வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட புளியங்குளம் பழைய வாடி கிராமத்தில் வழிபாட்டில் ஈடுபட்ட பூசகர் உட்பட 15 நபர்களை.31-10-20., இன்று மதியம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வவுனியா புளியங்குளம் பழைய வாடி கிராமத்திலுள்ள சிவ நாகதம்பிரான் ஆலயத்தில் பௌர்னமி தின விசேட பூஜை வழிபாடுகள் நடைபெறுவதற்குறிய விசேட ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருந்த 
சமயத்தில் அங்கு சென்ற புளியங்குளம் பொலிஸார் சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாது 
வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டதாக தெரிவித்து பூசகர் உள்ளிட்ட 15 நபர்களை கைது செய்து புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர்.
வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்களை ஆலயத்தினுள் அனுமதிக்க வேண்டாமென அப்பகுதி சுகாதார பரிசோதகர்கள் , பொலிஸாரால் அறிவித்தல் வழங்கப்பட்ட நிலையில் அதனை மீறி 
செயற்பட்டதாக தெரிவித்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புளியங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








 
 
 
 
 
 
 
 
 
 
0 கருத்துகள்:
கருத்துரையிடுக