siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 31 மார்ச், 2021

சாவகச்சேரியில் தூக்கிலிட்டு பாடசாலை மாணவி தற்கொலை

யாழ்தென்மராட்சி  சாவகச்சேரியில் 30-03-2021.அன்று  மாலை தற்கொலைக்கு முயற்சித்த மாணவி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மாணவியின் சடலம் சாவகச்சேரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகளின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.இந்நிலையில், தற்கொலைக்கான காரணம் இதுவரையில் தெரியாத...

பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் உற்பத்தி பொருட்களுக்கு புதிய தடை!!!

நாட்டில்  ஆறு வகையான பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் உற்பத்தி பொருட்களுக்கு 31 -03-2011.இன்று  முதல் உற்பத்தி தடையை விதிக்க சுற்றுச்சூழல் அமைச்சு தீர்மானித்துள்ளது.அறிக்கை ஒன்றை வெளியிட்டு அந்த அமைச்சு இது தொடர்பில் தெரிவித்துள்ளது.அதன்படி ஒரு தடவை மாத்திரம் பாவித்து வீசப்படும் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் உற்பத்தியான பெட் போத்தலுக்கு (Polyethylene Terepthalate) தடை விதிக்கப்படவுள்ளது.அதேபோல் 20 மைக்ரோ கிராமுக்கு குறைவான லஞ் சீட்,...

கோர விபத்து.கிளிநொச்சி ஏ-09 வீதியில் .ஒருவர் ஸ்தலத்தில் பலி. இருவர் படுகாயம்

கிளிநொச்சி ஏ-9 வீதி கந்தசுவாமி கோயில் முன்பாக 30-03-2021.அன்று  மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த விபத்தில் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட மூவரில் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.ஏ-9 வீதி வழியாக பரந்தன் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியால் நடந்து சென்றவருடன் மோதி விபத்துக்குள்ளானது.இதேவேளை, காயமடைந்த மற்றைய நபர் தொடர்ந்தும்...

செவ்வாய், 30 மார்ச், 2021

கோர விபத்து. உறவினர் வீட்டுக்குச் சென்று திரும்பும் வழியில் சிறுமி பலி

ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பயணித்த மகிழுந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது என்றும் விபத்தின்போது, குறித்த வாகனத்தினுள் 5 பேர் இருந்துள்ளதாகவும் இராஜாங்கனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகள்மார் மூவர் பெலிஅத்த பிரதேசத்திலுள்ள தமது உறவினர் வீட்டுக்குச் சென்று, மீண்டும் வீடு திரும்பியபோது, இராஜாங்கனை,அடம்பனே பிரதேசத்திலுள்ள தமது வீட்டை நோக்கி சென்றுகொண்டிருந்த வேளையில் இந்தக் கோர சம்பவம் சம்பவித்துள்ளது.விபத்தில்...

திங்கள், 29 மார்ச், 2021

வீதியால் சென்ற இளைஞன் ஒருவரை தாக்கிய பொலிஸ் அதிகாரி!!

நடு  வீதியில் நபர் ஒருவருரை போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஒருவர் கடுமையாக தாக்கிய காணொளி ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.தாக்குல் எங்கு இடம்பெற்றது என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.எனினும் பொலிஸ் அதிகாரியின் தாக்குதல் காணொளி சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.வீதியால் சென்ற இளைஞன் ஒருவரை பொலிஸ் அதிகாரி கடுமையாக தாக்கி, குத்துச் சண்டை காட்சியை போன்று செயற்பட்டுள்ளார்.எனினும் அங்கிருந்து சிலர்...

நினைவஞ்சலி 8ஆம் ஆண்டு அமரர் இளையதம்பி நாகம்மா 29-03-2021

  திதி:பிரதமை 29-03-2021 யாழ் அச்சுவேலி தோப்பை பிறப்பிடமாகவும்  வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர்.  இளையதம்பி நாகம்மா  அவர்களின்.திதி 8ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி திதி:பிரதமை 29-03-2021,அன்று அன்னார் அமரர்,இளையதம்பியின்  அன்பு மனைவியும்  ஆவர் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்நீங்காத நினைவுகள் 29-03-2021. காலச்சுழற்சியில் எட்டு ஆண்டுகள் கடந்து போனாலும்...

பாரதிபுரத்தில் கோவிலுக்குச் செல்ல வாகனத்தை கழுவியவருக்கு நேர்ந்த சோகம்

புளியம்பொக்கணை கோவிலுக்குச் செல்ல வாகனம் கழுவிய நபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாரதிபுரம் பகுதியில் 28-03-2021.அன்று அதிகாலை 7.30 மணி அளவில் தனது குடும்பத்தோடு புளியம்பொக்கணை கோவிலுக்கு செல்வதற்காக வாகனத்தை மின்சார சுத்திகரிப்பு இயந்திரத்தினால் கழுவி கொண்டிருக்கின்ற வேளையில்,சுத்திகரிப்பு இயந்திரத்தின் மின் ஒலுக்கினால் மின்சாரம் தாக்கி ஒரு பிள்ளையின் தந்தையான...

சனி, 27 மார்ச், 2021

பளைப் பகுதியில் விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மரணம்

கிளிநொச்சி - பளைப் பகுதியில் 26-03-2021.அன்றிரவு  இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர்.பளை , இத்தாவில் பகுதியில் குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.மோட்டார் வாகனமொன்றும் டிப்பர் வாகனமொன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாத்திலிருந்து பளை பிரதேசத்தை நோக்கி சென்ற மோட்டார் வாகனம் கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற டிப்பர் வாகனத்தில்...

வைரவபுளியங்குளம் குளத்தில் தாமரைப் பூ பறிக்கச் சென்ற ஆசிரியர் மரணம்

வவுனியாவில் கருமாரி அம்மன் ஆலய தேர் திருவிழாவிற்கு தாமரைப் பூ பறிப்பதற்காக வைரவபுளியங்குளம் குளத்தில் இறங்கிய அசிரியர் ஒருவர் நீரில் முழ்கி மரணமடைந்துள்ளார்.இன்று (27) காலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,வவுனியா, குட்செட் வீதி, கருமாரி அம்மன் ஆலயத்தின் தேர்திருவிழாவிற்கு தாமரைப்பூ மற்றும் தாமரை இலை என்பவற்றை பறிப்பதற்காக ஆசிரியர் ஒருவர் வைரவபுளியங்குளம் குளத்திற்குள் சென்றுள்ளார்.குறித்த குளத்தில் தாமரை இலை மற்றும் தாமரை...

பொன்னாலை யில் இராணுவத்தின் வாகனம் மோதிய பண்டிதர் காலமானார்

யாழ் பொன்னாலை யில் கடந்த.20-03-2021. சனிக்கிழமை அன்று  மதியம் யாழ்.நகரில்  சிறிலங்கா இராணுவத்தின் வாகனம் மோதியதில் காயமடைந்த பண்டிதர். பொன்னம்பலவாணர் 26-03-2021.அன்று காலமானார்.இவர் பொன்னாலை சித்திவிநாயகர் ஆலய அர்ச்சகரும், சிறந்த கல்விமானும் ஆவார். இவருக்கு வயது 77. படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்து காலமானார். நிலாவரை.கொம் செய்திகள் >>>...

வெள்ளி, 26 மார்ச், 2021

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவிக் கரம் நீட்டியுள்ள மருத்துவர்

பசறை விபத்தில் தாய் தந்தையை இழந்து அநாதைகளான மூன்று குழந்தைகளுக்கும் உதவுவதற்கு வைத்தியர் ஒருவர் முன்வந்துள்ளார்.பதுளை – பசறையில் கடந்த 20ஆம் திகதி இடம்பெaற்ற பஸ் விபத்தில் 15 பேர் உயிரிழந்திருந்தனர்.இதில் மூன்று குழந்தைகள் தமது தாய் தந்தையை இழந்து லுனுகலையில் பாட்டியுடன் வாழ்கின்றமை அனைத்து ஊடகங்களினதும் கவனத்தை ஈர்த்திருந்தது.இதையடுத்து குறித்த குழந்தைகளுக்கு உதவ அம்பாறை பிராந்திய தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் வஜிர ராஜபக்ஷ முன்வந்துள்ளார்.மூன்று...

திடீரென வாகனக் கதவு திறந்தது..நிலத்தில் வீழ்ந்து பலியான சிறுவன்

பாடசாலை வாகனம் ஒன்றின் கதவு திடீரென திறந்து கொண்டதால், வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த 5 வயது பாலர் பாடசாலை மாணவன் ஒருவன் கீழே விழுந்து உயிரிழந்துள்ளான்.வெல்லவாய, எல்ல வீதியின் ஹுனுகெட்டிய பகுதியில் இந்த விபத்து  இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.பாலர் பாடசாலை நிறைவடைந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே, இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.விபத்தில் 5 வயதான அனுஹஸ் எனும் மாணவனே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சம்பவம் தொடர்பில் வாகனத்தின்...

புதன், 24 மார்ச், 2021

கரிசல் காட்டுப் பகுதியில் உருக்குழைந்த நிலையில் சடலம் மீட்பு

மன்னார் - தலைமன்னார் பிரதான வீதி, கரிசல் காட்டுப் பகுதியில் 23-03-2021.அன்று   மாலை உருக்குழைந்த நிலையில் சடலம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.கரிசல் புகையிரத பாதைக்கு சுமார் இரண்டு கிலோ மீற்றர் தொலைவில் உள்ள காட்டுப் பகுதியில் குறித்த சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.குறித்த பகுதியில் மாடு தேடிச் சென்ற நபர் ஒருவர் 23-03-2021. அன்று மாலை குறித்த சடலத்தை அவதானித்த நிலையில் குறித்த சடலம் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.குறித்த...

செவ்வாய், 23 மார்ச், 2021

புத்தாண்டு காலத்தில் பாண் தவிர அனைத்து பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிக்கலாம்

தமிழ் – சிங்களப் புத்தாண்டு காலத்தில் பாண் தவிர அனைத்து பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையும் அதிகரிக்கப்படலாம் என்று அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இறக்குமதிக்குக் கட்டுப்பாடு, அதிகப்படியான வரி மற்றும் பொருட் களின் விலை அதிகரிப்பு ஆகியவையே விலை உயர்வுக்குக் காரணம் என அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலை வர் என்.கே. ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார். நிலாவரை.கொம் செய்திகள் >>>>&...

திங்கள், 22 மார்ச், 2021

குருநாகல் பிரதேசத்தில் ஊழியரின் உயிரைப் பறித்த வாழைப்ப​ழம்

வா​ழைப்பழம் ஒன்றினால், ​ஹோட்டல் ஊழியரின் உயிர், அநியாயமாக காவுக்கொள்ளப்பட்ட சம்பவமொன்று, குருநாகல் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.அந்த ஹோட்டலில் வாழைப்பழமொன்றை கொள்வனவு செய்த நுகர்வோர், வாழைப்பழத்தின் விலை அதிகமாகும் என ஹோட்டலில் குழப்பம் விளைவித்துள்ளார்.அந்த வாழைப்பழத்தின் உண்மையான பெறுமதி 30 ரூபாயாகும். அதனையே ஹோட்டல் உரிமையாளரும் தெரிவித்துள்ளார். எனினும், விலையை ஏற்றுக்கொள்வதற்கு நுகர்வோர் மறுத்துவிட்டார்.வாழைப்பழத்தின் விலையைக் கேட்டு கடுமையாக...

மரண அறிவித்தல் திரு மயில்வாகனம் இராசரத்தினம் ,22.03.2021

பிறப்பு-02-0-1930--இறப்பு-22-03 -2021.யாழ் நவற்கிரி புத்தூரை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு மயில்வாகனம்  இராசரத்தினம் ,அவர்கள்,.22.03.2021  திங்கள்கிழமை  இன்று இயற்கை எய்தினார்.  . அன்னார், காலஞ்சென்ற செல்லம்மாஅவர்களின்,அன்புகணவரும் செல்வரத்தினம் (இலங்கை )அருளம்மா (இலங்கை ) தாமோதரம்பிள்ளை (சுவிஸ் ) செல்வச்சரஸ்வதி (இலங்கை ) கனகலிங்கம்  (சுவிஸ் ) மகிளேஸ்வரி (இலங்கை )பாலசுந்தரம் (இலங்கை )ஆகியோரின் ...

மரண அறிவித்தல் திரு சின்னத்தம்பி சிவானந்தம் (செல்வா) 22.03.2021

பிறப்பு-02 05 1964--இறப்பு--22 03 2021யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிசில்வசித்து வந்தவரும் தற்போது  நவற்கிரியில் வதித்து வந்த திரு சின்னத்தம்பி சிவானந்தம் (செல்வா,சிவா.) அவர்கள் 22.03.2021,அன்று சிவபதம் அடைந்தார் அன்னார் காலஞ்சென்ற சின்னத்தம்பி அசுவதி  தம்பதிகளின் அன்பு மகனும் ( மூத்த புதல்வர் ) காலஞ்சென்ற கந்தையா, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,சிவறஞ்சனி (றஞ்சி .சுவிஸ்  )அவர்களின் பாசமிகு கணவரும் வசிதா நிறஞ்சன்...

வியாழன், 18 மார்ச், 2021

நாட்டில் தயாரிக்கப்பட்ட 100 சதவீத கறுவாப்பட்டை சிகரெட்

இலங்கையில் தயாரிக்கப்பட்ட 100 சதவீத கறுவாப்பட்டையை கொண்டு உருவாக்கப்பட்ட ஆயுர்வேத சிகரெட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த ஆயுர்வேத சிகரெட்டை அமைச்சர் விமல் வீரவன்ச நேற்று கொழும்பு கிங்ஸ்பேரி ஹோட்டலில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தி வைத்தார்.இந்த ஆயுர்வேத புகைத்தல் (கறுவாப்பட்டை சிகரெட்) உள்ளூர் உற்பத்தித் துறையில் பெரும் பாய்ச்சலை ஏற்படுத்தும் என்று தொழில்துறை அமைச்சர் விமல் வீரவன்ச இதன்போது கூறுகிறார். இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம்...

செவ்வாய், 16 மார்ச், 2021

மரண அறிவித்தல் திரு பெரியார் இராசரத்தினம் ,16.03.2021

 பிறப்பு 16.11.1944 -- இறப்பு 16.03.2021யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திரு பெரியார் இராசரத்தினம் அவர்கள் 16.03.2021 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார் காலஞ்சென்றவர்களான பெரியார் சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும்காலஞ்சென்ற சோமசுந்தரம் வாலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்கனகேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்காலஞ்சென்ற றதிஷ் மற்றும் அனுஷா, பிரசன்னா ஆகியோரின் பாசமிகு தந்தையும்தர்மதேவன், டினுஷா...

எத்தாலை கொத்தனியில் வேளாங்கண்ணி மாதா சிலை மீது கல்வீச்சு

.புத்தளம் கற்பிட்டி எத்தாலை கொத்தனி பகுதியில் வேளாக்கண்ணி மாதா சிலை மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்த சம்பவத்தால் அப்பகுதியில் மக்கள் ஒன்று கூடியதால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,கற்பிட்டி எத்தாலை கொத்தனி பகுதியில் நேற்று இரவு 26 வயதுடைய இளைஞர் ஒருவர் வேளாக்கண்ணி மாதா சிலை மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.இதனால் கண்ணாடி உடைகின்ற சத்தத்தை அவதானித்த அப்பகுதி...

திங்கள், 15 மார்ச், 2021

அமரர் திரு,ஆ ,க,சுப்பிரமணியம்.10ம் ஆண்டு நினைவஞ்சலி.16,03,2021

மண்ணில் : 06- பெப்ரவரி 1932 — விண்ணில் : 06 ஏப்ரல் 2011திதி : 16 -03- 2021.செவ்வாய்க்கிழமை ,அன்று யாழ். மாவிடடபுரத்தை பிறப்பிடமாகவும், நவற்கிரி புத்தூரை வசிப்பிடமாகவும் கொண்ட.அமரர் திரு ..(ஆ.க) கந்தையா. சுப்பிரமணியம் (மணியம் ) அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.பத்தாண்டு போயும் என்றும் எம்மோடு இருக்கும் ஏந்தலே!!பத்தாண்டு போனதையா!ஏங்கியே அழுகின்றோம் ஏந்தலே!!தாங்கியே பிடிக்க தலைவனின்றிதவிக்கின்றோம் ஐயா!வாங்கியே நீ வைத்தவற்றில்உன் வண்ணவதனம் கண்டுஒங்கியே...

ஞாயிறு, 14 மார்ச், 2021

விபத்துக்களால் நாட்டில் மரணங்களின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 15ஆக உயர்வு

 நாட்டில் வாகன விபத்துக்களால் நாளொன்றுக்கு பதிவாகும் மரணங்களின் எண்ணிக்கை 15ஆக உயர்வடைந்துள்ளதாக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.நேற்று மாத்திரம் வாகன விபத்துக்களில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.இவர்களில் 07 பேர் நேற்று இடம்பெற்ற விபத்துக்களில் சிக்கியவர்கள், என்பதுடன் மிகுதி 05 பேர் ஏற்கனவே இடம்பெற்ற விபத்துக்களில் சிக்கி வைத்திய சாலைகளில் சிகிச்சை...

சிறுநாவற்குளத்தில் விபத்தில் இரு இளம் குடும்பஸ்தர்கள் உயிரிழப்பு

  மன்னார்-மதவாச்சி பிரதான வீதி, சிறுநாவற்குளம் பகுதியில் 14-03-2021,¨இன்று இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணியளவில் இடம் பெற்ற விபத்தில் இரு இளம் குடும்பஸ்தர்கள் உயிரிழந்துள்ளனர்.குறித்த வீதியூடாக மோட்டார் சைக்கிளில் மன்னார் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியோரத்தில் நின்ற பனை மரத்தன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.இதன் போது சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துளள்தோடு,மேலும் ஒருவர் படுகாயமடைந்த...

அம்பாறையில் நள்ளிரவில் கிராமத்திற்குள் புகுந்த காட்டுயானைக்கூட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் பகுதியும், அம்பாறை மாவட்டத்திற்குட்பட்ட வைக்கியல்ல பிரதேசத்திற்குள் ஞாயிற்றுக்கிழமை (14) அதிகாலை புகுந்த காட்டுயானைகள் அங்கிருந்த பயன்தரும் பல மரங்களையும், தோட்டங்களையும் அழித்துத் துவம்சம் செய்துள்ளதாக அப்பகுதி பிரதேச வாசிகள் கவலை தெரிவிக்கின்றனர்.14-03-2021,இன்று ,ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமார் 2.00 மணியளவில் இவ்வாறு புகுந்த 3 இற்குமேற்பட்ட காட்டுயானைக் கூட்டத்தினால் அக்கிராம மக்கள் மிகுந்த அல்லோல கல்லோலப்பட்டுள்ளனர்....