siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 20 ஆகஸ்ட், 2020

ஐரோப்பா செல்ல முயன்ற அகதிகள் கப்பல் லிபியா நடுக்கடலில் மூழ்கி 45 பேர் பலி

 

லிபிய கடல் எல்லையில் கப்பல் ஒன்று மூழ்கியதில் அதில் இருந்த ஐந்து குழந்தைகள் உள்பட 45 குடியேறிகள் மற்றும் அகதிகள் உயிரிழந்துள்ளனர் என்று ஐநா அகதிகள் உயர் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு நடந்த மிகவும் மோசமான 
கப்பல் விபத்து இது.
ஸ்வாரா நகரின் கடற்கரையோரம் எஞ்சின் வெடித்து இந்த கப்பல் விபத்துக்குள்ளானபோது, அதில் 80க்கும் மேற்பட்டவர்கள் இருந்தார்கள் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
விபத்திலிருந்து உயிர் தப்பிய 37 பேர் உள்ளூர் மீனவர்களால்
 மீட்கப்பட்டனர்.
தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்று ஐநா அகதிகள் உயர் ஆணையம் மற்றும் ஐநாவின் சர்வதேச குடிப்பெயர்வு அமைப்பு ஆகியவை வலியுறுத்தியுள்ளன.
இதற்கென தனியான தேடுதல் மற்றும் மீட்பு பொறிமுறை இல்லாவிட்டால் மத்தியத் தரைக்கடல் பகுதியில் மேலும் பல உயிரிழப்புகள் நிகழும் என்றும் இந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன.
லிபியாவில் இருந்து கடல் கடந்து ஐரோப்பாவுக்குள் நுழைய முயன்ற 300க்கும் மேற்பட்டவர்கள் இந்த ஆண்டு உயிரிழந்துள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது. எனினும் உயிரிழப்புகளின் உண்மையான எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கக்கூடும்.
லிபியாவில் ஆட்சியிலிருந்த மும்மார் கடாஃபி 2011ஆம் ஆண்டு ஆட்சியிலிருந்த நீக்கப்பட்டு கொல்லப்பட்ட பின்னர், குடியேறிகள் ஐரோப்பாவுக்குள் நுழைய முயலும் முக்கிய 
நாடாக லிபியா உள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக