siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2020

கொரோனாவில்இலங்கையில் நிகழ்ந்த 12வது மரணம் சுகாதார அமைச்சின் அறிவிப்பு


இலங்கையில் கொரேனா தொற்று காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த 47 வயது பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி.23.08-20. இன்று அதிகாலை
 உயிரிழந்ததாக
 அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.இந்தியாவில் இருந்து வந்த நிலையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பெண்ணே
 உயிரிழந்துள்ளார்.குறித்த பெண்
 புற்றுநோய் மற்றும் இருதய நோயாலும் பீடிக்கப்பட்டிருந்தாக தெரிவிக்கப்படுகிறது. இதுவரையில் இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக 
அதிகரித்துள்ளது.




0 கருத்துகள்:

கருத்துரையிடுக