siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 5 ஏப்ரல், 2024

கொரோனாவை விட நூறு மடங்கு கொடிய பறவைக் காய்ச்சல் நிபுணர்கள் எச்சரிக்கை

கொரோனாவை விட பறவை காய்ச்சல் 100 மடங்கு கொடிய தொற்று நோயாக மாறும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை 
விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் நகரைச் சேர்ந்த, பறவைக் காய்ச்சல் ஆராய்ச்சியாளரான டொக்டர் சுரேஷ் குச்சிப்புடி
 தெரிவிக்கையில்,
H5N1 வகை பறவைக் காய்ச்சல் ஒரு தொற்றுநோயாக மாறும் அபாயம் இருப்பதாகவும், அது மனித குலத்துக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்த பறவைக் காய்ச்சல் மனிதர்களை நெருங்கி வருவதாகவும், இந்த வைரஸ் மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகளுக்கும் பரவும் எனவும்
 அவர் கூறினார்.
மேலும், இது புதிதாக உருவாகி வரும் வைரஸ் அல்ல என்றும், இது ஏற்கனவே உலகம் முழுவதும் உள்ளதாகவும் டொக்டர் சுரேஷ் குச்சிப்புடி 
தெரிவித்தார்.
இதனை எதிர்கொள்ள உடனடியாக தயாராக வேண்டும் என்றும் அவர் கூறினார். இதனிடையே, கனடாவைச் சேர்ந்த மருத்துவ நிபுணர் ஜான் ஃபௌல்டனும் பறவைக் காய்ச்சல் குறித்து கவலை வெளியிட்டுள்ளார்.
. என்பது குறிப்பிடத்தக்கது  



வியாழன், 4 ஏப்ரல், 2024

யாழ் சங்கானையில் ஊடகவியலாளர் மயங்கி விழுந்து மரணம்

நீண்ட காலமாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த ஊடகவியலாளர் 
ஒருவர்  03-04-2024.அன்று  திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். சங்கானை பகுதியை சேர்ந்த 29 வயதுடைய நடேசு ஜெயபானுஜன் என்பவரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.
மகன் உயிரிழந்ததை அடுத்து, உயிரிழந்தவரின் தாயாரும் தனது உயிரை மாய்க்க முயன்ற நிலையில் வீட்டில் இருந்தவர்களால் காப்பாற்றப்பட்டு , சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் 
அனுமதிக்கப்பட்டுள்ளார் .
குறித்த இளைஞன் , யாழ்ப்பாணத்தை தளமாக கொண்டு இயங்கும் ஊடக நிறுவனம் ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் , ஊடகவியலாளராகவும் கடமையாற்றி வந்தவர் என்பதாகும்




 

புதன், 3 ஏப்ரல், 2024

நாட்டில் இரத்தினபுர பத்துல்பான பகுதியில் பஸ் லொறி மோதி விபத்து

நாட்டில் இரத்தினபுர -  பத்துல்பான பகுதியில் பயணிகள் போக்குவரத்து பஸ் ஒன்றும் லொறி ஒன்றும் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
பஸ் சாலையில் சறுக்கி முன்னால் சென்ற லாரி மீது மோதியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. 
இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். என்பது குறிப்பிடத்தக்கது.





 

செவ்வாய், 2 ஏப்ரல், 2024

இஸ்தான்புல்லில் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி ஊழியர்கள் பலி

துருக்கி நாட்டின் இஸ்தான்புல்லில் அமைந்துள்ளது இரவு விடுதி. அந்த விடுதியில் புதுப்பிக்கும் பணிகள் 
நடந்து வந்தது.
இந்நிலையில், இரவு விடுதியில்.02-04-2023. இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது என இஸ்தான்புல் கவர்னர் தெரிவித்தார்.
இந்த தீ விபத்தில் 29 பேர் பலியாகினர் என்றும், தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை என அவர் குறிப்பிட்டார்.
 விசாரணையில், தீ விபத்தில் பலியானோர் ஊழியர்கள் என தெரிய வந்தது. தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
.என்பது குறிப்பிடத்தக்கது




 

திங்கள், 1 ஏப்ரல், 2024

படுக்கைக்காக காத்திருந்த நூற்றுக்கணக்கான நோயாளிகள் இங்கிலாந்தில் உயிரிழப்பு

இங்கிலாந்தில் ஒரு வாரத்திற்கு 250 க்கும் மேற்பட்ட நோயாளிகள் படுக்கைக்காக நீண்ட நேரம் காத்திருப்பதாக 
தெரியவந்துள்ளது. 
இதன்காரணமாக பல நோயாளிகள் உயிரிழந்துள்ளதாக ராயல் காலேஜ் ஆஃப் எமர்ஜென்சி மெடிசின் (RCEM) ஆய்வு மதிப்பீடுகள் 
தெரிவித்துள்ளன. 
NHS மீட்புத் திட்டம் மார்ச் மாதத்தில் A&E இல் கலந்துகொள்ளும் நோயாளிகளில் 76% பேர் அனுமதிக்கப்பட வேண்டும் என இலக்கு 
நிர்ணயித்திருந்தது. 
ஆனால் அந்த மாதத்திற்கான தரவுகள் அந்த நேரத்தில் 70.9% நோயாளிகள் மட்டுமே காணப்பட்டதாகக் காட்டுகிறது.
ஆகவே பல நோயாளிகள் படுக்கைக்காக காத்திருந்து உயிரிழந்துள்ளதாக அந்த ஆய்வு தெரிவித்துள்ளது. .என்பது குறிப்பிடத்தக்கது 






 

ஞாயிறு, 31 மார்ச், 2024

மரண அறிவித்தல் திருமதி துரைசிங்கம் பரமேஸ்வரி 30.03.2024

துயர் பகிர்வு -- உதிர்வு -30-03-2024 
யாழ் அளவெட்டியை பிறப்பிடமாகவும் ஸ்கந்தபுரதை வதிவிடமாகவும் கொண்ட. 
அமரர் திருமதி  துரைசிங்கம் பரமேஸ்வரி அவர்கள் .30-03-2024.சனிகிழமை அன்று 
       . இறைபாதம் அடைந்தார்.  அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். 
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 01,04,2024 திங்கள் கிழமை அன்னாரின் இல்லத்தில் (இல113கண்ணகைபரம் ஸ்கந்தபுரம்)நடைபெற்று பகல் 11 மணியளவில் தகனக்கிரியைக்காக பூதவுடல் 
கண்ணகைபுரம் இந்து மயானத்திற்கு தகனக்கிரியைக்காக எடுத்துச்செல்லப்படும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம் 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!!!
தகவல் குடும்பத்தினர்.
வீட்டு முகவரி
இல113கண்ணகைபரம் ஸ்கந்தபுரம்



சனி, 30 மார்ச், 2024

நாட்டில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஒருவர் உயிரிழப்பு : விசாரணைகள் ஆரம்பம்

நாட்டில் ராகம போதனா வைத்தியசாலையில் தடுப்பூசி போடப்பட்ட நிலையில் நோயாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். 
சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை மட்டத்திலும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக ராகம போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சம்பத் ரணவீர தெரிவித்தார்.
கோ-அமோக்ஸிக்லாவ் என்ற தடுப்பூசியை செலுத்திய பிறகு நோயாளி உயிரிழந்துள்ளார். எனினும் தடுப்பூசியினால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக மரணம் ஏற்பட்டதா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர் 50 வயதுடையவர் எனவும் காது தொடர்பான சுகயீனம் காரணமாக கடந்த 22ஆம் திகதி ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
.என்பது குறிப்பிடத்தக்கது.




 

வெள்ளி, 29 மார்ச், 2024

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு ஐந்து வயது சிறுமி கொலை

ஐந்து வயது சிறுமியை கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து வடக்கு வடக்கு காவல் துணை ஆணையர் ரவி குமார் சிங் கூறுகையில், சிறுமியின் பெற்றோர் பவானாவில் டீக்கடை நடத்தி வருவதாகவும், பகல் நேரத்தில் சிறுமி அவர்களுடன் தங்கியிருப்பதாகவும் தெரிவித்தார்.
“அவர்கள் அவளை கடைசியாக மார்ச் 24 அன்று மாலை 5 மணியளவில் பார்த்தார்கள். அவர்கள் அவளைக் கண்டுபிடிக்க 
முயற்சித்தனர் ஆனால் பலனளிக்கவில்லை. கடைசியாக 
அவர்கள் 112 ஐ டயல் செய்தனர். 
உடனடியாக பல குழுக்கள் அமைக்கப்பட்டு பெற்றோருடன் சேர்ந்து அப்பகுதியில் விரிவான தேடுதல் தொடங்கப்பட்டது, 
அது தொடர்ந்தது. 
கடைசியாகப் பார்த்த இடத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இரவு முழுவதும், பல சிசிடிவி காட்சிகள் அப்பகுதியில் இருந்து பெறப்பட்டன, அவற்றில் ஒன்றில், ஒரு ஆணுடன் சிறுமி நடந்து 
செல்வதைக் கண்டார். 
அவர் குடி என்ற தோட்டன் லோஹர் என அடையாளம் காணப்பட்டார், மேலும் அவர் தலைமறைவானார். உள்ளூர் விசாரணையில், அவர் பூர்வா எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் மேற்கு வங்காளத்திற்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்பது தெரியவந்தது. 
பல குழுக்கள் அமைக்கப்பட்டன. அதற்கு இணையாக, கொல்கத்தாவுக்கு ஒரு குழு அனுப்பப்பட்டது. பிறகு அவர்கள் அவரை அடையாளம் கண்டு பிடித்து, மீண்டும் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டார்,” என்று டிசிபி 
மேலும் கூறினார்.
மேலும், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததையும், பின்னர் கொலை செய்து உடலை அருகில் உள்ள தொழிற்சாலையில் வீசியதையும் குற்றவாளி ஒப்புக்கொண்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
என்பது குறிப்பிடத்தக்கது    

 








 

வியாழன், 28 மார்ச், 2024

நாட்டில் களுத்துறையில்பாடசாலையொன்றின் மாணவர்கள் வைத்தியசாலையில்

நாட்டில் களுத்துறை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவர்கள் குழுவொன்று தடுப்பு மருந்து செலுத்தப்பட்டதன் பின்னர் ஏற்பட்ட சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
ஏறக்குறைய  10 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நாகொட வைத்தியசாலை வட்டாரங்கள் 
தெரிவிக்கின்றன. 
12 மற்றும் 13 வயதுடைய பாடசாலை மாணவர்கள் குழுவொன்றே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன. 
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மயக்கம் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்பதும் குறிப்பிடத்தக்கது 


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



புதன், 27 மார்ச், 2024

கத்திரிக்கோலால் வெட்டி கொழும்பில் நபர் ஒருவர் படுகொலை

கொழும்பு - கிராண்ட்பாஸ் பகுதியில் நபர் ஒருவர் கத்திரிக்கோலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். 
சம்பவத்தில் 36 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.  சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் 
தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை என்பது குறிப்பிடத்தக்கது 


செவ்வாய், 26 மார்ச், 2024

மேரிலேண்ட் மாகாணத்தில் இலங்கை நோக்கி பயணித்த கப்பல் மோதி உடைந்த பாலம்

அமெரிக்காவில் பாலமொன்றின் மீது சரக்கு கப்பல் ​மோதியதில் பாலம் இடிந்து வீழ்ந்துள்ளது.
மேரிலேண்ட் மாகாணத்தில் அமைந்துள்ள பால்டிமோர் பாலம் மீது இலங்கை நோக்கி பயணித்த சரக்கு கப்பல்.26-03-2024. இன்று அதிகாலை 
மோதியுள்ளது. 
இதன்போது பாலத்தில் சென்றுக் கொண்டிருந்த பல வாகனங்கள் நீரில் மூழ்கி 20 இற்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 
 மீட்பு பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.என்பதும் குறிப்பிடத்தக்கது  







 

திங்கள், 25 மார்ச், 2024

மோட்டார் பந்தையத்தால் மட்டக்களப்பில் நேர்ந்த விபத்து இருவர் வைத்தியசாலையில்

மட்டக்களப்பு - வாழைச்சேனை பகுதியில்.25-03-2024. இன்று  இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
ஓட்டமாவடி - மீராவோடை ஊடாக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு பயணிகளை ஏற்றிச் செல்லும் இலங்கை போக்குவரத்து சபையின்  பேருந்து வண்டியில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து 
இடம்பெற்றுள்ளது.
மூன்று மோட்டார் சைக்கில்களில்  ஓட்டப்பந்தயத்தில் ஈடுப்பட்ட இளைஞர்களே விபத்தில் சிக்கியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
 இதில், இருவர் மட்டக்களப்பு வைத்தியசாலையில் 
சிகிச்சை பெற்று வருவதுடன் அதில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் 
தெரிவித்துள்ளன. 
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். என்பது குறிப்பிடத்தக்கது 





 

ஞாயிறு, 24 மார்ச், 2024

தென் அமெரிக்க பிரேசில் நாட்டை தாக்கிய புயல் பத்து பேர் பலி

தென் அமெரிக்க நாடான பிரேசில் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் கடுமையான புயல் தாக்கியது. குறிப்பாக ரியோ டி ஜெனிரோவின் மலைப்பகுதிகளில் புயலின் தாக்கம் அதிகமாக இருந்தது. 
புயல் காரணமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தன. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
 பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணி தொடர்ந்து 
நடைபெற்று வருகிறது.
புயல் மழை தொடர்பான விபத்துகளில் இதுவரை 10 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். 
வீடுகளை இழந்து தவிக்கும் மக்கள், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பிரேசிலில் கடந்த சில தினங்களாக 
கடும் வெயில் வாட்டி வதைத்தது. அதிகபட்சமாக 62 டிகிரி செல்சியஸ்
 வெப்பம் பதிவானது. 
இந்த வெப்ப அலையைத் தொடர்ந்து திடீரென புயல் தாக்கியிருக்கிறது. காலநிலை மாற்றத்தால் இந்த வானிலை மாற்றம் நிகழ்ந்திருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.என்பது குறிப்பிடத்தக்கது .


சனி, 23 மார்ச், 2024

நாட்டில் அஸ்கிரியவில் மாணவர்களின் தலையில் விழுந்த மின் விசிறி இருவர் காயம்.

நாட்டில் கண்டி, அஸ்கிரியவில் உள்ள பாடசாலையொன்றில், தரம் ஐந்து வகுப்பில் மின்விசிறி விழுந்ததால், காயமடைந்த மாணவர்கள் இருவர் கண்டி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்த மாணவர்கள் இருவரும் கண்டி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு மாணவனுக்கு 
கண்ணிலும், மற்றைய மாணவனுக்கு தலையிலும் காயம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே மின்விசிறி
 பழுதடைந்த நிலையில் இருந்ததாகவும், இது குறித்து பாடசாலை நிர்வாகத்திடம் தெரிவித்தும், அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது


 


 

வெள்ளி, 22 மார்ச், 2024

கோலா பூடான் கடலில் விபத்துக்குள்ளான அகதிகள் படகு அறுவது பேர் மீட்பு

வங்காள தேசத்தில் வசித்து வரும் ஏராளமான அகதிகள் கடல் வழியாக இந்தோனேஷியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு படகில் தப்பி செல்வது தொடர்கதையாக நடந்து வருகிறது.
இவர்கள் சட்டவிரோத மாக பாதுகாப்பு இல்லாமல் படகில் செல்வதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு பலர் உயிர் இழந்து
 வருகின்றனர். 
இந்நிலையில் வங்காள தேசத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்டவர்கள் படகில் இந்தோனேஷியா சென்று கொண்டிருந்தனர். 
இந்தோனேஷியா வடக்கில் கோலா பூடான் கடற்கரையில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தூரத்தில் படகு சென்று கொண்டிருந்த போது கடலில் திடீரென கவிழ்ந்தது.
இதனால் படகில் பயணம் செய்த அகதிகள் கடலில் விழுந்து தத்தளித்தனர். இது பற்றி அறிந்ததும் இந்தோனேஷியா கடலோர படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். 
கடலில் தத்தளித்த 60 பேரை அவர்கள் பத்திரமாக மீட்டனர். மற்றவர்கள் கதி என்ன? என்று தெரியவில்லை.அவர்களை கடலோர படையினர் தேடி வருகின்றனர்..என்பது குறிப்பிடத்தக்கது .





 

வியாழன், 21 மார்ச், 2024

நாட்டில் வைரவ புளியங்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவருக்கு நேர்ந்த கதி

நாட்டில்வவுனியா, வைரவ புளியங்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா, வைரவ புளியங்குளம், ரயில் நிலைய வீதியில்.21-03-2024. இன்று மதியம் இவ்விபத்து இடம் பெற்றுள்ளது.
 வவுனியா நகரப்பகுதியில் ரயில் நிலைய வீதி ஊடாக சென்ற முச்சக்கரவண்டி கதிரேசு வீதியில் திரும்ப முற்பட்ட வேளையில் வைரவபுளியங்குளத்தில் இருந்து வவுனியா நகரம் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் சாரதிகள் இருவரும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இரு வாகனங்களும் கடுமையாக சேதமடைந்துள்ள துடன், குறித்த விபத்து தொடர்பாக வவுனியா போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.  என்பது குறிப்பிடத்தக்கது  


புதன், 20 மார்ச், 2024

பஸ் விபத்துக்குள்ளானதில் சீனாவில் பதின்நான்கு பேர் உயிரிழப்பு

வட சீனாவின் ஷாங்சி மாகாணத்தில்  19-03-2024.அன்று மாலை, 51 பயணிகளை ஏற்றி கொண்டு பஸ் சென்று கொண்டிருந்தது. 
அந்த பஸ் ஹோஹோட் - பீஹாய் விரைவு சாலையில் உள்ள சுரங்கப்பாதையில் நுழைந்தது. அப்போது அந்த பஸ் டிரைவரின்
 கட்டுப்பாட்டை இழந்த பஸ் சுரங்கத்தின் தடுப்பு சுவர் மீது 
அதிபயங்கரமாக மோதியது.
இந்த கோர விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்க்கும்
 பணியில் ஈடுபட்டனர்.
 இந்த விபத்தில் படுகாயமடைந்த 37 பேரை மீட்பு குழுவினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.என்பது குறிப்பிடத்தக்கது 

 


 

செவ்வாய், 19 மார்ச், 2024

அமெரிக்காவில் ஸ்ட்ராபெர்ரி பழம் சாப்பிட்ட எட்டு வயது சிறுவன் மரணம்

அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தில் ஸ்ட்ராபெர்ரி பழம் அதிகமாக சாப்பிட்ட சிறுவன் மரணமடைந்த விவகாரத்தில் பொலிசார் விசாரணை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த 8 வயது சிறுவன் பாடசாலையில் நிதி திரட்டும் பொருட்டு ஸ்ட்ராபெர்ரி பழங்களை அதிகமாக சாப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை தூக்கத்தில் இருந்த சிறுவனை எழுப்பிய பெற்றோருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
உடனடியாக பொலிசாருக்கு தகவல் அளித்த அந்த பெற்றோர், சிறுவன் ஒவ்வாமை அறிகுறிகளை வெளிப்படுத்தியதாக தெரிவித்துள்ளனர். மேலும், சிறுவனுக்கு Benadryl அளித்துள்ளதாகவும், குளிக்க வைத்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
எந்த மாற்றமும் தென்படாததுடன், நிலைமை மோசமடைய, இரவு 10.30 மணியளவில் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு 
சென்றுள்ளனர். சில மணி நேரத்திற்கு பின்னர், வீடு 
திரும்பியுள்ளனர்.
இந்த நிலையிலேயே வெள்ளிக்கிழமை பகல் பாடசாலைக்கு அனுப்பும் பொருட்டு தூக்கத்தில் இருந்த சிறுவனை பெற்றோர் 
எழுப்பியுள்ளனர். 
சிறுவன் எழும்பாத்தால் மருத்துவ உதவிக்குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களே சிறுவன் மரணமடைந்துள்ளதை உறுதி செய்துள்ளனர். 
 இந்த நிலையில் வெளியான உடற்கூறு ஆய்வில், சிறுவன் ஒவ்வாமை காரணமாகவே மரணமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது





திங்கள், 18 மார்ச், 2024

நாட்டில் செட்டிகுளம் பகுதியில் யானை தாக்கி ஒருவர் மரணம்

வவுனியா, செட்டிகுளம் பகுதியில் வீதியால் சென்றவரை யானை தாக்கியதில் ஒருவர் மரணமடைந்துள்ளதாக செட்டிகுளம் பொலிசார் 
தெரிவித்தனர். 
செட்டிகுளம், மருதமடுப் பகுதியில் 17-03-2024.அன்று 
 மாலை வீதியால் பயணித்த முதியவர் ஒருவரை அப் பகுதிக்கு வந்த யானை தாக்கியுள்ளது. 
இதனால் படுகாயமடைந்த குறித்த முதியவர் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்ட போதும் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். 
செட்டிகுளம், மருதமடுப் பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய தனபாலகே அனுர தென்னக்கோன் என்பவரே மரணமடைந்தவராவார். 
இச் சம்பவம் தொடர்பில் செட்டிகுளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.என்பது குறிப்பிடத்தக்கது.






 

ஞாயிறு, 17 மார்ச், 2024

நாட்டில் புகையிரதத்தில் மோதி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்

நாட்டில்மீரிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வில்வத்த மற்றும் அம்பேபுஸ்ஸ நிலையங்களுக்கு இடையில் புகையிரதத்தில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். 
 கொழும்பில் இருந்து  16-03-2024.அன்று  காலை ரம்புக்னா நோக்கி பயணித்த ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார். 
உயிரிழந்த நபர் 62 வயதுடையவர் எனவும், அவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் பொலிஸார் 
தெரிவிக்கின்றனர். 
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மீரிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.