இமாச்சல பிரதேச மாநிலத்தில் தனியார் பஸ் ஒன்று நேற்றுக் காலை பொன்டேடி நகரிலிருந்து சம்பா நகருக்கு சென்று
கொண்டிருந்தது
பன்ஜ்ராரு அருகே மலைப்பாங்கான பகுதியில் சென்று கொண்டிருந்த அந்த பஸ், திடீரென நிலை தடுமாறி அருகில் உள்ள 200 அடி
ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்தது.இதில் 9 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 11 பேர் சம்பா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு
, சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவித்த முதல்வர் ஜெய் ராம் தாகுர், விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு
நடத்த உத்தரவிட்டார்.விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.20 ஆயிரமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரமும் உடனடி நிவாரணமாக வழங்க உத்தரவிடப்பட்டது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக