siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2020

கோர விபத்து வாழைச்சேனையில் சிறுவன் பரிதாபமாகப் பலி

வாழைச்சேனை- வாகனேரிப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்..20-08-20. (வியாழக்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில், கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் வாகனேரி சுற்றுலா விடுதியைச் சேர்ந்த நடராஜா தனுஜன் (வயது 16) என்பவரே 
உயிரிழந்துள்ளார்.
பிரதேசத்தில் இடம்பெற்றுவரும் ஆலய உற்சவத்தில் கலந்து கொண்டுவிட்டு வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார். இதன்போது வாகனம் வேக கட்டுப்பாட்டினை இழந்து பாதையை விட்டு விலகி விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.சடலம் பிரேத
 பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் குறித்த விபத்து தொடர்பாக வாழைச்சேனை பொலிசார் மேலதிக விசாரணைகளை 
முன்னெடுத்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக