யாழ் உடுவில் பிரதேச செயலகப் பிரிவு முழுமையாக முடக்கப்பட்டுள்ளது, பிசிஆர் பரிசோதனை முடிவுகளை கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
13-12-20.இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்துள்ளார். மேலும்,
“மருதனார்மடம் சந்தையில்12-12-20.நேற்று 398 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 283 பேரின் மாதிரிகள் யாழ் போதனாசாலை ஆய்வுக்கூடத்தில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது முன்னர் தொற்று உறுதியானவரின் குடும்பத்தில் ஆறு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
இவர்களில் 104 பேருக்கு இன்று மீளவும் பரிசோதனை செய்யப்படுகிறது, ஏனைய 114 பேரின் மாதிரிகள் அநுராதபுரத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த 218 பேரின் முடிவுகள்.13-12-20. இன்று இரவு
வெளியாகும்.
அந்த முடிவுகளில் கொரோனா தொற்று உறுதியானால் பில பகுதிகளில் தொடர்ந்தும் முடக்கப்பட்டிருக்கும், தொற்று உறுதியாகாது விட்டால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் அனைவரும் குடும்பத்துடன் தனிமைப்படுத்தப்பட்டிருப்பர்.
யாழ்ப்பாணத்தின் ஏனைய பொதுச் சந்தைகளிலும் உள்ளவர்கள் அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக