siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2020

நாகர்கர்னூல் மாவட்டத்தில் நீர் மின் நிலைய தீ விபத்து: 6 பேர் பலி

தெலுங்கானாவில் நாகர்கர்னூல் மாவட்டத்தில் ஸ்ரீசைலம் அணை அமைந்துள்ளது.  இதில் பூமிக்கடியில் செயல்பட்டு 
வந்த நீர்மின் நிலையத்தில்.20-08-20. நேற்றிரவு திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.  இதனை தொடர்ந்து  தீ விபத்தும் ஏற்பட்டு உள்ளது.   தகவல் கிடைத்ததும் 
ர்னூல் நகரில் உள்ள தீயணைப்பு 
நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு 
தீயணைப்பு வீரர்கள் சம்பவ பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் நிகழ்விடத்தி
ற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் இருந்து 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், விபத்தில் சிக்கிய 3 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
முதல்கட்ட தகவல்களின்படி, ஸ்ரீசைலம் அணையின் இடதுபக்க கரையில் பூமிக்கடியில் செயல்பட்டு வந்த நீர்மின் நிலையத்தில் ஏற்பட்ட குறைந்த மின் அழுத்தம் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக 
கூறப்படுகிறது. 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக