தனது மனைவியான 24 வயதுடைய கர்ப்பிணியை கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்ற நபர் பொலிஸில் சரணடைந்த நிலையில் கைது செய்ப்பட்டுள்ளார்.
நேற்று (09) இரவு கண்டி – கட்டுகஸ்தொட்ட பொலிஸ் நிலையம் சென்ற 34 வயதுடைய நபரொருவர் தனது மனைவியை கொலை செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து தனது மனைவியை எவ்வாறு கொலை செய்தார் என குறித்த நபர் பொலிஸாரிடம விளக்கமளித்த சந்தர்ப்பத்தில், சம்பவ இடத்திற்கு பொலிஸ் குழுவொன்று விரைந்து சென்றுள்ளது.
இதனையடுத்து, படுக்கையில் கிடந்த கர்ப்பிணிப் பெண் மயக்கமடைந்து இருப்பதை கண்ட பொலிஸார் அவரை
காப்பாற்றியுள்ளனர்.
மாமியார் மற்றும் மருமகளுக்கு இடையிலான தகராறைத் தொடர்ந்து அவரது கணவர் அவரைக் கொல்ல முயற்சித்ததாக
பொலிஸாரின் ஆரம்ப விசாரணையில் தெரிய வந்துள்ளது. நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேக நபர் 13ம் திகதி வரை விளக்கமறியலில்
வைக்கப்பட்டுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக