தென்மராட்சி – கொடிகாமம் மத்தி பகுதியில்.03-12-20. இன்று காலை நபர் ஒருவர் வீதியில் வெள்ளத்தில் வீழ்ந்து கிடந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில்
உயிரிழந்துள்ளார்.
காலை 8 மணியளவில் கொடிகாமம் பொலிஸார் வீதியால் சென்ற போது நபர் ஒருவர் மயக்கமடைந்த நிலையில் நீரில் கிடந்துள்ளார். உடனடியாக அவரை மீட்ட பொலிஸார் நாவலடி வைத்தியசாலையில்
சேர்த்துள்ளனர்.
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளமை
தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவத்தில் தவசிகுளம் கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த மாகாலிங்கம் மகேஷ் (வயது-28) என்வரே உயிரிழந்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக