மண்ணில் : 06- பெப்ரவரி 1932 — விண்ணில் : 06 ஏப்ரல் 2011
திதி : 16 -03- 2021.செவ்வாய்க்கிழமை ,அன்று
யாழ். மாவிடடபுரத்தை பிறப்பிடமாகவும், நவற்கிரி புத்தூரை வசிப்பிடமாகவும் கொண்ட.அமரர் திரு ..(ஆ.க) கந்தையா. சுப்பிரமணியம் (மணியம் ) அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
பத்தாண்டு போயும் என்றும் எம்மோடு இருக்கும் ஏந்தலே!!
பத்தாண்டு போனதையா!
ஏங்கியே அழுகின்றோம் ஏந்தலே!!
தாங்கியே பிடிக்க தலைவனின்றி
தவிக்கின்றோம் ஐயா!
வாங்கியே நீ வைத்தவற்றில்
உன் வண்ணவதனம் கண்டு
ஒங்கியே அழுது ஒவ்வொரு நாளும்
இருக்கின்றோம் ஐயா!
உறவி தந்து! உணர்வு தந்து!!
எம்மோடு ஒன்றாய் இருந்த உத்தமனே!
உன்னால் விளைந்த வித்துகள்
இப்போ விருட்சமாய் வெளிவரும் வேளையில்
உன் வெப்பம் தணிக்கும் இவ் விருட்சத்தை விலக்கி
விண்ணுலகு ஏன் தான்
விரைந்திட்டாய் ஐயா!
வளங்கள் எதுதான் வாழ்வில் இருந்தாலும்
வாழ்க்கை எமக்குத்தந்த வள்ளல் நீங்கள்
வாணுலகு போய் பத்தாண்டு வந்தும்
வாடிவதங்கி வாட்டமுடன்
வையமிங்கு வாழ்கின்றோம்
எங்கள் ஐயா!
வாய்ப்புக் கிடைத்தால் வாண் விட்டு
வையம் வந்து உன் வண்ணமுகம் காட்டி
உன் கன்றுகளோடு கைகோர்த்து
களி கொள்ள மாட்டின்கழா எங்கள்
தலைவனே!
பத்தாவது ஆண்டில் நினைத்து நீர் மல்கும்நாங்கள்
..என்றும் உங்கள் நீங்காத நினைவுகளுடன்
வாழும் மனைவி, பிள்ளைகள்
,மருமக்கள் சகோதரர்கள்
தகவல் குடும்பத்தினர்
எமது நவற்கிரி,கொம்
இணையங்களின் நவற்கிரி .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/
. நிலாவரை,.கொம் நவக்கிரி .கொம் இணையங்களின்
நினைவஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம்
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப்பிராத்திக்கின்றோம்
ஓம் சாந்தி ,,ஓம்சாந்தி ஓம்சாந்தி
0 கருத்துகள்:
கருத்துரையிடுக