siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 21 ஜூன், 2024

மரண அறிவித்தல் செல்லத்துரை கணேஷமூர்த்தி

துயர் பகிர்வு-மலர்வு -21-12-1945.-உதிர்வு - 19-06-2024
யாழ். அச்சுவேலியை பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்ட ஆவரங்கால்  பாடசாலையின் ஓய்வுநிலை ஆசிரியர் 
செல்லத்துரை கணேஷமூர்த்தி அவர்கள் 19-0-/2024 புதன்கிழமை அன்று   இறைவனடி சேர்ந்தார் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னார் எமது பாடசாலையின் விவசாய விஞ்ஞான 
ஆசிரியராகவும் பகுதித் தலைவராகவும் சிறப்பான ஆசிரிய பணியை ஆற்றி இருந்தார். பாடசாலை மீதும் மாணவர்கள் மீதும் அதீத அன்பு கொண்டிருந்தார். 
சென்ற வருடத்திலும் பாடசாலை 
நிகழ்வில் கலந்து 
சிறப்பித்திருந்தார். அன்னாரின் இழப்பு பேரிழப்பாகும். 
அமைதியான சுவாவவும் மென்மையான பேச்சும் அனைவரையும் அணைக்கும் பண்பும் பிறருக்கு உதவும் நல்மனமும் அன்னார் மீது 
அனைவருக்கும் அதிக பிரியத்தை ஏற்படுத்தி இருந்தது.
அன்னார் பாடசாலைக்கு ஆற்றிய சேவைகளை நினைவு கூர்ந்து அஞ்சலிக்கின்றோம். அன்னாரின் ஆத்மா சித்தி விநாயகன் பாதங்களில் அமைதி கொள்ளட்டும்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!!!
தகவல் குடும்பத்தினர் 



வியாழன், 20 ஜூன், 2024

காக்கைதீவில் உள்ள வீடொன்றில் மனைவியை எரித்துக் கொன்ற கணவனுக்கு மரணதண்டனை

 வீடொன்றில் மனைவியை எரித்துக் கொன்ற கணவனுக்கு 9 வருடங்களின் பின்னர், விசாரணைகள் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து
 நேற்று தீர்ப்பளித்துள்ளது
கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20 ஆம் திகதி மானிப்பாய் காக்கைதீவில் உள்ள வீடொன்றில் மனைவியின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொன்ற குற்றச்சாட்டில், அவருடைய 
கணவர் கைது 
செய்யப்பட்டிருந்தார். 2019 ஆம் ஆண்டு முதல் மேல் நீதிமன்றில் விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது.
என்பது குறிப்பிடத்தக்கது





 

மரண அறிவித்தல் பொன்னுத்துரை முருகதாஸ் ( தாஸ் )

துயர் பகிர்வு-உதிர்வு - 18-06-2024
யாழ். ஆவரங்கால் சங்கணாவத்தை வீதியை பிறப்பிடமாகவும்   தற்போது லண்டனை  வாழ்விடமாகவும் கொண்ட. 
அமரர். பொன்னுத்துரை முருகதாஸ் ( தாஸ் )
   அவர்கள் 18-06-2024. செவ்வாய்க்கிழமை.அன்று  இறைபாதம் அடைந்தார்.
  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னார். காலஞ்சென்ற. 
திரு திருமதி. பொன்னுத்துரை பாலம்பிகை ( ஆசிரியை)  தம்பதியரின் அன்பு மகனும். 
திரு. திருமதி. யோகராஜா அன்னலட்சுமி தம்பதியரின் அன்பு மருமகனும். 
சுதா அவர்களின்  பாசமிகு கணவரும். 
நதீஷின் பாசமிகு தந்தையும். 
சாந்தி, ராசன் ( சண் சுவிஸ் ) சுகந்தி, ஜெயந்தா( சுவிஸ்) ஜெயா ( அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு சகோதரனும். 
கரன்( அவுஸ்ரேலியா) சுதர்சினி  ஆகியோரின் அன்பு மைத்துணரும் ஆவார். 
அன்னாரின் இறுதிக் கிரிகைகள் விபரம் பின்னர் அறிவிக்கப்படும். 
தொடர்புகட்க்கு. 
சுதா மனைவி
07737 197042
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!!!
தகவல் குடும்பத்தினர் 

புதன், 19 ஜூன், 2024

துரித உணவகத்தில் டெல்லியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு ஒருவர் பலி

டெல்லியில் Burger King துரித உணவகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேற்கு டெல்லியின் ரஜோரி கார்டனில் Burger King துரித உணவகம்
 ஒன்று இயங்கி வருகிறது. இங்கு நேற்றிரவு கையில் துப்பாக்கியுடன் மர்ம நபர்கள் திடீரென நுழைந்தனர். அங்கிருந்த நபர் ஒருவரை குறைந்தது 15 முறை
 துப்பாக்கியால் சுட்டனர்.
பின்னர் வெளியே காத்திருந்த தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து தாக்குதல்தாரிகள் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
குண்டு காயம்பட்ட படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் கொல்லப்பட்ட நபரின் பையில் இருந்து பேருந்து பயணச்சீட்டு, போன் சார்ஜரை மட்டும் கைப்பற்றினர். ஆனால் செல்போன், அடையாள அட்டைகள் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், பலியானவரின் பெயர் அமன் என்றும், ஒரு கும்பல் போட்டியே கொலைக்கு வழிவகுத்ததாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
என்பது குறிப்பிடத்தக்கது 




 

செவ்வாய், 18 ஜூன், 2024

மரண அறிவித்தல் அமரர் கந்தையா ஜெயநிதி

துயர் பகிர்வு
யாழ் அச்சுவேலி தெற்கு ஸ்ரீ விக்கினேஸ்வரா வீதியைப் பிறப்பிடமாகவும், பயிற்றோலை அச்சுவேலியை வசிப்பிடமாகவும், மற்றும் கொழும்பை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட 
அமரர்  கந்தையா ஜெயநிதி அவர்கள்  இறைவனடி சேர்ந்தார் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!!!
தகவல் குடும்பத்தினர் 

திங்கள், 17 ஜூன், 2024

படகு உடைந்து நடுக்கடலில் மூழ்கியதில் மாயமான மற்றொரு தமிழக மீனவரின் சடலம் மீட்பு

 படகு உடைந்து நடுக்கடலில் மூழ்கியதில் மாயமான மற்றொரு தமிழக மீனவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் - மண்டபம் வடக்கு மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற விசைப்படகு நடுக்கடலில் படகின் அடிபகுதியில் 
உடைப்பு ஏற்பட்டு நடுக்கடலில் படகு மூழ்கியதில் இருவர் உயிருடன் மீட்கப்பட்டனர். மேலும் இரண்டு மீனவர்கள் சடலமாக கடந்த சனிக்கிழமை மீட்கப்பட்டனர்.
படகில் சென்று மாயமான கலீல் ரகுமான் என்ற மீனவரை தொடர்ந்து மரைன் போலீசார் தேடி வந்த நிலையில் உடைந்து. கடலுக்குள் மூழ்கிய படகின் உள்பகுதியில் கலீல் ரகுமான் உடல் சடலமாக
 கிடைத்துள்ளது.
கலீல் ரகுமான் உடலை மீட்ட மரைன் போலீசார் மண்டபம் வடக்கு மீன்பிடி துறைமுகத்திற்கு எடுத்து வந்துள்ளனர்.என்பது குறிப்பிடத்தக்கது



 

ஞாயிறு, 16 ஜூன், 2024

நாட்டில் கிளிநொச்சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீவிபத்து

நாட்டில் கிளிநொச்சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் திடீரென தீப்பற்றிய மோட்டார் சைக்கிளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  
எரிபொருள் நிரப்பு ஊழியர்கள் தீவிரமாக செயற்பட்டு ஆபத்தியிருந்து பாதுகாத்தனர்.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

சனி, 15 ஜூன், 2024

நாட்டில் காத்தான்குடியில் துப்பாக்கியை காட்டி மிரட்டி நகை மற்றும் பணம் கொள்ளை

காத்தான்குடி அஹமட் வீதி பகுதியில் வீடொன்றில் இருந்த பெண்ணை துப்பாக்கி காட்டி மிரட்டி தங்க நகை மற்றும் பணத்தை இனம்தெரியாத நபர் ஒருவர் கொள்ளையடித்து சென்றுள்ளார். 
சந்தேக நபர் துப்பாக்கியாலும் கைகளாலும் பெண்ணை தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 தாக்குதலில் காயமடைந்த 32 வயதுடைய பெண் காத்தான்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.  
குறித்த சந்தேக நபர் பெண்ணின் பையிலிருந்த தங்கப் பொருட்களையும் 20 இலட்சம் ரூபா பணத்தையும் திருடிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 
இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில்,ஆரியம்பதி கிழக்கைச் சேர்ந்த 43 வயதுடைய ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.என்பது குறிப்பிடத்தக்கது

வெள்ளி, 14 ஜூன், 2024

நாட்டில் வஸ்கடுவ கரையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

நாட்டில் களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிறிய வஸ்கடுவ கரையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.  
பொலிஸ் அவசர அழைப்பு 119க்கு கிடைத்த தகவலுக்கு 
அமைய நேற்று (13) காலை சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 
உயிரிழந்தவர் 05 அடி 02 அங்குல உயரம் கொண்ட மெலிந்த நபர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். தலைமுடி சுமார் 04 அங்குலமாக வளர்ந்துள்ளதாகவும், மேல் உடலில் பழுப்பு நிற சட்டை (T-shirt) அணிந்திருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.  
சடலம் நாகொட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை வெளியிடப்படவில்லை. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. என்பது குறிப்பிடத்தக்கது




 

வியாழன், 13 ஜூன், 2024

இந்தியர்கள் உள்பட குவைத் தீ விபத்து வெடிப்பிற்கான காரணம் கண்டுபிடிப்பு

குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி கவர்னரகத்துக்கு உட்பட்ட மங்காப்பில் உள்ள 6 மாடிகளைக் கொண்ட கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்தியர்கள் உள்பட 49 பேர் பலியாகியுள்ளனர்.
மேலும் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.
தமிழகத்தில் ஏற்கனவே 5 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் இருவர் இறந்துள்ளதுள்ளனர். 
இதன்மூலம், தமிழகத்தை சேர்ந்தவர்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்த அதிர்ச்சியூட்டும் உண்மை தகவல்கள் வெளிவந்துள்ளன. குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்துக்கு சிலிண்டர் வெடித்ததே காரணம் என அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
தரைதளத்தில் படிக்கட்டை ஒட்டிய பராமரிப்பு அறையில் விதிகளை மீறி 6க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சிலிண்டர்கள் வெடித்ததால் ஏற்பட்ட கரும்புகை, கட்டடம் முழுவதையும் உட்புறமாக சூழ்ந்ததாக யாராலும் தப்பிக்க 
முடியவில்லை.
அதிகபட்சமாக 100 பேரை மட்டுமே தங்க வைக்க இட வசதி உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 190 பேர் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. 
விபத்து நிகழ்ந்த அடுக்குமாடி குடியிருப்பு அடங்கிய அஹமதி மாநகராட்சி அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
என்பது குறிப்பிடத்தக்கது


 


புதன், 12 ஜூன், 2024

யாழ் புன்னாலைக்கட்டுவனில் இராணுவ வாகனம் மோதி இரு இளைஞர்கள் படுகாயம்

யாழ் புன்னாலைக்கட்டுவனில் இராணுவ வாகனமும் , மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பலாலி இராணுவ முகாமை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த, இராணுவத்தினருக்கு சொந்தமான பௌசர் வாகனம் , புன்னாலைக்கட்டுவன் பகுதியில் மோட்டார் சைக்கிளுடன் மோதி 
விபத்துக்குள்ளானது.
அதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களும் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.என்பது குறிப்பிடத்தக்கது


செவ்வாய், 11 ஜூன், 2024

ஆப்பிரிக்காவில் இருந்துவந்த அகதிகள் படகு ஏமனில் விபத்து பலர் உயிரிழந்தனர்.

ஆப்பிரிக்காவில் இருந்து நூற்றுக்கணக்கான அகதிகளை ஏற்றிக்கொண்டு கடல்வழியாக பயணித்துக்கொண்டிருந்த பயணிகள் படகு மத்திய கிழக்கு நாடான ஏமன் நாட்டின் ஏடன் பகுதிக்கருகே வந்துகொண்டிருந்தபோது கடல் சீற்றத்தால் நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 38 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த கோர விபத்தில் 100 பேர் கடலில் தொலைந்த நிலையில் அவர்களை தேடும் பனி தொடங்கியுள்ளது.
அகதிகள் வந்த படகானது ஏடனின் கிழக்கில் உள்ள ஷாப்வா பகுதி கடற்கரையை நோக்கி மிக அருகே வந்துகொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்து நடந்த இடத்துக்கு அருகில் இருந்த உள்ளூவர் மீனவர்கள் உடனே விரைந்து கடலில் தத்தளித்த 78 அகதிகளை மீட்டனர். இன்னும் சுமார் 100 பேர் கடலில் தொலைந்தனர் என்று அம்மீனவர்கள் 
தெரிவித்தனர்.
இந்த விவகாரம் குறித்து ஐ.நா வுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டையும் நாட்டையும் இழந்து நிர்கதியில் வேற்று தேசம் நோக்கி பயணிக்கும் அகதிகள் சாரை சாரையாக கடலில் மூழ்கி இறக்கும் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
 ஐ.நா வின் அறிக்கைபடி கடந்த ஒரு வருடத்தில் மற்றும் ஆப்பிரிக்காவில் இருந்து ஏமன் நாட்டுக்கு சுமார் 97,000 அகதிகள் வந்துள்ளனர்.
என்பது குறிப்பிடத்தக்கது





 

திங்கள், 10 ஜூன், 2024

நாட்டில் கொள்ளுப்பிட்டியில் பல வாகனங்களுடன் மோதி விபத்துக்குள்ளான பேருந்து

கொள்ளுப்பிட்டியில் பேருந்து ஒன்று பல வாகனங்களுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.  
அலுவலக ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 பேருந்தின் பிரேக் பழுதானதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இரண்டு கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் பஸ் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
.   என்பது குறிப்பிடத்தக்கது 







 

ஞாயிறு, 9 ஜூன், 2024

நாட்டில் டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு

நாட்டில் கடந்த ஏழு நாட்களில் மொத்தம் 700 வழக்குகள் பதிவாகியுள்ளன, இது டெங்கு வெடிப்பில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் குறிக்கிறது.
 வழக்குகளின் அதிகரிப்புக்கு மழை நிலைமைகள் மற்றும் வெள்ள நீர் வடிந்து வருவதால் கொசுக்கள் பெருகும் இடங்களை 
உருவாக்குகிறது. 
ஜூன் 07 வரை, 2024 ஆம் ஆண்டில் மொத்தம் 25,619 வழக்குகள் பதிவாகியுள்ளன, இதில் அதிகபட்சமாக கொழும்பு மாவட்டத்தில் 5,554 பேரும், மேல் மாகாணத்தில் 9,348 பேரும் பதிவாகியிருந்தனர். 
இது மாகாண வாரியாக அதிகபட்சமாக உள்ளது. இலங்கையின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கணிசமான 
மழை பெய்து 
வருவதால், டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருக்கவும், நுளம்பு பெருகும் இடங்களை அழிக்கவும் சுகாதார அதிகாரிகள் மக்களை கேட்டுக்கொள்கிறார்கள்
.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



புதன், 5 ஜூன், 2024

யாழ் புங்குடுதீவு ஆலயக் கிணற்றில் யுவதியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது

யாழ்- புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் ஆலய கிணற்றிலிருந்து இளம் பெண் ஒருவரின் சடலம் 04-06-2024.அன்று  கண்டெடுக்கப்பட்டுள்ளது. புங்குடுதீவு மடத்துவெளி எட்டாம் வட்டாரத்தை சேர்ந்த 27 வயதுடைய 
சிவகுகானந்தன் சிந்துஜா யுவதியின் சடலமே மீட்கப்பட்டதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
என்பது குறிப்பிடத்தக்கது





செவ்வாய், 4 ஜூன், 2024

நாட்டில் சீரற்ற வானிலை பலி யானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

நாட்டில் சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று (04) பாராளுமன்றத்தில் கருத்து வெளியிடும் போது, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் இதனைக் 
குறிப்பிட்டுள்ளார்.
 சீரற்ற வானிலை காரணமாக 41 பேர் காயமடைந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், 23 மாவட்டங்களின் 262 பிரதேச செயலகப் பிரிவுகளில் 33,422 குடும்பங்களைச் சேர்ந்த 130,021 பேர் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 அந்த பிரதேசங்களில் அரசாங்கத்தினால் நடத்தப்படும் 116 பாதுகாப்பு நிலையங்களில் 2,368 குடும்பங்களைச் சேர்ந்த 9,248 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
 என்பது குறிப்பிடத்தக்கது 




 

திங்கள், 3 ஜூன், 2024

நாட்டில் ஹட்டன் - கொட்டகலை பகுதிக்கு அருகில் தடம் புரண்ட ரயில்

நாட்டில் ரயில் ஒன்று தடம் புரண்டதால் மலையக ரயில் பாதையின் இயக்கம் தடைபட்டுள்ளது. 
ஹட்டன் மற்றும் கொட்டகலை புகையிரத நிலையங்களுக்கு இடையில் புகையிரதம் ஒன்று தடம் புரண்டுள்ளதாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி பயணித்த அரை விரைவு ரயில் தடம் புரண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



ஞாயிறு, 2 ஜூன், 2024

மரண அறிவித்தல் அமரர்பொன்னையா பெருமாள்பிள்ளை (சின்னத்துரை )

துயர் பகிர்வு
தோற்றம்-17-01-1943. மறைவு-01-06.2024
.யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட.அமரர் பொன்னையா  பெருமாள்பிள்ளை  (சின்னத்துரை ) அவர்கள்
  01-06-2024..சனிக்கிழமை  அன்று இறைபாதம் அடைந்தார்
 அன்னார். காலஞ்சென்ற பொன்னையா அகிலாண்டம் ஆகியோரின் பாசமிகு மகனும் காலஞ்சென்ற தங்கம்மா 
அவர்களின் அன்புக் கணவரும் புஸ்பா. மலர் .குமார்  (சிக்குட்டி)
அச்சி ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார் 
 அன்னாரின் இறுதிக்கிரியை 03-06-2024 திங்கள்கிழமை அன்று 10:00 மு.ப -12:30 பி.ப.மணி  வரை  அவரது  இல்லத்தில் நடைபெற்று பின்பு அன்னாரின் நல்லடக்கம் 03-06-2024  திங்கள்கிழமை அன்று
 நவற்கிரி  நிலாவரை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!!!
வீட்டுமுகவரி  
ராஜவீதி நவற்கிரி புத்தூர் 
தகவல் குடும்பத்தினர் 

சனி, 1 ஜூன், 2024

யாழ் உடுப்பிட்டியில் கோழிக் கடைக்காரருக்கு வாள்வெட்டு

யாழ் உடுப்பிட்டி பகுதியில்.01-06-2024. இன்று அதிகாலை கொள்ளையர்களால் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்ட நபரொருவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உடுப்பிட்டி பகுதியை சேர்ந்த இறைச்சிக் கோழி வியாபாரம் செய்யும் 42 வயதுடைய குணசிங்கம் சந்துரு எனும் நபரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.
குறித்த நபர் வியாபாரம் முடித்துவிட்டு அதிகாலையில் தனது வீட்டிற்கு சென்றபோது, அங்கு பதுங்கியிருந்த கொள்ளையர்கள் அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதன்போது அவரால் அவலக்குரல் எழுப்பப்பட்ட நிலையில், அவரது மனைவி கணவரின் சத்தம் கேட்டு வீட்டிற்கு வெளியே 
ஓடி வந்துள்ளார்.
அவ்வேளை அவரது மனைவியையும் தாக்கிய கொள்ளைக் கும்பல் அவரிடம் இருந்த நகைகளை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளனர். குறித்த வீட்டில் சத்தம் கேட்பதை அவதானித்த அயலவர்கள், 
அங்கு சென்று
 கூரிய ஆயுதத்தால் படுகாயமடைந்த நபரை மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.
அவர் தற்போது அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.என்பது குறிப்பிடத்தக்கது





 

வெள்ளி, 31 மே, 2024

நாட்டில் மன்னாரில் கடல் ஆமை இறைச்சிகளுடன் இருவர் கைது

நாட்டில் மன்னாரில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சட்ட விரோதமான முறையில் கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகுதி கடல் ஆமை
 இறைச்சிகளுடன் 2 சந்தேக நபர்கள் இன்று (30.05) கைது 
செய்யப்பட்டுள்ளனர். 
பள்ளமடு பிரதான வீதியில் வைத்து மன்னார் குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் குறித்த இருவரையும் கைது செய்துள்ளனர்.  
இவர்களிடம் இருந்து 82 கிலோ கடலாமை இறைச்சி பொதி செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.  
மீன்கள் பொதி செய்து கொண்டு செல்லும் போர்வையில் குறித்த கடலாமை பொதி செய்யப்பட்டு வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


வியாழன், 30 மே, 2024

பண்டத்தரிப் பில் வைத்தியசாலைக்கு சென்று திரும்பிய பெண் கார் மோதி பலி

யாழ் பண்டத்தரிப்பு பகுதியில் 29-05-2024.அன்று  கணவருடன் வைத்தியசாலைக்கு சென்று, வீடு திரும்பிக் கொண்டிருந்த பெண் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
பண்டத்தரிப்பு பகுதியை சேர்ந்த 61 வயதுடைய சரோஜினி தேவி அல்பேர்ட் வில்லியம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் கடந்த சில நாட்களாக சுகவீனமடைந்திருந்த 
நிலையில் மருத்துவ சிகிச்சைபெற அருகில் உள்ள 
வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெற்றுக்கொண்டு , 
கணவனுடன் துவிச்சக்கர வண்டியில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது , பின்னால் வேகமாக வந்த கார் இவர்களை
 மோதி தள்ளியுள்ளது.
இதன்போது குறித்த பெண் தூக்கி வீசப்பட்டு , படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு , மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விபத்து சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த இளவாலை பொலிஸார் காரின் சாரதியை கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.என்பது குறிப்பிடத்தக்கது 


புதன், 29 மே, 2024

பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பாகிஸ்தானில் இருபத்தி எட்டு பேர் பலி

பாகிஸ்தானில் கராச்சி நகரில் பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பஸ்சில் பயணம் செய்த குழந்தைகள் பெண்கள் உள்பட 28 பேர் உயிரிழந்தனர்.
துர்பத்தில் இருந்து குவெட்டா நோக்கி சென்று கொண்டிருந்த பஸ், வாசுக் நகருக்கு அருகே விபத்தில் சிக்கியது. 
இந்த விபத்துக்குக் காரணம் பஸ் அதிவேகத்தில் இயக்கப்பட்டதே என்று கூறப்படுகிறது. ஆனால், பஸ்சின் டயர் வெடித்து விபத்து நேரிட்டதாக, அந்நாட்டிலிருந்து வெளியாகும் சில ஊடக செய்திகள்
 தெரிவிக்கின்றன. 
விபத்தில் சிக்கி காயமடைந்த 22 பேர் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் சாலை விதிகளை சரியாக பின்பற்றாததாலும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை போக்குவரத்துத் துறை கடைப்பிடிக்காததாலும் இதுபோன்ற சாலை விபத்துகள் அதிகம் நிகழ்கின்றன.
 இந்த மே மாதத்தில் மட்டும் 18-ம் தேதி நேரிட்ட விபத்தில் 13 பேரும், கடந்த 3-ம் தேதி நேரிட்ட விபத்தில் 20 பேரும் பலியானது
என்பது குறிப்பிடத்தக்கது 





 

செவ்வாய், 28 மே, 2024

இலங்கைக்கு பிரிட்டனில் இருந்து நாடுகடத்தப்பட்டவர் உயிரிழப்பு

பிரிட்டனின் உள்துறை அமைச்சினால் இலங்கைக்கு தவறுதலாக நாடு கடத்தப்பட்ட தமிழர் இலங்கையில் உயிரிழந்துள்ள நிலையில் அவர் தனது குடும்பத்துடன் இணையாமைக்கு கு உள்துறை அமைச்சின் திணைக்களங்களின் தாமதமே காரணம் என அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
 சுதர்சன் இதயசந்திரன் என்பவர் 2019 டிசம்பர் மாதம் 24ம் திகதிஅவரது திருமணநாள் அன்று பிரிட்டனிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார். போலியான ஆவணங்களை பயன்படுத்தியதையும் டெஸ்கோவில் பணியாற்றியமையையும் ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து அவர் நாடு கடத்தப்பட்டார்.
 செவிப்புல திறன் அற்ற தனது மனைவி சுபத்திரா தனது 9 மற்றும் 8 வயது ஆண் பெண் குழந்தைகளை விட்டு விட்டு அவர் பிரிட்டனிலிருந்து வெளியேற வேண்டிய நிலையேற்பட்டது. அவரின் மனைவியின் தாயார் சுதர்சன் இதயசந்திரனை குடும்பத்தின் தூண் என 
வர்ணித்துள்ளார்.
 எனினும் நவம்பர் 2023 ம் ஆண்டு இடம்பெற்ற குடிவரவுதீர்ப்பாயத்தில் நீதிபதி பொனெவெரோ சுதர்சன் இதயசந்திரனின் மேல்முறையீட்டை ஏற்றுக்கொண்டதுடன் அவருக்கு குடும்பத்துடன் இணைவதற்கான உரிமை உள்ளது என தெரிவித்தார். சுதர்சன் இதயசந்திரனிற்கு
 பிரிட்டனில் அவரது குடும்பத்தினருடன் வாழ்வதற்கான உரிமையுள்ளது என நீதிபதி தெரிவித்தார். இந்த தீர்ப்பிற்கு எதிராக பிரிட்டனின் உள்துறை அலுவலகம் முறையீடு செய்யவில்லை எனினும் அவர் மீண்டும் பிரிட்டனிற்கு திரும்புவதற்கான விசாவை வழங்கும் ஏற்பாடுகளை மந்தகதியில் 
முன்னெடுத்தது. 
இந்த செயற்பாடுகள் பல மாதங்கள் நீடித்தன. இதன் காரணமாக அவர் இலங்கையில் ஆபத்தான சூழ்நிலைகளில் வசிக்கவேண்டிய நிலைக்குதள்ளப்பட்டார். அவரது 
குடும்பம் இலங்கை
 தமிழ் குடும்பம். எம்டிசி சொலிசிட்டர்சனின் நாக 
கந்தையா உள்துறை அமைச்சின் தாமதங்கள் குறித்த 
நீதிமன்ற ஆய்வினை முன்னெடுத்ததை தொடர்ந்தே அதிகாரிகள் சுதர்சன் இதயசந்திரனிற்கு 
மீண்டும் விசா வழங்குவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்தனர். அதற்காக மன்;னிப்பு கடிதமொன்றையும் வெளியிட்டனர்.அந்த கடிதத்தில்
 தாமதங்களிற்கு அதிகாரிகள் காரணமில்லை என 
தெரிவிக்கப்பட்டிருந்தது.
 மே 19 ம் திகதி இலங்கையில் இதயசந்திரன் அவர் தங்கயிருந்த இடத்தில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பின்னர் அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
 செப்சிஸ் காரணமாகவே அவர் உயிரிழந்தார் என 
அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். தனது பிள்ளைகளிடமிருந்து பிரிந்து இருந்ததால் அவர் மனஉளைச்சலிற்கு ஆளாகியிருந்தார் என தெரிவித்துள்ள 
அவரது அவர் ஒழுங்காக உணவருந்தவில்லை என
 குறிப்பிட்டுள்ளனர்.
 அவரது குடும்பத்தினர் இதிலிருந்து எவ்வாறு மீளப்போகின்றனர் என்பது தெரியவில்லை என தெரிவித்துள்ள நாகேந்திரா 
அவர் இங்கு வசித்தவேளை அவைரையும் பராமரித்தார் அவர் மிகவும் இளகிய
 மனம் கொண்ட ஆதரவான நபர் அவரது இழப்பை யாராலும் மீளநிரப்ப முடியாது உள்துறை அமைச்சு அவரை நாடு
 கடத்தாவிட்டால் அவர் உயிருடன் இருந்திருப்பார் என கருதுகின்றேன் அவரின் மரணத்திற்கு பிரிட்டனின் உள்துறை அமைச்சே காரணம் என குற்றம்சாட்டுகின்றோம் என 
குறிப்பிட்டுள்ளார்.
 பிரிட்டனின் உள்துறை அமைச்சு இதயசந்திரனை மிகவும் நியாயமற்ற விதத்தில் நடத்தியுள்ளது என தெரிவித்துள்ள நாகேந்திரா அவருக்கு சார்பாக தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னரும்அவர் மனமுடைந்தவராக 
காணப்பட்டார் தனது குடும்பத்துடன் மீள இணைவதற்காக தான் ஏன் காத்திருக்கவேண்டும் என்பதை அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை எனவும் நாகேந்திரா தெரிவித்துள்ளார். என்ற அமைப்பின் இயக்குநர் லூ கால்வே இந்த
 மனதிற்கு கடும் வேதனையை ஏற்படுத்தும் விவகாரம் குறித்து தீவிர கேள்விகளை எழுப்பவேண்டும்,பிரிட்டனில் வசிப்பதற்கான தெளிவான உரிமை உள்ளபோது ஏன்சுதர்சன் நாடு கடத்தப்பட்டார் ?நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதில் ஏன் உள்துறை அமைச்சு மந்தகதியில் செயற்பட்டது என தெரிவித்துள்ளார்.என்பது குறிப்பிடத்தக்கது





 

திங்கள், 27 மே, 2024

இடம்பெற்ற கோர விபத்தில் துருக்கியில் பத்து பேர் பலி பலர் காயம்

துருக்கியில் நெடுஞ்சாலையொன்றில் இடம்பெற்ற பயங்கர விபத்தில் கிட்டத்தட்ட 10 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  
தெற்கு துருக்கியின் மெர்சினில் உள்ள நெடுஞ்சாலையில் இந்த விபத்து நடந்துள்ளது. 
மோசமான வானிலை காரணமாக பேருந்து ஒன்று எதிர் பாதையில் நழுவி இரண்டு கார்கள் மீது மோதியதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் செய்தி வெளியிட்டுள்ளன.  இந்த விபத்தில் மேலும் 39 பேர் 
காயமடைந்துள்ளனர்.
மூன்று வாகனங்களிலும் லொறி ஒன்று மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஊடகங்கள் மேலும் 
தெரிவிக்கின்றன.  
சம்வம் குறித்த  மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். என்பது குறிப்பிடத்தக்கது 




 

ஞாயிறு, 26 மே, 2024

இலங்கை மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை வங்காள விரிகுடாவில் உருமாறிய சூறாவளியால்

பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்திற்கு செல்லுபடியாகும் வகையில் இந்த அறிவிப்பை திணைக்களம் வெளியிட்டுள்ளது.
ரிமால் சூறாவளி காரணமாக, நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும், வங்காள விரிகுடா கடற்பரப்பிலும் பலத்த மழை பெய்யக் கூடும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் நிலைகொண்டிருந்த ரிமால் சூறாவளி இன்று (26) காலை வேளையில் சந்தா சூறாவளியாக உருவெடுத்துள்ளதாக அதில் மேலும் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள ரெட் அலர்ட் எச்சரிக்கை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>