வயது 20) என்ற இளம் குடும்பப் பெண்ணே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவராவார். இவரது கணவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து இராணுவத்தினரை ஏற்றிக்கொண்டு கே.கே.எஸ். வீதி வழியாக பயணித்த இராணுவ பஸ், முன்னால் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை தட்டாதெருச் சந்தியில் வைத்து மோதித்தள்ளியது.
இதில் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து சென்ற பெண் வீதியில்

விழுந்தார். அவர் மீது பஸ் சில்லு ஏறியதில் அதில் நசியுண்டு அவர் உயிரிழந்தார். சம்பவ இடத்துக்கு வருகை தந்த பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டதுடன் விபத்துக்குள்ளான பஸ்ஸையும் அவ்விடத்திலிருந்து எடுத்துச்செல்ல அனுமதித்தனர் என்று கூறப்பட்டது. சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது

வெள்ளி, 27 செப்டம்பர், 2013

மக்கள்தொகை 35 மில்லியனை தாண்டியது


கனடாவில் மக்கள்தொகை 35 மில்லியனை தாண்டியுள்ளதாக புள்ளிவிபர அறிக்கை தகவல் வெளியிட்டுள்ளது.
கனடாவின் புள்ளிவிபரவியல் மக்கள்தொகை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், கனடாவில் மொத்த மக்கள்தொகை 35,158,300 என்று கணக்கிடப் பட்டுள்ளதாகவும், இது கடந்தாண்டை விட 404, 000 அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 1.2 சதவிகித அதிகரிப்பு, கடந்த 30 வருடங்களாக ஒரே மாதிரியாக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு தேசிய அளவில் அல்பேர்ட்டாவில் 3.4 சதவிகித அதிகரிப்பும், Nunavut 2.5 சதவிகிதமும், Saskatchewan 1.9 சதவிகிதமும் அதிகரித்து காணப்பட்டுள்ளது.

மேலும் அல்பெர்ட்டாவில் மக்கள் தொகை அதிகரித்து காணப்படுவதற்கு சர்வதேச குடிவரவும், மற்ற மாகாணங்களிலிருந்து குடிபெயர்ந்தவர்களுகமே காரணம் என்றும் புள்ளிவிபர ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நோவஸ்கோசியாவில் அரை சதவிகிதம் குறைந்து காணப்படுகிறது என்றும், அட்லாண்டிக் மாகாணங்களில் வளர்ச்சி குறைந்தும் காணப்படுகிறது.

இதற்கு குடியேறியவர்களின் வெளியேற்றமும், குறைந்த அளவு பிறப்புமே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



ஞாயிறு, 22 செப்டம்பர், 2013

ரூ. 2.50 கோடிக்கு விற்பனையான இந்தியரின் ஓவியம்


அமெரிக்காவில் இந்தியர் வரைந்த ஓவியம், அமெரிக்காவில் 2.54 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகியுள்ளது.

கடந்த 18ம் திகதி மார்ட்டின் அண்டு கான்டெம்பொரரி சவுத் ஆசியன் ஆர்ட் நிறுவனம், நியூயார்க்கில் ஏற்பாடு செய்த கண்காட்சியில் நடைபெற்ற

ஏலத்தில், இந்திய ஓவியரான பூபென் காகர் வரைந்த 'அமெரிக்க கணக்கெடுப்பு அதிகாரி' என்ற ஓவியம் 4 லட்சம் டொலருக்கு விற்பனையானது.
ஆறு பேர், இந்த ஓவியத்தை வாங்க போட்டியிட்டதில் ஏறக்குறைய இரு மடங்கு விலைக்கு விற்பனையானது.

இந்த ஏலத்தில் இடம் பெற்ற மற்றொரு இந்தியரான பிரான்சிஸ் நியூட்டன் ஷுஜா வரைந்த ஓவியம், 1.30 கோடிக்கு விற்பனையானது.
இந்த கண்காட்சி மற்றும் ஏல விற்பனையில் அமைப்பாளர்களுக்கு 20 கோடி ரூபாய் லாபம் கிடைத்தது.
 

2 வயது சிறுவன் மாடியிலிருந்து தூக்கி ஏறியப்பட்டு கொலை


சீனாவின் தன்னாட்சி அதிகாரம் பெற்ற மாகாணம் குவாங்ஸி ஷுயாங்.
இங்குள்ள அடுக்குமாடி கட்டிடத்தின் 6–வது மாடியில் இருந்து 2 வயது சிறுவன் ஒருவன் வெளியே தூக்கி வீசப்பட்டான்.

இதனால் ரோட்டில் விழுந்த சிறுவனி்ன் தலையில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி மரணமடைந்தார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் பொலிஸர் அங்கு விரைந்து வந்து சிறுவனை வீசி கொலை செய்த நபரை கைது செய்தனர். கொலையாளின் பெயர் லூ என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சிறுவனின் தாயாருக்கும், லூவுக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்தது. இந்த நிலையில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு பிரிந்து இருந்தனர்.
இந்த நிலையில் சிறுவனின் தாயாரை நேரில் பார்த்த லூ அவரிடம் பேசும்போது மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த லூ அருகில் நின்ற சிறுவனை தூக்கி வெளியே வீசி கொலை செய்தான்.
 

ஞாயிறு, 15 செப்டம்பர், 2013

வேலை நிச்சயம்! கொமடி செய்தால்

 
நகைச்சுவை உணர்வு உள்ளவர்களுக்கு வேலை கிடைப்பதில் எந்தவிதமான சிக்கலும் இல்லை என, சமீபத்தில் அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலை கிடைப்பதற்கு உள்ள தகுதிகள் குறித்த ஆய்வு ஒன்றை, அமெரிக்காவின், மனித வள மேம்பாட்டு நிறுவனம் நடத்தியது.
இதற்காக, இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட மேலாளர்கள் மற்றும் மனித வள அலுவலர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

ஒரே விதமான கல்வித் தகுதி படைத்த இருவரில், சமுதாயம் மீது அக்கறை உள்ளவர்களுக்கும், நன்றாக உடை அணிந்தவர்களுக்கும் வேலை கிடைப்பதில் எந்த சிக்கலும் ஏற்படவில்லை.

பொதுவாக உள்ள அம்சங்களில் இருந்து சற்று மாறுபட்டு சிந்திப்பவர்களையே, நிறுவன மேலாளர்கள் தேர்வு செய்கின்றனர். உடல் ரீதியாக, நல்ல தகுதி படைத்தவர்கள், தற்போதைய நடைமுறை சூழலை

நன்கு அறிந்தவர்கள், சமூக ஊடகங்களில் பங்கேற்பவர்கள், விளையாட்டுத் துறையில் ஆர்வம் போன்ற தகுதியை பெற்றுள்ளவர்களுக்கே வேலை கொடுப்பதில், முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.

வேலை கொடுப்பவர்கள், தொழில் ரீதியாக மட்டும் திறமை படைத்தவர்களை தேர்ந்தெடுப்பதில்லை. மாறாக, சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு எல்லா விதத்திலும் தகுதி படைத்தவர்களைத் தான் தேர்ந்தெடுக்கின்றனர். நகைச்சுவை உணர்வு உள்ளவர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

பதவி உயர்வு குறித்து கேட்பவர்களுக்கே, அது தொடர்பான முன்னுரிமை வழங்கப்படுகிறது. இதில், சில வகையினருக்கு, பதவி உயர்வுகள் மறுக்கப்படுகின்றன. அதாவது, "இது என்னுடைய வேலை இல்லை' என, மறுப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது.

பணிக்கு தாமதமாக வருவது, மற்றவர்களது வேலையை பார்த்துவிட்டு, அதில் இருந்து ஆதாயம் அடைய முயலுவது, வேலை நேரம் முடிவதற்கு முன்னதாகவே வீட்டுக்கு சென்றுவிடுவது போன்ற காரணங்களாலும், பதவி உயர்வு கிடைப்பது தாமதமாகலாம் அல்லது கிடைக்காமல் போகலாம்.

ஓயாமல் வம்பு பேசுபவர்கள், மற்றவர்கள் குறித்து புகார் அளிப்பவர்கள், அலுவலக பணத்தை செலவு செய்வதில் அதிக உரிமை எடுத்துக் கொள்பவர்கள், பணிக்கு ஏற்றபடி உடை அணியாதவர்கள் ஆகியோருக்கும் பதவி உயர்வுகள் என்பது வெறும் கானல் நீராகவே உள்ளது.

நீங்கள் வேலைக்கு செல்ல தயார் என்றால், உங்களது தனிப்பட்ட திறமைகள் தான் அதன் திறவுகோல் என்கிறார், இந்த ஆய்வு நிறுவனத்தின் தலைவர், ரோஸ் மேரி ஹப்னர்.

சனி, 14 செப்டம்பர், 2013

பல்கலைக்கழக மாணவர் விடுதி மீது தாக்குதல்


களனி பல்கலைக்கழகத்தின் மாணவர் விடுதியின் மீது இன்று அதிகாலை இனந்தெரியாத சிலர் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
பல்கலைக்கழகத்திலிருந்து சுமார் ஒன்றரை கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள கன்னங்கர விடுதியினுள் நுழைந்த கும்பலொன்று மேற்படி தாக்குதலை நடத்தியுள்ளது.
இதன்போது விடுதியின் ஜன்னல்கள்,கதவுகள், மாணவர்களின் மோட்டார் சைக்கிள்கள்,  கண்ணாடிகள் போன்றவற்றை சேதப்படுத்தியுள்ளனர்.
இத் தாக்குதலால் எவரும் காயங்களுக்குள்ளாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

திங்கள், 9 செப்டம்பர், 2013

விற்பனையில் களைகட்டிய பிள்ளையார் சிலைகள்


விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் பிள்ளையார் சிலைகள், தோரணங்கள் மற்றும் பூஜை சாமான்கள் விற்பனை களை கட்டியுள்ளது.
முழுமுதல் கடவுள் விநாயகப்பெருமானின்
சதுர்த்தி விழாஇன்று கொண்டாடப்படுகிறது.
                                                                                                                               
   இதையொட்டி தமிழகத்தில் உள்ள அனைத்து விநாயகர் கோயில்களிலும் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள், இசை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று  அதிகாலை 4 மணியிலிருந்து சிறப்பு தரிசன நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தியன்று மக்கள் வீடுகளில் சிறிய களிமண் பிள்ளையார் சிலையை வைத்து வழிபட்டு, நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம். சென்னையில் கொசப்பேட்டை, சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில்

களிமண் விநாயகர் பிள்ளையார் சிலைகள் ஏராளமாக செய்யப்பட்டன.
இந்த சிலைகள் கோயம்பேடு மார்க்கெட், பூக்கடை, பாரிமுனை, மயிலை, போன்ற இடங்களில் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன.
கடந்த ஆண்டில் இந்த பிள்ளையார் சிலைகள் அதன் உயரத்துக்கு ஏற்ப ரூ.30 முதல் ரூ.200 வரை விற்கப்பட்டன.

இந்த ஆண்டு இவை ரூ.75ல் தொடங்கி ரூ.400 வரை விற்கப்படுகிறது. அதே போல, வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகள் 5 அடி முதல் 18 அடி வரையான உயரங்களில் விற்கப்படுகின்றன.

இவை ரூ.5 ஆயிரத்தில் தொடங்கி ரூ.40 ஆயிரம் வரையான விலையில் விற்கப்படுகின்றன. நகைக் கடைகளில் நவரத்தின விநாயகர் சிலைகள் லட்சக்கணக்கான ரூபாயில் விற்கப்படுகின்றன.
பிள்ளையாருக்கு பயன்படுத்தும் குடைகள் சிலைகளின் உயரத்துக்கு ஏற்ற வகையில் விற்கப்படுகின்றன.
கடந்த ஆண்டில் ரூ.10க்கு கிடைத்தது. இந்த ஆண்டு ரூ.15ல் தொடங்கி ரூ.50 வரை விற்கப்படுகிறது.

இது தவிர கரும்பு ஒரு கட்டு (15 கழிகள்) ரூ.300 க்கு விற்கப்படுகிறது.
மாவிலை மற்றும் தோரணம் ஒரு ஜோடி அடங்கியது ரூ.30க்கும், பொரி, அவல், கடலை, சர்க்கரை கலந்து ஒரு லிட்டர் ரூ.30க்கும் விற்கப்படுகிறது.
கோயம்பேடு மார்க்கெட்டில் முதல் முறையாக ஆப்பிள், பேரிக்காய், கொய்யா, சாத்துக்குடி, விளாம்பழம், சோளம், கம்பு, இலந்தை பழம் ஆகியவை அடங்கிய ஒரு பேக்கிங் ரூ.100க்கு விற்கப்படுகிறது
 

ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

வாகன விபத்து !கிளிநொச்சியில் 4 பேர் படுகாயம்


 
கிளிநொச்சி பரந்தன்- முல்லைத்தீவு வீதியில் வானும் உழவு இயந்திரமும் மோதி விபத்துக்குள்ளாகியதில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இவ்விபத்து இன்று காலை 10 மணிக்கு பூங்காவனம் சந்தியில் இடம்பெற்றுள்ளது

விபத்தில் படுகாயமடைந்தவர்கள் கிளிநொச்சி பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை கிளிநொச்சிப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்,{புகைப்படங்கள்}