பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள வீடு ஒன்றில் கத்திக் குத்து மற்றும் சுத்தியலால் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு சிறுவர்கள் உட்பட ஐவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் கொலையாளி
உட்பட மேலும் நால்வர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் மூவர் பலத்தகாயமடைந்து உள்ளதாகவும் சர்வதேச செய்திகள்
தெரிவித்துள்ளன.
இச்சம்பவமானது அந்நாட்டு நேரப்படி 03-10-20.அன்று.காலை 11 மணியளவில் இடம்பெற்றது.
கொலையாளியும் உயிரிழந்தவர்களும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இலங்கை வம்சாவளியினர் எனக் கூறுப்படுகிறது.
பலத்தகாயம் மற்றும் மயக்க நிலையில் காணப்பட்ட ஒருவர் கொலை சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டு கிளிச்சியில் உள்ள பியூஜோன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் பிரான்ஸ் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சம்வம் நடைபெற்றவுடன் குறித்த வீட்டிலிருந்து தப்பி வந்த சிறுவன் ஒருவன் படுகாயமடைந்த நிலையில், அப் பகுதியில் உள்ள மதுபான சாலைக்கு சென்று, தனது மாமாவுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது என்றும், அவர் தனது குடும்பத்தின் மற்றவர்களை கத்தி மற்றும் சுத்தியலால் தாக்கியதாகவும் மதுபானசாலை மேலாளரிடம் கூறி உதவியை
நாடியுள்ளான்.
அதன் பின்னர் பொலிஸாருக்கு தகவல் அறிவிக்கப்பட்டதும் இதன்போது காவல்துறையினர், சம்பவ இடத்துக்கு வந்திருந்தபோது வீட்டின் கதவு உள்பக்கமாக தாழிட்டு தடுப்பு வைக்கப்பட்டிருந்துள்ளது.
தடுப்பினை உடைத்துக்கொண்டு உள் நுழைந்த
காவல்துறையினர் மேலதிக வன்முறைகள் எதுவும் நிகழாமல் தடுத்துள்ளனர்.
இதேவேளை காயமடைந்தவர்களில் மூவர் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் எனவும், அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் சந்தேக நபர் பெக்கான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அந்த பகுதி தேசிய மற்றும் நகராட்சி பொலிஸால்
சுற்றி வளைக்கப்பட்டது.
>>>>>>>>>>>
இரண்டம் இணைப்பு
பிரான்சில் குடும்ப வன்முறை. 5 இலங்கையர்கள் பலி.
மேலும் ஐவர் காயம்
>>>>>>>>>>>>>
சம்பவ இடத்துக்கு சில நிமிட இடைவெளியில் வந்து சேர்ந்த காவல்துறையினர், சம்பவ இடத்தை நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.
வீடு முழுவதும் இரத்தம் தெறித்து இருக்க ஐந்து பேரின் சடலங்களை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.
மேலும் ஐவர் படுகாயமடைந்த நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்துள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
'சாவடைந்தவர்களில் சிறுவர்களும் உள்ளனர்' என காவல்துறையினர் தெரிவித்தனர்.
"சம்பவ இடம் மிகவும் பயங்கரமாக இருந்தது. எங்களில் பலர் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். கத்தி ஒன்றும் பெரிய சுத்தியல் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது!" என காவல்துறை அதிகாரி ஒருவர் எம்மிடம் தெரிவித்தார்.
தாக்குதல் நடத்திய நபர் சம்பவ இடத்தில் 'கோமா' நிலையில் இருந்ததாகவும், இவர்கள் அனைவரும் இலங்கையர்கள் எனவும் பிரெஞ்சு காவல்துறையினர் தெரிவித்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக