siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 3 ஆகஸ்ட், 2020

இலங்கையர் இத்தாலியில் இடம்பெற்ற விபத்தில் பரிதாபமாகப் பலி


இத்தாலியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பாதுவா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கடந்த 29-07-20.ஆம் திகதி பாதுவா என்ற பிரதேசத்தில் விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.வெரோனா நகரத்தில் பொருட்களை ஏற்றிச் செல்லும் சாரதியாக செயற்பட்ட 51 வயதான பியல் தம்மிக்க ஜயசிங்க என்பவரே உயிரிழந்துள்ளார்.
பொருட்களை ஏற்றிச் செல்லும் போது எதிர்பக்கத்தில் வந்த பாரிய ட்ரக் வண்டி ஒன்று நேருக்கு நேர் மோதியமையினால் இந்த
 விபத்து ஏற்பட்டுள்ளதாக பாதுவா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இதில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த குறித்த நபர் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் அனுராதபுரம் பிரதேசத்தை சேர்ந்த ஒருவராகும். அவர் கடந்த 20 வருடங்களுக்கு 
அதிகமான காலம் இத்தாலியில் பணி செய்து வருகின்றார்.உயிரிழந்தவரின் சடலம் பாதுவா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக
 தெரிவிக்கப்படுகின்றது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக