siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 2 மார்ச், 2021

ஸ்கந்தபுரத்தில் கூரையிலிருந்து தவறிவீழ்ந்து குடும்பஸ்தர் மரணம்

கிளிநொச்சி ஸ்கந்தபுரம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.கிளிநொச்சி ஸ்கந்தபுரம் பகுதியில் உள்ள அரிசி ஆலை ஒன்றின் அலுமினிய பொருத்து வேலைகளுக்காக 
மட்டகளப்பில் இருந்து வந்திருந்த 4 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு
 உயிரிழந்துள்ளார்.கிளிநொச்சி ஸ்கந்தபுரம் 
பகுதியில் பொதுச்சந்தை பின்புற வீதியில் அமைந்துள்ள குறித்த அரிசி ஆலையில் அலுமினிய பொருத்து வேலைகளுக்காக வந்திருந்த குறித்த
 குடும்பஸ்தர், நெல் பதப்படுத்தும் தொட்டிபொருத்து வேலை முடித்து கீழே இறங்க முயற்சித்தபோதே தவறி 
விழுந்துள்ளார்.தவறி விழுந்ததை அவதானித்த அருகில் இருந்தவர்கள் உடனடியாக 
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோதிலும், அவர் சிகச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.மேலும், குறித்த நபர் நான்கு பிள்ளைகளின் தந்தை எனவும் இவர் மட்டகளப்பைச் சேர்ந்தவர் எனவும் இராமையா 
விஜயரத்தினம் 54வயதுடையவரும் ஆவார். குறித்த 
சம்பவம் 01-03-2021,அன்று 
 பதிவாகியுள்ளது. மேலதிக விசாரணைகளை அக்கராயன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக