யாழ்ப்பாணம் – இருபாலை தெற்கு ஜே/257 கிராம வேவையாளர் பிரிவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்வு கல்வியங்காடு நல்லூர் நண்பர்கள் (UK- EUROPE) நிதிப்பங்களிப்பில் இருபாலை தெற்கு மாதர் அபிவிருத்திச்சங்க மண்டபத்தில்.19-12-20. இன்று காலை நடைபெற்றது.
தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் கொரோனா தொற்றை அடுத்து தொடர் மழை வெள்ளம் காரணமாக அன்றாடம் உழைத்துவாழும் குடும்பங்கள் பல பாதிப்படைந்துள்ளன.
இந்நிலையிலேயே இருபாலை தெற்கு மாதர் அபிவிருத்தி சங்கம், பொது அமைப்புக்களுடன் இணைந்து பாதிப்படைந்த முப்பது கடும்பங்களுக்கு உலர் உணவினை வழங்கியுள்ளது.
இந்த நிகழ்வில் வலிகிழக்கு பிரதேசசபை உறுப்பினர் ந.கஜேந்திரகுமார், இருபாலை தெற்கு மாதர் கிராம அபிவிருத்தி சங்க தலைவி திருமதி.சறோஜா தங்கராசா, இருபாலை தெற்கு விவசாய சம்மேளன தலைவர் திரு.தவராசா தர்சன் மற்றும் சமூக உறுப்பினர்களும் பலர்
கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக