siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 5 அக்டோபர், 2020

பம்பஹேன பகுதியில் இடம்பெற்ற பாரிய விபத்து ஆபத்தான நிலையில் பலர்

 கினிகத்தேனை – பம்பஹேன பகுதியில் வான் ஒன்று மண்மேட்டில் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் சாரதி உட்பட 13 பேர் காயமடைந்துள்ளனர். இவர்கள் சிகிச்சைகளுக்காக கினிகத்தேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று கினிகத்தேனை பொலிஸார் 
தெரிவித்தனர்.
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேன நகருக்கு அருகாமையில் உள்ள பம்பஹேன பகுதியில் வைத்தே வான் வீதியை விட்டு விலகி மண்மேட்டில் மோதுண்டு இவ்வாறு 
விபத்துக்குள்ளானது.
வானில் 15 பேர் பயணித்துள்ளனர் எனவும், இவர்களில் 13 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 
இவர்களில் ஆறுபேர் படுகாயமடைந்துள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். ஆரம்பகட்ட சிகிச்சைகளின் பின்னர் 9 பேர் மேலதிக 
சிகிச்சைகளுக்காக நாவலப்பிட்டிய வைத்தியசாலைக்கு
 மாற்றப்பட்டுள்ளனர்.
நுவரெலியாவில் மரண வீடொன்றுக்கு வந்து அஞ்சலி செலுத்திவிட்டு கம்பஹா பகுதியை நோக்கி மீண்டும் பயணிக்கையிலேயே காலை 8.45 மணியளவில் விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பில் கினிகத்தேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சாரதிக்கு ஏற்பட்ட தூக்கம் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் 
வெளியிட்டுள்ளனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>


 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக