siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 9 டிசம்பர், 2020

இத்தாலியில் மனைவியுடன் கடும் மோதல் கோபத்தை தணிக்க கணவர் செய்த காரியம்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல நாடுகளில் தற்போதும் ஊரடங்கு அமுலில் உள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டிலேயே முடங்கி கிடப்பதால், குடும்ப உறுப்பினர்களுக்கு இடையேயான சண்டை அதிகரித்து வருகிறது. குறிப்பாக கணவன் – மனைவி 
இடையேயான சண்டை இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் பெரும் பிரச்சனையாக உருவாகியுள்ளது.
இந்நிலையில், மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் கோபம் அடைந்த கணவர் தனது கோபத்தை தணிக்க 7 நாட்களில் 450 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடந்தே சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது
.இத்தாலி நாட்டின் கொமோ நகரை சேர்ந்தவர் மார்க் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 48 வயதான மார்க்கிற்கும் அவரது மனைவிக்கும் இடையே கடந்த வாரம் சிறு பிரச்சனை காரணமாக வாக்குவாதம்
ஏற்பட்டுள்ளது.வாக்குவாதம் முற்றியதால் கோபமடைந்த கணவர் மார்க் வீட்டில் இருந்து உடனடியாக வெளியே சென்றுவிட்டார். கணவர் வெளியே சென்றுவிட்டு இரவு வீட்டிற்கு 
வந்துவிடுவார் என்ற எண்ணத்தில் மார்க்கின் மனைவி அந்த வாக்குவாதத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.ஆனால், மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் கடுமையாக கோபமடைந்த மார்க் தனது கோபத்தை எப்படி தணிப்பது எனத் தெரியாமல் வீட்டை விட்டு 
வெளியேறி சாலையில் நடந்து செல்லத் தொடங்கினார்.கணவர் வாக்குவாதம் நடந்த நாள் அன்று இரவு தங்குவதற்கு வீட்டிற்கு வருவார் என மார்க்கின் மனைவி எதிர்பார்த்திருந்தார். ஆனால், மார்க் வீட்டிற்கு
 இரவு வரவில்லை.
இதனால் அச்சமடைந்த மார்க்கின் மனைவி கணவர் தொலைந்துவிட்டதாக போலீசில் புகார் அளித்தார். அந்த புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்த தொடங்கினர்.ஆனால்இ மனைவி மீது 
கடுமையான கோபத்தில் இருந்த மார்க் தனது கோபத்தை தணிக்க வழிதெரியாமல் சாலையிலேயே பல கிலோமீட்டர் தூரம் நடந்துள்ளார். கொமோ நகரில் உள்ள தனது வீட்டில் இருந்து நடைபயணத்தை தொடங்கிய மார்க் தினமும் சராசரி
யாக 65 கிலோ மீட்டர் தூரம் நடந்துள்ளார்.செல்லும் வழியில் மார்க்கிற்கு சிலர் உணவு வழங்கியுள்ளனர். கிடைத்த 
உணவுப்பொருட்களை உட்கொண்டு அவர் தனது பயணத்தை தொடர்ந்து மேற்கொண்டுள்ளார்.இந்நிலையில், இத்தாலியின் வடக்கு பகுதியில் உள்ள கொமோ நகரில் தனது பயணத்தை 
தொடங்கிய மார்க் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள ஃபனோ என்ற நகரின் கடற்கரைப் பகுதியில்.09-12-20. இன்று அதிகாலை 2 மணிக்கு கண்டுபிடிக்கப்பட்டார்.கொரோனா 
காரணமாக இத்தாலியில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதால் கடற்கரை பகுதியில் இன்று அதிகாலை போலீசார் ரோந்து பணியை மேற்கொண்டிருந்தனர். அப்போது கடற்கரையோரம் சுற்றித்திருந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் 
கடற்கரையில்
சுற்றித்திரிந்த நபர் கொமோ நகரில் காணமல்போன மார்க் என்பது தெரியவந்தது.மனையுடனான வாக்குவாதத்தால் ஏற்பட்ட கோபத்தை தணிக்க மார்க் 7 நாட்களில் 450 கிலோமீட்டர் தூரம் நடந்தே வந்துள்ளார் என்பது தெரியவந்தது.கடந்தவாரம் கோமோ நகரில் இருந்து 
நடைபயணமாக புறப்பட்ட மார்க் 7 நாட்களில் 450 கிலோமீட்டர் தூரம் பயணித்த ஃபனோ நகருக்கு வந்தடைந்துள்ளார். அவர் மேலும், தனது பயணத்தை தொடரலாம் எனத் திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, மார்க்கை அவரது 
மனையுடன் சேர்ந்துவைக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுவருகின்றனர். ஆனாலும், ஊரடங்கு நடைமுறைகளை மீறிய குற்றத்திற்காக மார்க்கிற்கு 400 யூரோ ( இந்திய மதிப்பில் 35 ஆயிரத்து 750 ரூபா)
 அபராதத்தையும் போலீசார் விதித்தனர்.மனைவியுடனான வாக்குவாதத்தால் ஏற்பட்ட கோபத்தை தணிக்க கணவர் 7 நாட்களில் 450 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>
.09-12-20.





0 கருத்துகள்:

கருத்துரையிடுக