கொழும்பில் பிறந்து 46 நாட்களேயான சிசு ஒன்று கொவிட் நோய்த் தொற்றினால் உயிரிழந்துள்ளது.கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு முன்னதாக கடந்த 08ஆம் திகதி 20 நாளான
சிசுவொன்று இதே வைத்தியசாலையில் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.கொவிட் நிமோனியா
காரணமாக இந்த சிசு உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை
அறிவித்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிசுவின் உடல்,18-12-20. இன்று மாலை பொரளை மயானத்தில் தகனம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக