siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 14 மார்ச், 2021

அம்பாறையில் நள்ளிரவில் கிராமத்திற்குள் புகுந்த காட்டுயானைக்கூட்டம்


மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் பகுதியும், அம்பாறை மாவட்டத்திற்குட்பட்ட வைக்கியல்ல பிரதேசத்திற்குள் ஞாயிற்றுக்கிழமை (14) அதிகாலை புகுந்த காட்டுயானைகள் அங்கிருந்த
 பயன்தரும் பல
 மரங்களையும், தோட்டங்களையும் அழித்துத் துவம்சம் செய்துள்ளதாக அப்பகுதி பிரதேச வாசிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
14-03-2021,இன்று ,ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமார் 2.00 மணியளவில் இவ்வாறு புகுந்த 3 இற்குமேற்பட்ட காட்டுயானைக் கூட்டத்தினால் அக்கிராம மக்கள் மிகுந்த அல்லோல கல்லோலப்பட்டுள்ளனர். கிராமத்திற்குள் காட்டுயானைக்கூட்டம் புகுந்ததை அவதானித்த மக்கள் நள்ளிரவு வேளையில் மிகுந்த அச்சத்துடன் யானைக்கூட்டத்தை அப்புறப்படுத்த முயற்சி 
செய்துள்ளனர்.
எனினும் அங்கிருந்த பயன்தரும், தென்னை, வாழை, பலா, மா, மரவெள்ளி கமகு, உள்ளிட்ட பயிர்களை அழித்து துவம்சம் செய்துவிட்டு ஒருவாறு யானைக்கூட்டம் வெளியேறியுள்ளது.
மிக அண்மைக்காலமாக மட்டக்களப்பு, மற்றும் அம்பாறை மாவட்டங்களின் எல்லைப் புறங்களில் இவ்வாறு காட்டு யானைகளின் அட்டகாசங்களும், தொல்லைகளும் அதிகரித்த வண்ணமுள்ளன.
 இவ்வாறு 
எல்லைப் பகுதியில் நிலைகொண்டுள்ள காட்டுனைகளை பிடித்துக் கொண்டு சரணாலயங்களில் விட்டு விட்டு மீண்டும் யானைகள் கிராமங்களுக்குள் உட்புகாமலிருக்க யானைப் பாதுகாப்பு 
வேலிகளை
 அமைத்துத் தருமாறும் அப்பகுதி மக்கள் மிக நீண்டகாலமாகவிருந்து 
கோரிக்கை விடுத்து வருகின்றமையும், அம்மக்களின் கோரிக்கைகள் இன்றுவரை தீர்க்கப்படாமலிருந்து வருகின்றமையும் 
குறிப்பிடத்தக்கதாகும்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> 

 


 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக