siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2020

மதுபானப் பிரியர்களுக்கும் மதுவரித் திணைக்களத்தின் அதிரடி அறிவிப்பு

குடித்துவிட்டு சுற்றுப்புறங்களில் மதுபான போத்தல்கள் மற்றும் பியர் ரின்களை வீசியெறிவதால் சூழல் மாசடைகின்றது.எனவே, இதனை கட்டுப்படுத்தும் வகையில் புதிய முறையொன்றை 
மதுவரித்திணைக்களம் நடைமுறைப்படுத்த உள்ளது.கடந்த வருடம் 300 மில்லியன் மதுபான போத்தல்கள் மற்றும் 160 மில்லியன் பியர் கான்களை வாங்கியதாக 
மதுவரித்திணைக்களம் தெரிவித்துள்ளது.புதிய முறையின்படி வீதியோரங்களில் மதுபான போத்தல்களை வீசியெறிவதை தடுக்கும் வகையில் அவற்றை திருப்பி ஒப்படைக்க மதுவரி திணைக்களம் ஊக்குவிக்கிறது.வீதியோரங்களில் 175 மில்லி லீற்றர் மதுபான போத்தல்கள் பெருமளவில் வீசியெறிப்படுவதாக 
வெளியான தகவலை அடுத்தே மதுவரித்திணைக்களம் புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.புதிய முறையின் கீழ் முதல் கட்டமாக, எந்தவொரு மதுபான விற்பனை நிலையத்திலும் திருப்பி ஒப்படைக்கப்படும் ஒவ்வொரு வெற்று 175 மில்லி லீற்றர் அல்கஹோல் போத்தலுக்கும் பணத்தைத் திரும்ப வழங்க மதுவரித்திணைக்களம்
 தீர்மானித்துள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக