siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 31 ஆகஸ்ட், 2020

யாழ் அச்செழு சைவப்பிரகாச வித்தி. நிர்வாக சீர்கேட்டை எதிர்த்து போராட்டம்

                 யாழ்ப்பாணம் – அச்செழு சைவப்பிரகாச வித்தியாலயத்தின் நிர்வாக சீர்கேட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக.31-08-2020. இன்று .காலை குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன், இதன்போது ஆளுநரிடம் மகஜரும் கையளிக்கப்பட்டது.இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பாடசாலையில் குழப்பங்களை ஏற்படுத்தும் ஆசிரியர்களை...

நெடுங்கேணியில் இவருவர் பலியானதால் மக்கள் விடுத்த கோரிக்கை

முல்லைத்தீவு – நெடுங்கேணி பிரதான வீதியிலுள்ள பழமைவாய்ந்த மரங்கள் வீதியின் நடுவே சரிந்து உள்ளமையினால் மக்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளனர்.குறிப்பாக கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக பழமைவாய்ந்த மரங்கள் வீதியோரமாக முறிந்து விழுந்துள்ளன.நேற்று முன்தினம் முல்லைத்தீவு – உண்ணாப்பிலவு பகுதியில் வீதியோரத்தில் இருந்த மரம் முறிந்து வீழ்ந்தமையால் இருவர் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவமும் பதிவாகியுள்ளது.இந்த நிலையில், இவ்வீதியூடாக பயணம் மேற்கொள்ளும்...

சனி, 29 ஆகஸ்ட், 2020

பெருமளவு தங்கத்துடன் அனலைதீவில் கடற்படையினரால் இருவர் கைது

 யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவுக்கு சட்டத்துக்குப் புறம்பாக கடல் வழியாக பெருந்தொகை தங்கத்தை கடத்த முற்பட்ட இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.சுமார் 6 கோடியே 20 லட்சம் ரூபாய் பெறுமதியான 5 கிலோ 500 கிராம் நிறையுடை தங்கத்தை கடத்த முற்பட்ட போது சந்தேக நபர்கள் இருவரும் இன்று (29) அதிகாலை அனலைதீவு கடற்பரப்பில் வைத்துக் கைது செய்யப்பட்டனர் என்று கடற்படையினர் தெரிவித்தனர்.மாதகலைச் சேர்ந்த இருவரும் தரகுப் பணத்துக்காக இந்தியாவுக்கு தங்கம்...

வீதியால் பயணித்த இருவர் அதில் சிக்கி உயிரிழந்துள்ளனர்

முல்லைத்தீவு – உண்ணாப்பிலவு பகுதியில் திடீரென பெய்த காற்றுடன் கூடிய கடும் மழையின் காரணமாக வீதியில் மரம் முறிந்து வீழ்ந்ததால் இருவர் உயிரிழந்துள்ளனர்.இந்த துயரச் சம்பவம் இன்று (29) மாலை இடம்பெற்றுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.முல்லைத்தீவு நகர்ப் பகுதி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று காற்றுடன் கூடிய கடும் மழை பெய்தது. இந்நிலையில், சிலாவத்தை பகுதியில் வீதி ஓரத்தில் நின்ற மரம் முறிந்து வீழ்ந்தபோது அவ்வீதியால் பயணித்த இருவர்...

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2020

இலங்கையர்போதைப் பொருள் மற்றும் புகையிலைப் பயன்பாட்டினால் தினமும் உயிரிழப்பு

போதைப்பொருள் மற்றும் புகையிலை பயன்பாடு காரணமாக தினமும் 80 முதல் 100 வரை இலங்கையர்கள் உயிரிழக்கின்றனர் என அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.அந்தச் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஷெனால் பெர்னாண்டோ இதனைத் தெரிவித்துள்ளார்.இந்நிலையில், நாட்டிற்கு போதைப்பொருள் மற்றும் புகையிலை ஒழிப்பு திட்டம் தேவை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் பேசியுள்ள அவர்;போதைப்பொருள் மற்றும் புகையிலை கட்டுப்பாடு குறித்து 1000 மருத்துவர்களுக்கு...

வியாழன், 27 ஆகஸ்ட், 2020

மரண அறிவித்தல் கந்தசாமி விஜயானந்தன் (பபா) 23-08-20

  இறப்பு-23-08-2020 யாழ். அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், இலண்டன் ஆகிய இடங்களில் வாழ்ந்தவரும், இலண்டனை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட அமரர் கந்தசாமி விஜயானந்தன் (பபா)  23-08-2020 சனிக்கிழமை இலண்டனில் இயற்கை எய்தினார். அன்னார்   கந்த்சாமி ஜானகிஅம்மா ஆகியோரின் இளைய புதல்வனும், பவானியின்  அன்புக் கணவரும், இரத்தினேஸ்வரி ,ஜெகதீஸ்வரி, காலம்  சென்ற கருணானந்தன், காலம்  சென்ற ஞானநந்தன்,...

புதன், 26 ஆகஸ்ட், 2020

கற்பிட்டி, ஏத்தால பிரதேசத்தில் 1004 கிலோ மஞ்சள் கைப்பற்றல்

 இந்தியாவில் இருந்து உள்நாட்டிற்கு கடத்திக் கொண்டுவரப்பட்ட 1004 கிலோ மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளது.புத்தளம் – கற்பிட்டி, ஏத்தால பிரதேசத்தில் வைத்து நேற்று (25) குறித்த மஞ்சள் தொகை மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நிலாவரை.கொம் செய்திகள் >>&...

ஹோமாகமவில் சிறைக் கைதி மீது துப்பாக்கிச் சூடு

 நாட்டில் ஹோமாகம நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட நிலையில், அங்கிருந்து தப்பிச் செல்ல முயற்சித்த சிறைக் கைதி மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.சிறைச்சாலை அதிகாரி மேற்கொண்ட இந்த  துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த கைதி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நிலாவரை.கொம் செய்திகள் >>&...

வெள்ளவத்தையில் ,கிணற்றில் வீழ்ந்து வயோதிப பெண் சாவு

                                           கொழும்பு – வெள்ளவத்தை, அலுவலவத்த பிரதேசத்தில் கிணறு ஒன்றில் வீழ்ந்து 81 வயதுடைய வயோதிப பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.பெண் ஒருவர் கிணற்றில் வீழ்ந்துள்ளதாக ஒருவர் வெள்ளவத்தை பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து குறித்த பெண் கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது. நிலாவரை.கொம் செய்திகள்...

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2020

புத்தளத்தில் காணாமல் போன தமிழ்ப் பெண் நீரோடையில் சடலமாக மீட்பு

   புத்தளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புழுதிவயல் பகுதியிலுள்ள வாய்க்கால் ஒன்றிலிருந்து வயோதிப பெண் ஒருவர்.24-08.20. அன்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.மதுரங்குளி கணமூலை குறிஞ்சாவெட்டியவைச் சேர்ந்த கருப்பையா லஷ்சுமி எனும் .71,வயது வயோதிப பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.மனநிலை பாதிக்கப்பட்ட குறித்த வயோதிப பெண் கடந்த சனிக்கிழமை .22-08-20.முதல் காணாமல் போயிருந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.இந்த...

திங்கள், 24 ஆகஸ்ட், 2020

தங்கத்தின் விலை இலங்கையில்வரலாறு காணாத வகையில இலட்சமானது

 உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக இலங்கையில் வரலாறு காணாத வகையில தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.இதன்படி, 24 கரட் தங்கத்தின் இன்றைய விலை ஒரு இலட்சம் (100000) ரூபா என்பதுடன், 22 கரட் தங்கத்தின் பெறுமதி 88,000 ரூபாவாக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது நிலாவரை.கொம் செய்திகள் >>&...

வரணி வடக்கில் யுவதி ஒருவர் தற்கொலை. 23-08-202

யாழ் தென்மராட்சி – வரணி வடக்கில் தவறான முடிவு எடுத்த இளம் யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.23-08-2020.  அன்று இடம்பெற்ற இந்த சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த நந்தகுமார் சதீசா (20-வயது) என்ற யுவதியே இவ்வாறு தற்கொலை செய்து மரணமடைந்துள்ளார்.தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்த குறித்த யுவதி பிறிதொரு நபருக்கு வழங்கிய பணம் திரும்பக் கிடைக்கப் பெறவில்லை என்றும், அதனால் தற்கொலை செய்வதாகவும் கடிதம் எழுதி வைத்துவிட்டு...

பூவரசந்தீவுப் பகுதியில் கிணற்றில் விழுந்த சிறுவன் பலி

திருகோணமலை – கிண்ணியா பொலிஸ் பிரிவு, பூவரசந்தீவுப் பகுதியில் வீட்டுக்கு அருகாமையில் உள்ள பாதுகாப்பற்ற கிணறு ஒன்றில் தவறி விழுந்து சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.நேற்று (23) மாலை இடம்பெற்றுள்ள இந்த சம்பவத்தில், கிண்ணியா யூசுப் வித்தியாலயத்தில் தரம் 02 இல் கல்வி பயிலும், நிஜாம் அஸ்னி (வயது-7) என்ற சிறுவனே உயிழந்துள்ளான் நிலாவரை.கொம் செய்திகள் >>&...

முழங்காவிலில் சொட்டு நீர்ப்பாசனம் மூலம் பழவகைகள் பயிர்ச் செய்கை

வடக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட விவசாயத் திட்டங்களில் பயனாளியாகிய கிளிநொச்சி முழங்காவில் பிரதேசத்தில் வசிக்கும் அருணாசலம் பொன்னுத்துரை எனும் விவசாயி சிறந்த விவசாய நடைமுறையின் (GAP) கீழாக பழமரச் செய்கையில் ஈடுபட்டுக் கொண்டுள்ளார்.இதற்கான ஓர் வயல்விழா நிகழ்வானது பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் கிளிநொச்சி அவர்களின் வழிகாட்டலில் 21.08.2020 அன்று இடம்பெற்றது.இதில் பல பழமரச் செய்கையாளர்கள் பங்குபற்றியிருந்தனர். இதன்போது...

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2020

மதுபானப் பிரியர்களுக்கும் மதுவரித் திணைக்களத்தின் அதிரடி அறிவிப்பு

குடித்துவிட்டு சுற்றுப்புறங்களில் மதுபான போத்தல்கள் மற்றும் பியர் ரின்களை வீசியெறிவதால் சூழல் மாசடைகின்றது.எனவே, இதனை கட்டுப்படுத்தும் வகையில் புதிய முறையொன்றை மதுவரித்திணைக்களம் நடைமுறைப்படுத்த உள்ளது.கடந்த வருடம் 300 மில்லியன் மதுபான போத்தல்கள் மற்றும் 160 மில்லியன் பியர் கான்களை வாங்கியதாக மதுவரித்திணைக்களம் தெரிவித்துள்ளது.புதிய முறையின்படி வீதியோரங்களில் மதுபான போத்தல்களை வீசியெறிவதை தடுக்கும் வகையில் அவற்றை திருப்பி ஒப்படைக்க மதுவரி...

கொரோனாவில்இலங்கையில் நிகழ்ந்த 12வது மரணம் சுகாதார அமைச்சின் அறிவிப்பு

இலங்கையில் கொரேனா தொற்று காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த 47 வயது பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி.23.08-20. இன்று அதிகாலை உயிரிழந்ததாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.இந்தியாவில் இருந்து வந்த நிலையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பெண்ணே உயிரிழந்துள்ளார்.குறித்த பெண் புற்றுநோய் மற்றும் இருதய நோயாலும் பீடிக்கப்பட்டிருந்தாக...

மன்னாரை உறைய வைத்த இளம் பெண் படுகொலைச் சம்பவம்

மன்னாரில் அண்மையில் சடலமாக மீட்கப்பட்ட யுவதியின் கொலை மர்மம் துலங்கியுள்ளது. அந்த யுவதியின் சகோதரியே கொலையின் சூத்திரதாரியென்பதை புலனாய்வு பிரிவினர் கண்டறிந்தனர்.இதையடுத்து யுவதியின் கொலையுடன் தொடர்புடைய இரண்டு பெண்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.யுவதி யாழ்ப்பாணம் நெடுந்தீவைச் சேர்ந்தவர்.கடந்த 13ஆம் திகதி மன்னார்-சௌத்பார் புகையிரத நிலைய பிரதான பாதை அருகில் காணப்படும் உப்பளத்திற்கு சொந்தமான உப்பு உற்பத்தி பாத்தியில் இருந்து இளம் பெண் ஒருவரின் சடலம்...

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2020

நாகர்கர்னூல் மாவட்டத்தில் நீர் மின் நிலைய தீ விபத்து: 6 பேர் பலி

தெலுங்கானாவில் நாகர்கர்னூல் மாவட்டத்தில் ஸ்ரீசைலம் அணை அமைந்துள்ளது.  இதில் பூமிக்கடியில் செயல்பட்டு வந்த நீர்மின் நிலையத்தில்.20-08-20. நேற்றிரவு திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.  இதனை தொடர்ந்து  தீ விபத்தும் ஏற்பட்டு உள்ளது.   தகவல் கிடைத்ததும் ர்னூல் நகரில் உள்ள தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு வீரர்கள் சம்பவ பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும்...

கோர விபத்து வாழைச்சேனையில் சிறுவன் பரிதாபமாகப் பலி

வாழைச்சேனை- வாகனேரிப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்..20-08-20. (வியாழக்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில், கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் வாகனேரி சுற்றுலா விடுதியைச் சேர்ந்த நடராஜா தனுஜன் (வயது 16) என்பவரே உயிரிழந்துள்ளார்.பிரதேசத்தில் இடம்பெற்றுவரும் ஆலய உற்சவத்தில் கலந்து கொண்டுவிட்டு வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார். இதன்போது வாகனம் வேக கட்டுப்பாட்டினை இழந்து பாதையை விட்டு விலகி விபத்து சம்பவித்துள்ளதாக...

வியாழன், 20 ஆகஸ்ட், 2020

அமெரிக்காவில் விரைவில் உமிழ்நீர் மூலம் கொரோனாவை கண்டறியும் எளிய சோதனை

உமிழ்நீர் மூலம் கொரோனா வைரசை கண்டறியும் எளிய சோதனை, அமெரிக்காவில் அறிமுகம் ஆகிறது. கொரோனாவை கண்டறியும் சோதனை, பிற நாடுகளை விட அமெரிக்காவில் அதிக எண்ணிக்கையில் நடத்தப்படுகிறது. உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான மாதிரிகள் அங்குதான் பரிசோதிக்கப்படுகின்றன. இதனால் அங்கு பரிசோதனை கருவிகளுக்கு அவ்வப்போது தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த நிலையில், கொரோனா பரிசோதனைகளை அமெரிக்காவில் விரைவாக விரிவாக்குவதற்காக எளிதாக உமிழ்நீர் மூலம் கண்டறிகிற...

மரண அறிவித்தல் திருமதி விக்கினேஸ்பரன் சிவபாக்கியம்,19-08-20

பிறப்பு  - 26- 08 1943  -  இறப்பு-19 08-2020மலேசியாவைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி தோப்பை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட விக்கினேஸ்பரன் சிவபாக்கியம் அவர்கள் 19-08-2020 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற மினாசித்தம்பி, தங்கச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற விக்கினேஸ்பரன் அவர்களின் அன்பு மனைவியும், சிவனேசன்(பிரான்ஸ்), வாசுகி(இலங்கை), சிவகுமார்(பிரித்தானியா), வனிதா(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு...

ஐரோப்பா செல்ல முயன்ற அகதிகள் கப்பல் லிபியா நடுக்கடலில் மூழ்கி 45 பேர் பலி

 லிபிய கடல் எல்லையில் கப்பல் ஒன்று மூழ்கியதில் அதில் இருந்த ஐந்து குழந்தைகள் உள்பட 45 குடியேறிகள் மற்றும் அகதிகள் உயிரிழந்துள்ளனர் என்று ஐநா அகதிகள் உயர் ஆணையம் தெரிவித்துள்ளது.இந்த ஆண்டு நடந்த மிகவும் மோசமான கப்பல் விபத்து இது.ஸ்வாரா நகரின் கடற்கரையோரம் எஞ்சின் வெடித்து இந்த கப்பல் விபத்துக்குள்ளானபோது, அதில் 80க்கும் மேற்பட்டவர்கள் இருந்தார்கள் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.விபத்திலிருந்து உயிர் தப்பிய 37 பேர் உள்ளூர் மீனவர்களால் மீட்கப்பட்டனர்.தேடுதல்...

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2020

மரண அறிவித்தல் திரு தம்பையா பொன்னுத்துரை.16-08--20

மலர்வு-16 02.1926  -உதிர்வு.16-08-2020யாழ். அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, ஜேர்மனி, நெதர்லாந்து ஆகிய இடங்களை வதிவிடமாகவும், அச்சுவேலி தோப்பை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட தம்பையா பொன்னுத்துரை அவர்கள் 16-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று அச்சுவேலியில் காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு இளைய மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லக்கண்டு தம்பதிகளின் அன்பு மருமகனும், தெய்வ பூமணி அவர்களின்...

புதன், 12 ஆகஸ்ட், 2020

மொரகஹஹேன பகுதியில் மின்சாரம் தாக்கி பாடசாலை மாணவன். பலி

மொரகஹஹேன பகுதியில் பட்டம் பறக்கவிட்டு விளையாடிக்கொண்டிருந்த பாடசாலை மாணவர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.குறித்த மாணவர் மூன்று தினங்களுக்கு முன்னர் இவ்வாறு மின்சாரம் தாக்கிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர் நிலாவரை.கொம் செய்திகள் >>&...