கொழும்பு –டாம் சந்தியில் பொதி ஒன்றிலிருந்து இளம் பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.தலை துண்டாக்கப்பட்ட
இளம் பெண்ணின் சடலத்தை சந்தேகநபர் அவ்விடத்தில் போட்டுச் சென்றுள்ளார்.
இந்த பெண்ணின் சடலம், ஹங்வெல்ல பிரதேசத்தில் இருந்து தனியார் பேருந்து ஒன்றின் ஊடாக கொழும்பிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு அதனை விட்டு சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது
.26 வயதுடைய இந்தப் பெண்ணை ஹங்வெல்ல
பிரதேசத்தில் கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கொலை செய்யப்பட்ட பெண்ணின் தலையை தனியாக எடுத்துவிட்டு சடலத்தை பையில் வைத்து ஹங்வெல்ல பிரதேசத்தில் இருந்து கொழும்பு நோக்கி கொண்டுவரப்பட்ட பேருந்து பொலிஸாரால்
கண்டுபிடிக்கப்பட்டது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக