siruppiddy

18

siruppiddy

unkal

unkal

சனி, 29 ஆகஸ்ட், 2020

பெருமளவு தங்கத்துடன் அனலைதீவில் கடற்படையினரால் இருவர் கைது

 

யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவுக்கு சட்டத்துக்குப் புறம்பாக கடல் வழியாக பெருந்தொகை தங்கத்தை கடத்த முற்பட்ட இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுமார் 6 கோடியே 20 லட்சம் ரூபாய் பெறுமதியான 5 கிலோ 500 கிராம் நிறையுடை தங்கத்தை கடத்த முற்பட்ட போது சந்தேக நபர்கள் இருவரும் இன்று (29) அதிகாலை அனலைதீவு கடற்பரப்பில் வைத்துக் கைது செய்யப்பட்டனர் என்று கடற்படையினர்
 தெரிவித்தனர்.
மாதகலைச் சேர்ந்த இருவரும் தரகுப் பணத்துக்காக இந்தியாவுக்கு தங்கம் கடத்த முற்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இருவரும் விசாரணைகளின் பின்னர் யாழ்ப்பாணம் சுங்கத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்
நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக