siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 30 நவம்பர், 2018

பாடசாலை மாணவன் முல்லைத்தீவில் தற்கொலை

முல்லைத்தீவு செம்மலைபகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் பாடசாலை மாணவனின் உடலமாக மீட்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு செம்மலை மாணிக்க பிள்ளையார் ஆலயத்தை அண்மித்தகாட்டுப்பகுதியில்,  13 அகவையுடைய பாடசாலை மாணவன் ஒருவன், பாடசாலை சீரூடையுடன் தூக்கில்தொங்கிய நிலையில் நேற்று இரவு உடலமாக காணப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள்  தெரிவிக்கின்றன. சம்பவம் குறித்து முல்லைத்தீவு பொலிசாரை தொடர்பு கொண்டுகேட்டபோது, மாணவன் ஒருவன் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்படுவதாக...

வியாழன், 29 நவம்பர், 2018

தனியார் சொகுசு பேருந்து ஒன்று விபத்தில் 4 பேர் பலி

யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணத்த தனியார் சொகுசு பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். புத்தளம் நாத்தாண்டியா பகுதியில் இன்று மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்  தெரிவித்துள்ளனர். விபத்தில் 23 பேர் படுகாயமடைந்துள்ளதுள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக  முன்னெடுக்கப்பட்டு வந்தது. குறித்த விபத்தில் உயிரிழந்தவர்களில்...

வைமன் வீதியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்

யாழ்ப்பாணத்தில் வீடொன்றின் மீது ன்று அதிகாலை பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால் பதற்ற நிலைமை  ஏற்பட்டுள்ளது. யாழ்- வைமன் வீதியில் உள்ள வீடொன்றின் மீது இன்று  அதிகாலை நடத்தப்பட்ட பெற்றோல் குண்டுத் தாக்குதலில் குறித்த  வீட்டின் முன்பாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரண்டு முச்சக்கர வண்டிகள்  தீயில் எரிந்துள்ளது.  இந்த நிலையில் மோட்டார் சைக்கிள் இரண்டும் சேதமாக்கப்பட்டுள்ளன.  8 பேர் கொண்ட வன்முறைக் கும்பல்...

திருகோணமலை யில் தொலைபேசியை திருடிய நபருக்கு சிறைதண்டனை

திருகோணமலை பகுதியில் பெறுமதியான தொலைபேசியொன்றினை திருடி தம் வசம் வைத்திருந்த நபர் ஒருவருக்கு மூன்று மாதம் கட்டாய சிறைதண்டனை விதித்து திருகோணமலை நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார். ஜமாலியா, திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய ஒருவருக்கே இவ்வாறு சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் கடந்த மாதம் திருகோணமலை பகுதியில் ஒரு இலட்சம் ரூபாய் பெருமதியான தொலைபேசி ஒன்றினை திருடி பாவித்து வந்த நிலையில், தொலைபேசியின் உரிமையாளர் திருகோணமலை தலைமையக...

மரண அறிவித்தல், திருமதி.அலோசியஸ் மல்லிகாதேவி.29.11.18

தச்சந்தோப்பை பிறப்பிடமாகவும் உரும்பிராய் கிழக்கு தம்பித்துரை வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.அலோசியஸ் மல்லிகாதேவி அவர்கள் (29.11.2018) வியாழக்கிழமை இறைபதம் அடைந்தார். அன்னார் காலஞ்சென்ற சதாசிவம் நாகம்மா தம்பதியரின்  அன்பு மகளும், காலஞ்சென்ற தேவசகாயம் தொம்மாஸியா அவர்களின் அன்பு மருமகளும், தேவசகாயம் அலோசியஸின் அன்பு மனைவியும், ஜெனஸ்றீன், சரண்ராஜன், ஜெனித்தா, அபிராஜ்  ஆகியோரின் பாசமிகு தாயாரும், உமாலினி, நிசாந்தன் ஆகியோரின்...

புதன், 28 நவம்பர், 2018

ஆண் ஒருவரின் சடலம் உருக்குலைந்த நிலையில் கிணற்றிலிருந்து மீட்பு

திருகோணமலை – நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வள்ளுவர் கோட்டம் பகுதியில் கிணற்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது.பொலிஸ் அவசர அழைப்பு இலக்கமான 119 இலக்கத்திற்கு பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்து அங்கு சென்ற பொலிஸார் சடலத்தை பார்வையிட்டதன் பின்னர் திருகோணமலை நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தியுள்ளனர் இதனையடுத்து திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் சமீலா குமாரி ரத்நாயக்க சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை பார்வையிட்டதுடன், சட்ட...

செவ்வாய், 27 நவம்பர், 2018

மரண அறிவித்தல் திருமதி. புஸ்பரூபன் ஜெயலலிதா.27-11-18

யாழ். கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Castel Goffredo ஐ வசிப்பிடமாகவும் கொண்ட புஸ்பரூபன் ஜெயலலிதா.(லலிதா)அவர்கள் 27-11-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னார், கொடிகாமம் ஆத்தியடி ஒழுங்கை கச்சாய் வீதியைச் சேர்ந்த காலஞ்சென்ற கந்தையா வேலுப்பிள்ளை, இராமுப்பிள்ளை பரமேஸ்வரி(இத்தாலி) தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும், மீசாலை வடக்கைச் சேர்ந்த சிவபாதசுந்தரம் சிவஞானறஞ்சிதம்  தம்பதிகளின் அன்பு மருமகளும், வேலாயுதம்பிள்ளை புவனேஸ்வரி(சுவிஸ்)...

ஞாயிறு, 25 நவம்பர், 2018

ரயிலில் மோதி யாழ் முகமாலையில் ஒருவர் மரணம்

யாழ் செய்திகள்:யாழ். முகமாலையில் ரயில்க் கடவையை கடக்க முற்பட்ட ஒருவர் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். அவரது சடலம் சிதைவடைந்ததால் அடையாளம் காணமுடியவில்லை என்று தெரிவித்துள்ளனர். மேலும், இச்சம்பவம் முகமாலை இராணுவச் சோதனைச் சாவடி முன்பு இருந்த இடத்தில் இன்று நண்பகல்  இடம்பெற்றது.  கொழும்பிலிருந்து சென்ற கடுகதி ரயிலுடனேயே இந்த விபத்து இடம்பெற்றுதாக தெரிவித்துள்ளனர். மேலும் இச்சம்பவம் தொடர்பில்...

சனி, 24 நவம்பர், 2018

பொன்னாலை மோட்டார் சைக்கிள் விபத்தில்து

பொன்னாலைப் பாலத்தில் நேற்று மாலை 6.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தொன்றில் அர்ச்சகர் ஒருவர் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. தனியார் பேருந்து, மோட்டார் சைக்கிள், துவிச்சக்கரவண்டி என்பன இந்த விபத்தில்  சிக்கிக்கொண்டன. காரைநகரில் உள்ள ஆலயம் ஒன்றில் பூசை செய்துவிட்டு பாலத்தால் மோட்டார் சைக்கிளில் திரும்பிக்கொண்டிருந்த அர்ச்சர், கடற்றொழிலுக்குச் சென்றுவிட்டு துவிச்சக்கரவண்டியில் வந்துகொண்டிருந்தவரை முந்திச்செல்ல முற்பட்டார். இதன்போது...

வியாழன், 22 நவம்பர், 2018

பாழடைந்த வீடொன்றில் யாழில் ஆணின் சடலம் மீட்பு

சிறுவர் நீதிமன்றத்திற்கு அருகிலிருந்து இன்று காலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியிலுள்ள பாழடைந்த வீடொன்றில் இருந்தே சடலம் மீட்கப்பட்டுள்ளது. கடற்தொழிலை மேற்கொள்ளும் யாழ். கொய்யாத்தோட்ட பகுதியை சேர்ந்த விமலதாஸ் ஜோசப் ஜெபர்சன் (33 வயது) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  அப்பகுதி மக்கள் சடலம் தொடர்பில் வழக்கிய தகவலின் அடிப்படையிலேயே யாழ். பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். ...

திங்கள், 19 நவம்பர், 2018

கொடூரமாக யாழில் அடித்து கொல்லப்பட்ட நாய்

யாழ்ப்பாணம், திருநெல்வேலி பகுதிக்குள் வசிக்கும் நபர் நாய் ஒன்றை அடித்துக் கொலை செய்து, வீதியில் உள்ள குப்பைகளுடன்  போட்டு சென்றுள்ளார். மாநகர சபை எல்லைப் பகுதிக்குள் உள்ள திருநெல்வேலியில் கடந்ந வாரம் ஒருவர் தனது வீட்டு வளவிற்குள் பிரவேசித்த தெரு நாயை  அடித்துக் கொலை செய்துள்ளார்.  அவ்வாறு கொல்லப்பட்ட நாயை ஓர் பையில் பொதி செய்து மாநகர சபையினால் கழிவு சேகரிக்கும் இடத்தில்  வீசிச் சென்றுள்ளார்.  குறித்த சம்பவம் இடம்பெற்று...

ஞாயிறு, 18 நவம்பர், 2018

நாட்டில் காலநிலையில் ஏற்படப்போகும் மாற்றம்

அடுத்த சில நாட்களில், குறிப்பாக இன்றும் நாளையும் நாடு முழுவதும் மழையுடன் கூடிய வானிலை நிலைமை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய, சப்ரகமுவ, ஊவா வடமத்திய மற்றும்...

அமரர். துரையப்பா பாக்கியநாதன 2ம் ஆண்டு நினைவஞ்சலி

மலர்வு  ,21,02. 1951 -ஆண்டவன் அடியில்,18 ,11 2016 திதி: 27.11.2018 அச்சுவேலி தோப்பை பிறப்பிடமாக்கவும் வட்டுக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த  (சட்டத்தரணியும் பிரசித்த நொத்தாரிசும் சட்ட ஆணையாளரும்.ஆவார்)  அமரர். துரையப்பா பாக்கியநாதன்அவர்களின்  2ம் ஆண்டு.நினைவஞ்சலி 18 ,11 2018 இன்று   காலங்கள் கடந்தாலும் விழிகளில் என்றும் உங்கள் உருவம் தான் அன்பென்ற சொல்லின் அர்த்தமும் மறந்துவிட்டது உங்கள் மறைவுடனே உண்ணும்...

சனி, 17 நவம்பர், 2018

கஜா புயலால் யாழில் 16 வீடுகள் முற்றாக சேதம்

யாழ்ப்பாணத்தில் கடந்த 24 மணிநேரத்தில் தாக்கிய கஜா புயல் தாக்கத்தினால் 15 பிரதேசங்களை சேர்ந்த 770 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த இரவு தொடக்கம் இன்று இரவு வரை கஜா புயல்தாக்கம் வடக்கில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள 15 பிரதேச செயலாளார் பிரிவுகளில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் 770 குடும்பங்களை சேர்ந்த 2893 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மக்களின் 16 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் 480 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக...

பசு மாடு , மறி ஆடுகளை இறைச்சியாக்குவதற்கு கட்டுபாடுகள் யாழில்

யாழ்.மாநகர சபை எல்லைக்குள்  பசு மாடு , மறி ஆடுகளை இறைச்சியாக்குவதற்கு கட்டுபாடுகள்   விதிக்கபட்டு உள்ளன. யாழ்.மாநகர சபை கூட்டத்தில் நேற்றைய தினம் பசுமாடுகள் மற்றும் மறி ஆடுகளை இறைச்சியாக்குவோர் அவற்றுக்கு மருத்துவ சான்றிதழ் பெற வேண்டும். மாடு கன்று போடாது எனவும் ஆடு குட்டி போடாது எனவும் மருத்துவ சான்றிதழ் பெற்றால் மாத்திரமே அவற்றை இறைச்சியாக்கலாம் என தீர்மானிக்கப்பட்டு உள்ளது. செய்திகள் நிலாவரை.கொம் செய்திகள் >>> ...

வெள்ளி, 16 நவம்பர், 2018

போதை பொருள் யாழ் மாணவனிடம் நீதிமன்றம் தண்டனை

ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த பாடசாலை மாணவனுக்கு ஒரு மாத கால சிறைத் தண்டனை வழங்கி யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன்  நேற்று தீர்ப்பளித்தார். ஒரு மாத கால சிறைத் தண்டனையை அனுபவிக்க மாணவனை சான்று பெற்ற சீர்திருத்தப் பாடசாலையில் சேர்ப்பிக்குமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு நீதிமன்றம்  கட்டளை வழங்கியது. ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் யாழ்ப்பாண நகர் பகுதியில் 18 வயதுடைய...

புதன், 14 நவம்பர், 2018

சவுக்கடியைச் சேர்ந்த பாடசாலைக்கு சென்ற சிறுமியை காணவில்லை

 11 வயது  சிறுமி ஒருவர் 14,11,2018, புதன்கிழமை காலை பாடசாலைக்கு சென்ற நிலையில் காணாமல் போயுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர் சவுக்கடியைச் சேர்ந்த ஜேசுதாஸ் ஜென்சிசா என்ற சிறுமியே  காணாமல் போயுள்ளார் குறித்த சிறுமி வழமைபோல சவுக்கடியிலுள்ள தனது  வீட்டில் இருந்து மயிலம்பாவெளியிலுள்ள விபுலானந்தர் பாடசாலைக்கு  இன்று காலை 7.00 மணிக்கு துவிச்சக்கரவண்டியில் சென்றவர் பிற்பகல் 2.00 மணிக்கு பாடசாலை முடிவடைந்தும் வீடு திரும்பாததையடுத்து...

மயங்கிய நிலையில் முல்லை. காட்டுப்பகுதியில் மீட்க்கப்பட்ட யுவதி

முல்லைத்தீவு - பெருங்காட்டுப்பகுதியில், மயங்கிய நிலையில் இருந்த யுவதி ஒருவர் நேற்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார்  தெரிவித்துள்ளனர். ஒட்டுசுட்டான் - வெள்ளிமலை ஏற்றக் காட்டுப்பகுதியில் பெண் ஒருவர் கை வெட்டப்பட்டு மயங்கிய நிலையில் காணப்படுவதாக முள்ளியவளை பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த யுவதியை மீட்டு முல்லைத்தீவு - மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். மேலும் சம்பவ இடத்தில் இருந்து...

தனது 17 வயது மகளை ஏலத்தில் விட்ட தந்தை

தெற்கு சூடானில் 17 வயது மகளை தந்தை திருமணத்திற்காக ஏலத்தில் விட்ட சம்பவம் தொடர்பான புகைப்படம் சமூகவலைத்தளங்களில்  வைரலாகி வருகிறது. தெற்கு சூடானில் பெரும்பாலும் Dinka என்ற கலாச்சாரம்  பின்பற்றப்பட்டு வருகிறது. அதாவது பெற்றோர் தங்கள் பெண்களை ஏலத்தில் விடுவார்களாம், அதில் இறுதியாக யார் அதிகமாக பொருட்களோ, பணமோ கொடுக்கிறார்களோ அவர்களுக்கு அந்த பெண் திருமணம் செய்து  வைக்கப்படும்.  அந்த வகையில் சமீபத்தில் தன்னுடைய 17 வயது...

திங்கள், 12 நவம்பர், 2018

வடமராட்சியில் குடும்பஸ்தர் மின்சாரம் தாக்கி பலி

வீட்டில் தண்ணீர் இறைக்கும் இயந்திரத்தை திருத்த முற்பட்ட நபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.இந்தச் சம்பவம் நெல்லியடி கரணவாய் பகுதியில் இன்று ர,12.11,2018, இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்த மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. நிலாவரை.கொம் செய்திகள் >>> ...

ஞாயிறு, 11 நவம்பர், 2018

யாழ் மாணவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக பலி

இரத்தினபுரி பலாங்கொடை, பான் குடா ஓயாவில் நீராட சென்ற சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் நீரில் மூழ்கி  உயிரிழந்துள்ளனர்.  இன்று பிற்பகல் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் .உயிரிழந்த மூவரின் விபரங்கள் வெளியாகியுள்ளது. உயிரிழந்தவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.  குறித்த சம்பவத்திர் 25 வயதான செல்வரட்ணம் திசான் 23 சரவணபவன் கோபிசன்  மற்றும் 25 வயதான கோபாலகிருஷ்ணன் சாரங்கன்  ஆகிய மூவருமே உயிரிழந்தனர். உயிரிழந்த...

சனி, 10 நவம்பர், 2018

மரண அறிவித்தல் திருமதி மாணிக்கவாசகர் நாகபூசணி அம்மாள். 09,11,18

மண்ணில் : 22 மார்ச் 1942 — விண்ணில் : 9 நவம்பர் 2018 யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், நவக்கிரி நிலாவரைசந்தியை வசிப்பிடமாகவும் கொண்ட நாகபூசணி அம்மாள் மாணிக்கவாசகர் அவர்கள் 09-11-2018 வெள்ளிக்கிழமை அன்று சிவபாதம்  அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு புதல்வியும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற மாணிக்கவாசகர் அவர்களின் அன்பு மனைவியும், இராகுலன்...

வெள்ளி, 9 நவம்பர், 2018

இளைஞர் ஒருவர் கைதடிப் பகுதியில் சடலமாக மீட்பு

தனிமையில் இருந்த இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கைதடி கிழக்கை சேர்ந்த இராசையா ரூபதர்மன் (வயது 32) என்ற இளை ஞனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்டவரது சகோதரர்கள் கொழும்பில் வசித்து வருகின்றனர்.  இந்த நிலையில் தீபாவளிதினத்தன்று உறவினர் வீட்டில் மதிய உணவு அருந்திவிட்டு சென் றுள்ளார். இரவு உணவு  உண்பதற்கு வரவில்லை.  இந்த நிலையில் அடுத்த நாள்காலை அவரது வீட்டில் சடலமாக காணப்பட்டுளளார். உடனடியாக பொலிஸாருக்கு தகவல்...

புதன், 7 நவம்பர், 2018

இரு இளைஞர்கள்! கிளிநொச்சியில் பரிதாபமாகப் பலி

 ! கிளிநொச்சி ஏ-9 வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இரு இளைஞர்கள் பலியாகியுள்ளனர். நேற்று மாலை 7 மணியளவில்  இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இ தென்னிலங்கையிலிருந்து  யாழ் நோக்கி சென்றுக்கொண்டிருந்த எரிபொருள்தாங்கி  வாகனமும், பரந்தன் பகுதியிலிருந்து கிளிநொச்சி  நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும்   விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்களும்...

திங்கள், 5 நவம்பர், 2018

அமரர் நாகலிங்கம் ஆனந்தலிங்கம் 2ம் ஆண்டு நினைவஞ்சலி..05.11.18

 ஆண்டவன் அடியில் : 01,10,2017  யாழ்  அச்சுவேலி தோப்பை பிறப்பிடமாக்கவும்  நவற்கிரியையும்   தோப்பையும்   வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் திரு நாகலிங்கம் ஆனந்தலிங்கம் அவர்களின் 2ம் ஆண்டு. 01.11.2018 இன்று நினைவஞ்சலி ஆலம் விருட்சம் போல் வேரூன்றி விழுது விட்டு  கிளை பரப்பி நிழல் தந்த எங்கள் அன்பு அப்பாவே விதியென்னும் இரண்டெழுத்து உங்களை வேரோடு சாய்த்து ஆண்டொன்று ஆனதே அப்பா ஆனாலும் ஆறுமோ எங்கள் துயரம்...