மன்னார் - தலைமன்னார் பிரதான வீதி, கரிசல் காட்டுப் பகுதியில்
23-03-2021.அன்று மாலை உருக்குழைந்த நிலையில் சடலம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
கரிசல் புகையிரத பாதைக்கு சுமார் இரண்டு கிலோ மீற்றர் தொலைவில் உள்ள காட்டுப் பகுதியில் குறித்த சடலம் கண்டு
பிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் மாடு தேடிச் சென்ற நபர் ஒருவர் 23-03-2021. அன்று மாலை குறித்த சடலத்தை அவதானித்த நிலையில் குறித்த சடலம் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
குறித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற மன்னார் காவல் துறை சடலத்தை அவதானித்து மேலதிக நடவடிக்கைகளை
மேற்கொண்டனர்.
குறித்த குறித்த நபர் சுமார் 20 நாட்களுக்கு முன் உயிரிழந்திருக்க முடியும் என எதிர் பார்க்கப்பட்டுள்ளதோடு, குறித்த சடலம் சிதைவடைந்து உருக்குழைந்த நிலையில் அடையாளம் காண முடியாத நிலையில்
காணப்பட்டது.
இன்று (24) காலை சடலம் மீட்கப்பட்ட இடத்திற்கு தடயவியல் நிபுணத்துவ காவல் துறை மற்றும் மன்னார் பொது வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் சென்று விசாரணைகளை
முன்னெடுத்துள்ளனர்.
குறித்த சடலத்திற்கு அருகில் பாதனியும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரனைகளை காவல் துறையினர் மேற்கொண்டு
வருகின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக