siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 31 டிசம்பர், 2020

பொலன்னறுவையில் கொரோனா கைதிகள் ஐவர் தப்பியோட்டம்

பொலன்னறுவை – கல்லேல கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கொரோனாத் தொற்றுடைய சிறைக் கைதிகள் ஐவர்.31-12-20. இன்று காலை தப்பியோடியுள்ளனர்.இவ்வாறு தப்பிச் சென்ற சிறைக் கைதிகள் நீர்கொழும்பு சிறை கைதிகளாவார்.இவர்களை தேடும் நடவடிக்கை தீவரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>...

சுழலில் சிக்கி ஆற்றில் காணாமல் போன கிராம சேவகரின் சடலம் மீட்பு

மன்னார் – நானாட்டான் அருவியாற்றில் நண்பர்களுடன் குளித்த போது சுழலில் சிக்கி காணாமல் போன கிராம சேவகரை கடந்த இரு நாட்களாக தேடிவந்த நிலையில் அவரது சடலம் .31-12-20.இன்று காலை அரிப்பு பழைய தோனித்துறை பகுதியில் கரையொதுங்கியுள்ளது.காணாமல் போய் தற்போது சடலமாக மீட்கப்பட்ட கிராம அலுவலகர் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள தோமஸ்புரி கிராம அலுவலகர் பிரிவில் கிராம அலுவலகராக கடமையாற்றும் ஜனார்த்தனன் (வயது-26) என தெரிய வந்துள்ளது.நான்கு கிராம அலுவலகர்கள்...

கிளிநொச்சியில் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு நெல் சந்தைப்படுத்தல் அலுவலகர் கைது

கிளிநொச்சி – கரடிபோக்கு நெல் சந்தைப்படுத்தல் சபையின் வடக்கு மாகாண பிராந்திய அலுவலக அதிகாரி ஒருவர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் (சிஐடி)கைது செய்யப்பட்டுள்ளார்.கிளிநொச்சி – கரடிபோக்கு சந்தியில் அமைந்துள்ள நெல் சந்தைப்படுத்தல் சபையின் வடக்கு மாகாண பிராந்திய அலுவலகத்தின் பொறுப்பு வாய்ந்த உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.மாவட்ட ரீதியில் அறுவடை செய்யப்படும் நெல்லினை அவ்வந்த மாவட்டங்களில் உள்ள அரிசி ஆலைகளிற்கு வழங்கி, அரிசியாக...

முல்லைத்தீவு முள்ளியவளை கிணற்றில் உருக்குலைந்த சடலம்

முல்லைத்தீவு – முள்ளிவளையில் கிணறு ஒன்றில் உருக்குலைந்த நிலையில் சடலம் காணப்படுவதாக பொலிஸாருக்கு முறையிடப்பட்டுள்ளது.நாவற்காடு பகுதியில் உள்ள நீர் குறைந்த கிணறு ஒன்றின் உள்ளேயே குறித்த சடலம் காணப்படுகின்றது.கிணற்றின் வெளியில் ரி சேட் ஒன்றும், ஆண்கள் அணியும் பாதணிகளும் காணப்படுவதாக தெரியவருகிறது.அந்தப் பகுதி பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், நீதிபதி சம்பவ இடத்திற்கு வரும் வரையில் யாரையும் கிணற்றுக்கு அண்மையில் அனுமதிக்க முடியாது...

புதன், 30 டிசம்பர், 2020

களுத்துறை மாவட்டடத்தில்117 வயதுடைய பெண் மரணம்

இலங்கையின் மிகவும் வயது முதிர்ந்த பெண் என சான்றிதழ் பெற்றவர் நாகொட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 29-12-20.அன்று  மரணமடைந்துள்ளார்.குறித்த 117 வயதுடைய பெண்ணான ‘வேலு பாப்பானி அம்மா’ என்பவரே இவ்வாறு இரவு மரணமடைந்துள்ளார்.இரு பிள்ளைகளின் தாயாரான இவர் 1903ம் ஆண்டு மே 03ம் திகதி, களுத்துறை மாவட்டம், தொடங்கொடை பிரதேச செயலக பிரிவில் உள்ள நேஹின்ன கிராமத்தில் பிறந்தார்.அவரது விபரங்கள் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட முதியவரின் அடையாள...

கொழும்பு கொள்ளுப்பிட்டி யில் வெள்ளத்தில் மூழ்கி ஒருவர் மரணம்

கொழும்பு – கொள்ளுப்பிட்டியில் கட்டடம் ஒன்றின் கீழ்தளம் வெள்ளத்தில் மூழ்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.கொழும்பில் நேற்று (29) இரவு பெய்த மழையினால் டுப்ளிகேஷன் வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டடம் ஒன்றின் கீழ்தளமே இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளது.குறித்த கட்டடத்தில் நிர்மாணப்பணியில் ஈடுபடுகின்ற ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம் குறித்த கட்டடத்தின் கீழ்தளத்தில் மேலும் 5 பேர் சிக்கி இருந்த நிலையில் அவர்கள் உயிர்தப்பியுள்ளனர்....

செவ்வாய், 29 டிசம்பர், 2020

மரண அறிவித்தல்அமரர் வயிரமுத்து நவரத்தினம்(நவம்) 29-12-20

உதிர்வு--29-12-2020.யாழ். கட்டைப்பிராயை பிறப்பிடமாகவும். மாவிட்டபுரம் கொல்லங்கலட்டியை. வதிவிடமாகவும். தற்பொழுது ஆவரங்கால் சங்கணாவத்தையில் வசித்து வந்தவருமாகிய. அமரர் திரு. வைரமுத்து நவரத்தினம் (நவம்)  அவர்கள் இன்று 29/12/20 செவ்வாய்கிழமை. இறைபதம் அடைந்துள்ளார்.அன்னார். காலஞ்சென்ற வைரமுத்து கண்ணம்மா தம்பதிகளின் மகனும். காலஞ்சென்ற திருமதி மனோன்மணியின் அன்புக்கணவரும்.   காலஞ்சென்ற விசாலாட்ச்சி (இரத்தினக்கா)மற்றும் ரதிராணி(ராணி) ...

வாகரையில் இரு குளங்கள் உடைப்பெடுத்ததால் பலநூறு விவசாயிகள் பரிதவிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை கமநல சேவை பிரிவுக்குட்பட்ட எல்லத்துமடு குளம் மற்றும் சாம்பல்கேணி குளம் ஆகிய இரண்டு குளங்களும் உடைப்பெடுத்ததன் காரணமாக இரண்டு குளத்தையும் நம்பி விவசாயம் செய்யும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.எல்லத்துமடுப் பகுதியில் சுமார் 300 மேற்பட்ட ஏக்கர் விவசாய செய்கையில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் தற்போது ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக எல்லத்துமடுகுளம் உடைப்பெடுத்ததன் மூலம் வேளாண்மை அனைத்தும் மணலினால் மூடப்பட்டு காணப்படுகின்றது.அத்தோடு...

திங்கள், 28 டிசம்பர், 2020

மரண அறிவித்தல்,அமரர் இராசிங்கம் (ராசையா. ) சுப்பிரமணியம் 28.12.20

மலர்வு-20-08-1941 --உதிர்வு--28 12-2020 யாழ்  தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாகவும் நவற்கிரியை  வதிவிடமாகவும் கொண்ட அமரர் இராசிங்கம்(ராசையா. ) சுப்பிரமணியம்  (பிரபலியமான  கொழும்பு -யாழ் லொறி-சாரதி - ரைவர் மணியம்.. ) அவர்கள் 28-12-2020 திங்கள்க்கிழமை இன்று   இயற்கை எய்தினார்.  . அன்னார், காலஞ்சென்ற இராசிங்கம் தம்பதிகளின் பாசமிகு மகனும் திருமதி இராசலட்சுமி  (ராசு ) அவர்களின் ன்புக் கணவரும்...

ஞாயிறு, 27 டிசம்பர், 2020

அறபாநகரில் மதிலை பிடித்து ஏற முயன்ற சிறுவன் மதிலிடிந்து மரணம்

¨கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள அறபாநகர் கிராமத்தில் மதில் விழுந்து சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் 26-12-20.அன்று மாலை இடம்பெற்றுள்ளது.வாழைச்சேனை நாசீவந்தீவைச் சேர்ந்த சிறுவன் தனது தாய் தொழில் நிமிர்த்தம் சவூதி அரேபியாவிற்கு சென்ற நிலையில் அறபாநகர் பகுதியிலுள்ள தனது சகோதரியின் வீட்டில் வசித்து வந்த நிலையில் எதிர் வீட்டு மதில் சுவரினை பிடித்து ஏறுவதற்கு முயற்சித்த போது மதில் சிறுவன் மேல் விழுந்துள்ளது. இந்த நிலையில்...

மரண அறிவித்தல் அமரர் கதிரேசு சுப்பிரமணியம் 27.12.20

மலர்வு-25-02-1957 --உதிர்வு--27 12-2020 யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும். வதிவிடமாகவும் கொண்ட அமரர் கதிரேசு சுப்பிரமணியம் (மணியம் ) அவர்கள் 27-12-2020..ஞாயிற்ருக்கிழமை இன்று   இயற்கை எய்தினார்.  . அன்னார், காலஞ்சென்ற கதிரேசு.பூலோகம்  தம்பதிகளின் பாசமிகு மகனும் அழகம்மா(கிளி  )  பூலோகராசன் (ராசன்  )  ஆகியோரின் அன்புச்சகோதரும் திரு துரைசிகத்தின் மைத்துனரும்  ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை...

ஐந்து நாட்களின் பின்னும் இறந்த உடலில் கொரோனா வைரஸ்

காலியில் அண்மையில் கொரோனா தொற்றால் மரணித்த ஒருவரின் சடலம் மீது ஐந்து நாட்களின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலும் உடலில் கொரோனா வைரஸ் இருந்தமை இன்று (26) உறுதி செய்யப்பட்டுள்ளது.19ம் திகதி இறந்தவரின் குறித்த சடலத்தை தகனம் செய்ய நீதிமன்றம் தடை விதித்த நிலையில், சுகாதார சேவைகள் பணிப்பாளரின் உத்தரவில் 24ம் திகதி தகனம் செய்வதற்கு முன்னர் மேற்கொண்ட பரிசோதனையின் போதே உடலில் தாெடர்ந்தும் வைரஸ் இருப்பது உறுதியானது.இதன்படி கொரோனா வைரஸ்...

செவ்வாய், 22 டிசம்பர், 2020

துறைநீலாவணையில் வீதியில் சென்றவர் மின்சாரம் தாக்கி பலி

அம்பாறை – களுவாஞ்சிகுடி, துறைநீலாவணை பகுதியில். 21-12-20.அன்று நேற்றுமின்சாரத்தில் சிக்குண்டு குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவத்தில் துறைநீலாவணை 7ம் வட்டாரத்தைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான முருகேசு புலேந்திரன் (வயது-61) என்பவரே உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளவர் இரும்புக்கத்தியை வீதியால் எடுத்துச் செல்லும்போது, வீதியின் அருகாமையிலுள்ள மின்மாற்றியின் உயரழுத்தம் மின்சாரக்கம்பியில் தவறுதலாகப்பட்டுள்ளது.அதனைத்...

மாத்தளையில் முப்பது குழந்தைகளை கடத்தி விற்றவர் கைது

சிறுவர் கடத்தல் தொடர்பில் மாத்தளையில்.22-12-20. இன்று  ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் புதிதாகப் பிறந்த 30 குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டமை தெரியவந்துள்ளது என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>...

சனி, 19 டிசம்பர், 2020

பொத்துஹெர தொடக்கம் மத்திய அதிவேக வீதியின் 3ம் கட்டம் ஆரம்பம்

நாட்டில் மத்திய அதிவேக வீதியின் மூன்றாம் கட்ட நிர்மாணப் பணிகள்.19-12-20. இன்று ஆரம்பிக்கப்பட்டன.பொத்துஹெர தொடக்கம் கலகெதர வரையான பகுதியை இணைக்கும் திட்டத்தின் கட்டுமான பணிகளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ திறந்து வைத்தமையைத் தொடர்ந்து நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் பல கட்டங்களின் கட்டுமானப் பணிகள் முன்னதாகவே தொடங்கப்பட்டிருந்தாலும் பொத்துஹெர தொடக்கம் கலகெதர வரையான பகுதியின் கட்டுமானம் பல்வேறு காரணங்களால் ஒத்திவைக்கப்பட...

இருபாலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலருணவு வழங்கல்

யாழ்ப்பாணம் – இருபாலை தெற்கு ஜே/257 கிராம வேவையாளர் பிரிவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்வு கல்வியங்காடு நல்லூர் நண்பர்கள் (UK- EUROPE) நிதிப்பங்களிப்பில் இருபாலை தெற்கு மாதர் அபிவிருத்திச்சங்க மண்டபத்தில்.19-12-20. இன்று  காலை நடைபெற்றது.தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் கொரோனா தொற்றை அடுத்து தொடர் மழை வெள்ளம் காரணமாக அன்றாடம் உழைத்துவாழும் குடும்பங்கள் பல பாதிப்படைந்துள்ளன.இந்நிலையிலேயே இருபாலை தெற்கு...

வெள்ளி, 18 டிசம்பர், 2020

கொழும்பில் பச்சிளம் சிசு கொரோனாவினால் பரிதாபமாக மரணம்.

கொழும்பில்  பிறந்து 46 நாட்களேயான சிசு ஒன்று கொவிட் நோய்த் தொற்றினால் உயிரிழந்துள்ளது.கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு முன்னதாக கடந்த 08ஆம் திகதி 20 நாளான சிசுவொன்று இதே வைத்தியசாலையில் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.கொவிட் நிமோனியா காரணமாக இந்த சிசு உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை அறிவித்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த சிசுவின்...

நாட்டில் 35,000ஐ கடந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

நாட்டில்.17-§1-20.  நேற்று 650 பேர் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதன்மூலம், தொற்றாளர்களின் எண்ணிக்கை 35,387 ஆக உயர்ந்தது.17-§1-20.  நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 638 பேர் பேலியகொட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள். 12 பேர் சிறைகளில் இருந்தே அடையாளம் காணப்பட்டனர்.மினுவாங்கொட – பேலியகொட கொத்தணி 31,720 ஆக அதிகரித்துள்ளது.17-§1-20.  நேற்று 701 பேர் குணமடைந்து வெளியேறியதை தொடர்ந்து, குணமடைந்தவர்களின்...

வியாழன், 17 டிசம்பர், 2020

நாட்டில் 34 ஆயிரத்தைக் கடந்த கொரோனா நேற்று மட்டும் 616 பேருக்கு தொற்று

நாட்டில் நேற்று 616 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட கொரானா தொற்றாளர்களின் எண்ணிக்கை 34,734 ஆக உயர்ந்துள்ளது.நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 560 பேர் மினுவாங்கொட-பேலியகொட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள். நாடு முழுவதும் உள்ள சிறைகளில் இருந்து 51 பேர் அடையாளம் காணப்பட்டனர்.இந்தியாவில் இருந்து வந்த இரண்டு நபர்கள், உக்ரைனிலிருந்து இரண்டு பேர் மற்றும் குவைத்திலிருந்து ஒருவர் உட்பட ஐந்து வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்...

செவ்வாய், 15 டிசம்பர், 2020

மரண அறிவித்தல் அமரர் வேலாயுதம் கணேசமூர்த்தி (ராசன்) 15.12.20

மலர்வு-28-10-1958 --உதிர்வு--15 12-2020.யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும். வதிவிடமாகவும் கொண்ட அமரர் வேலாயுதம் கணேசமூர்த்தி .(ராசன்)அவர்கள் 15-12-2020.செவ்வாய்க்கிழமை இன்று   இயற்கை எய்தினார்.  . அன்னார், காலஞ்சென்ற வேலாயுதம் சரஸ்வதி தம்பதிகளின் பாசமிகு மகனும் அழகேஸ்வரி (அழகி )அவர்களின் அன்புக் கணவரும் திரு ராசதுரை காலஞ்சென்ற பாக்கியம்  ஆகியோரின் மருமகனும்  $¨வரதலக்சுமி ரத்தினம் கனகம்மா  பாக்கியம் ஆகியோரின் அன்புச்சகோதரும்...

திங்கள், 14 டிசம்பர், 2020

அமரர் முத்துக்குமாரு ஆறுமுகசாமி 4ம்ஆண்டு .நினைவஞ்சலி 14.12.20

மலர்வு:12:ஜனவரி:1942: உதிர்வு : 28 நவம்பர்: 2016             திதி -.14-12.2020யாழ். மறவன்புலவு கோவிலாக்கண்டி தச்சன்தோப்பைப்பிறப்பிடமாகவும், அச்சுவேலி தோப்பை வதிவிடமாகவும், ஜெர்மனி Böblingen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட முத்துக்குமாரு ஆறுமுகசாமி (இப்பாறிய  யாழ் ஈழநாடு பத்திரிகை  உத்தியோகத்தர்) அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.(திதி ).14.12.2020.திங்கள்க்கிழமை .அன்று   மறைந்துவிட்ட உங்கள் உறவின்  நீங்காத...

ஞாயிறு, 13 டிசம்பர், 2020

யாழ் மருதனார்மடம் கொரோனா; 218 பேரின் முடிவுகள் இன்று இரவுக்கு

யாழ் உடுவில் பிரதேச செயலகப் பிரிவு முழுமையாக முடக்கப்பட்டுள்ளது, பிசிஆர் பரிசோதனை முடிவுகளை கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.13-12-20.இன்று  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்துள்ளார். மேலும்,“மருதனார்மடம் சந்தையில்12-12-20.நேற்று 398 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 283 பேரின் மாதிரிகள் யாழ் போதனாசாலை ஆய்வுக்கூடத்தில்...

இரத்தினபுரி மற்றும் கெகிராவை விபத்துக்களில் இருவர் காயம் இருவர் பலி

இரத்தினபுரி மற்றும் கெகிராவை பகுதிகளில் இடம்பெற்ற இருவேறு விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.பண்டாரநாயக்க மாவத்தைக்கு அருகில் மோட்டார் சைக்கிளை வீதியின் குறுக்காக தள்ளி சென்ற போது லொறி ஒன்று மோதிய விபத்தில் 70 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளார்.சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.இதேவேளை, இன்று (13) அதிகாலை கெகிராவை, தம்புள்ளை வீதியின் சூரியகம சந்திக்கு அருகில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.மேலும்...