siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 7 மே, 2023

கேரளாவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழப்பு

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தனூர்- பரப்பனங்காடி கடற்கரையில் சுற்றுலா பயணிகள் சென்ற சொகுசு படகு எதிர்பாராதவிதமாக கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 
இந்த சொகுசு கப்பலில் 40 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், 30 பேர் நீரில் மூழ்கியுள்ளதாக அச்சம் ஏற்பட்டுள்ளது. 
நீரில் மூழ்கியவர்களை தேடும் பணியில் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மீட்கப்பட்டவர்களை தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் அனுப்பிவைக்கும் பணிகள் 
நடைபெற்று வருகிறது.
 30 பேர் வரை நீரில் மூழ்கியுள்ளதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.படகு விபத்தில் உயிரிழந்தவர்களில் 9 பேர் விவரம் வெளியாகியுள்ளது. உயிரிழந்தவர்களின் பெயர் 
விவரம்:- அஸ்னா (வயது 18), சப்னா (வயது 7), பாதிமா மின்ஹா (வயது 12), சித்திக் (வயது 35), ஜலசியா ஜபீர் (வயது 40), அப்லக் (வயது 7), பைசல் (வயது 3), அன்ஷித், ரஷீனா.ஆகியோர் என்பது
 குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





சனி, 6 மே, 2023

ஆப்பிரிக்கா நாட்டில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 176 பேர் உயிரிழப்பு

ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கு காங்கோவில் உள்ள தெற்கு கிவு மாகாணத்தில் திடீரென இரவு முழுவதும் மழை பெய்தது. அங்குள்ள ஆறுகள் 
பெருக்கெடுத்து ஓடின. 
வெள்ளத்தில் சில கிராமங்கள் மூழ்கியதில் அப்பகுதி மக்கள் வெள்ளத்தில் மூழ்கி இறந்தனர். அப்பகுதியில் உள்ள சாலைகள், பள்ளிகள், மருத்துவமனைகள் வெள்ளத்தில் அடித்துச்
 செல்லப்பட்டன. 
இறந்தவர்களின் உடல்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், காங்கோவில் வெள்ளத்தில் சிக்கியும், நிலச்சரிவில் புதைந்தும் 176 பேர் உயிரிழந்துள்ளனர். 
மேலும், மாயமான 100-க்கும் மேற்பட்டோரை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர். வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் வரும் திங்கட்கிழமை தேசிய துக்க தினம் அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>


வெள்ளி, 5 மே, 2023

கஜுகம பகுதியில் 2 பஸ்கள் மோதி விபத்து - 23 பேர் வைத்தியசாலையில் அனுமதி

இலங்கை கஜுகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 23 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து.05-05-2023. இன்று காலை 7.30 அளவில் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பிலிருந்து மூதூர் நோக்கி சென்ற தனியார் பஸ் ஒன்றும் கண்டியிலிருந்து நீர்கொழும்பு நோக்கிச் சென்ற இலங்கை 
போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளன.
இந்த நிலையில் இரு பஸ்களின் சாரதிகள் உள்ளிட்ட 23 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் 
தெரிவித்தனர். 
விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு 
வருகின்றனர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வியாழன், 4 மே, 2023

மரண அறிவித்தல் திரு. தம்பு பாலசிங்கம் 04.05-2023

தோற்றம் 28-01-191937. மறைவு -04-05-2023-
யாழ்.  நவற்கிரி புத்தூரைய்  பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும்  
கொண்ட அமரர் 
திரு.தம்பு பாலசிங்கம் அவர்கள் .04-05-2023.வியாழக்கிழமை  அன்று இறைவனடி சேர்ந்தார்..அன்னார் காலஞ் சென்றவர்களான,தம்பு .மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ் சென்ற திலகவதி அவர்களின் பாசமிகு கணவரும் 
கமலி. சேகர் சாந்தி .நந்தா .காலம்சென்ற சத்தியன் மற்றும் மாலாஆகியோரின் அன்புத்தந்தையாரும் காலஞ் சென்ற துரைராஜா .செல்வராஜா ஜெயரத்தினம் .சின்னமணி ..ஞானமணி,வித்திலசிலோன்மணி  மற்றும் 
  சிவலிங்கமணி ஆகியோரின் சகோதரனும் ஆவர் 
அன்னாரின் இறுதிக்கிரியை 
நாளை திகதி-  05-05-2023.,  வெள்ளிக்கிழமைஅன்று .10:00 மு.ப — 12:30 பி.ப.மணி  வரை  அன்னாரது  நவற்கிரி இல்லத்தில் நடைபெற்று 
நல்லடக்கம் 05.05.2023 வெள்ளிக்கிழமைஅன்று 
முகவரி   நவற்கிரி  நிலாவரை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும் 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
தகவல்
குடும்பத்தினர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி 1ருவாண்டா 36 பேர் உயிரிழப்பு

ருவாண்டா நாட்டில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேல் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக வடக்கு மற்றும் மேற்கு மாகாணங்களில் இடைவிடாமல் மழை பெய்தது. விடிய விடிய மழை 
கொட்டித் தீர்த்தது. 
இதன் காரணமாக வெள்ளப்பெருக்கு மற்றும் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. ஏராளமான குடியிருப்புகள், விளை நிலங்கள், சாலைகள் சேதமடைந்தன. 
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. மழை வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 136 பேர் உயிரிழந்துள்ளனர்.
 வெள்ளத்தில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இரவு நேரத்தில் மக்கள் தூங்கிக்கொண்டிருந்தபோது கனமழை பெய்ததால் பல வீடுகள் இடிந்துள்ளன. 
இதுவே உயிரிழப்பு அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் என அதிகாரிகள் கூறுகின்றனர். வெள்ளப்பெருக்கு அதிகரித்து வருவதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
ருவாண்டாவில் வழக்கமாக மார்ச் முதல் மே மாதம் வரை கனமழை காரணமாக பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படும். ஆனால், செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு வழக்கத்திற்கு மாறாக
 அதிகமாக இருந்தது.
 இதேபோல் அண்டை நாடான உகாண்டாவிலும் கனமழை பெய்து வருகிறது. மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 6 பேர் 
பலியாகி உள்ளனர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




புதன், 3 மே, 2023

பெல்கிரேட் பகுதியில் பாடசாலை மாணவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 9 பேர் மரணம்

செர்பியா நாட்டின் பெல்கிரேட் பகுதியில் உள்ள பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் சிக்கி எட்டு குழந்தைகள் மற்றும் காவலர் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 
இந்த சம்பவம் தொடர்பாக 14 வயது சிறுவனை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். 14 வயது சிறுவன் தனது தந்தையின் துப்பாக்கியை பயன்படுத்தி துப்பாக்கி சூடு நடத்தி இருக்கலாம் என்று 
கூறப்படுகிறது. 
செர்பியா தலைநகரில் உள்ள வர்ச்சர் பகுதியில் இயங்கி வரும் பள்ளியில் துப்பாக்கி சூடு நடைபெற்றது. எட்டு குழந்தைகள் உள்பட மொத்தம் ஒன்பது பேர் உயிரிழந்த நிலையில், ஆறு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்
 காயமுற்றனர்.
துப்பாக்கி சூடு ஐந்து நிமிடங்கள் வரை நடைபெற்று இருக்கிறது. போலீசார், அவசர கால மீட்பு படையினர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
படிப்பில் நல்ல கவனம் செலுத்தி வந்த மாணவர் போதை பழக்கத்தில் இவ்வாறு செய்திருக்கலாம் என்று தகவல்கள்
 வெளியாகி உள்ளன.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



செவ்வாய், 2 மே, 2023

அல்லைப்பிட்டிவிபத்தில் பரிதாபமாக பெண்கள் இருவர் பலி நால்வர் படுகாயம்

  யாழ்ப்பாணம் - அல்லைப்பிட்டியில்   01-05-2023.அன்று மாலை காருடன் , மோட்டார் சைக்கிள் மோதியதில் இரு பெண்கள பரிதபமாக உயிரிழந்த சமபவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் விபத்தில் உயிரிழந்த பெண்கள் மானிப்பாய் ரஞ்சித் மோட்டோர்ஸ் ஊழியர்களே உயிரிழந்துள்ளனர்.
சம்பவத்தில் கோப்பாயை சேர்ந்த நவநீதராசா நிலக்சனா (26), மானிப்பாயை சேர்ந்த கீதரட்ணம் திவ்யா (31) ஆகியோரே 
உயிரிழந்தனர்.
யாழ்ப்பாணம், ஊர்கவற்றுறை வீதியில் அல்லைப்பிட்டி சந்திக்கு அண்மையாக உள்ள வளைவில்   01-05-2023.அன்று மாலை  4 மணியளவில் விபத்து நிகழ்ந்தது.
இருவர் பலி நால்வர் படுகாயம்
ஊர்காவற்றுறையிலிருந்து வந்த கார், வீதியின் மத்திய வெள்ளைக் கோட்டை கடந்து எதிர்த்திசையில் வந்த மோட்டார் சைக்கிளை
 மோதித்தள்ளியது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த யுவதிகள் இருவரும் சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
கார் தடம்புரண்டதில், காரில் பயணித்த வடமராட்சி, பருத்தித்துறையை சேர்ந்த சிவசுப்ரமணியம் சுதாகரன், கருணாமூர்த்தி விமலாதேவி ஆகியோர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.இந்நிலையில் அண்மைகாலமாக விபத்துக்களின் உயிரிழப்போர் அதிகரித்து வரும் நிலையில், வாகனோட்டிகள், தமது வேகம் தொடர்பில் அவதானம் செலுத்துவது அவரது உயிரை மட்டுமன்றி பிற உயிர்களையும் காப்பாற்றும்.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



இலங்கை மாணவர் பெலராசில் சடலமாக மீட்ப்பு கொலையா தற்கொலையா விசாரணைகள் ஆரம்பம்

பெலராசில் மருத்துவ பீடத்தில் கல்வி கற்கும் இலங்கை மாணவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
பெலராசில் கடந்த சனிக்கிழமை மாணவர் அறையொன்றில் இருந்தே இவர் சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் அப் பீடத்தில் 4 ஆம் ஆண்டில் கல்வி கற்பதாகவும் 24 வயதான இவர் அவ் வருடத்தின் சிறந்த மருத்துவ மாணவனாக தெரிவு செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவன் தொடர்பில் தெரிய வந்தவை
கண்டி பிரதேசத்தில் உள்ள பிரபல தனியார் கல்லூரியொன்றில் உயர்தர உயிரியல் பிரிவில் கல்வி பயின்றுள்ளார்.
மாணவனின் தாயார் கடந்த சனிக்கிழமை தனது மகனுக்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்தபோது ​​அவர் அழைப்புக்கு பதிலளிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனை தொடர்ந்து மாணவனின் தாயார் தனது மகனின் மருத்துவ நண்பர்கள் பலரை அழைத்து தனது மகனுக்கு தொடர்ந்து அழைப்பு விடுத்தும் அவர் பதிலளிக்காததால் அவரை தொடர்புக்கொள்ளுமாறு 
தெரிவித்துள்ளார்.
இதன்போது சக மருத்துவ மாணவர்கள் அவர் தங்கியிருந்த அறைக்கு சென்று பார்த்த போது மாணவனின் கழுத்தில் கட்டு ஒன்றும், அறையிலுள்ள உயரமான அலுமாரியில் மறுமூலையில் கட்டப்பட்ட கயிறும் காணப்பட்டது.
இது குறித்து மருத்துவ மாணவர்கள் மாணவனின் தாயாருக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்ததாகவும் 
கூறப்படுகிறது.
 மாணவனின் மரணம் தற்கொலையா அல்லது வேறு காரணமா என்பது இதுவரையில் தெரியவரவில்லை. இது தொடர்பான உண்மைகளை வெளிக்கொணர பொலிஸார் தீவிர விசாரணை
 நடத்தி வருகின்றனர்.என்பது குறிப்பிடத்தக்கது.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



திங்கள், 1 மே, 2023

பொது மக்கள் மீது தென் அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு! 10 பேர் பலி

தென் அமெரிக்காவில் உள்ள ஈக்குவாடோரின் குவாயாகில் நகரில் ஆயுதம் தாங்கிய கும்பல் ஒன்று பொது மக்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும்,  இச்சம்பவத்தில் 5 வயது சிறுமி உள்பட மூவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன் பொலிஸார் விசாரணைகளை நடத்தி
 வருகின்றனர்.
ஈக்குவாடோரில், போதை பொருட்கள் கடத்தல் கும்பல்களால் குற்ற சம்பவங்கள் அதிகரித்தது.
அவர்கள் அடிக்கடி அரசாங்கத்திற்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
இதனால் தங்கள் பாதுகாப்புக்காக துப்பாக்கி வைத்துக் கொள்ள அந்த நாடு அனுமதி அளித்துள்ளமை என்பது குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




ஞாயிறு, 30 ஏப்ரல், 2023

யாழ் புத்தூர் அரசினர் மத்திய மருந்தகத்தின் சேவைகள் பாதுகாப்பு வழங்கினால் ஆரம்பிக்க முடியும்

 புத்தூர் அரசினர் மத்திய மருந்தகத்தின் சேவைகளை உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டால் எதிர்வரும்.02-05-2023. செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்க முடியுமென வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புத்ததூர் வைத்தியசாலையில் புகுந்து தாக்குதல் நடத்தி வைத்தியருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த சம்பவத்தையடுத்து வைத்தியசாலையின் சேவைகள் இதுவரை இடம்பெறவில்லை.
 தற்போது வைத்தியசாலைக்கு பொலிசாரின் பாதுகாப்பு 24 மணி நேரமும் வழங்கப்பட்டுள்ளதுடன் வைத்தியசாலையின் சேவையினைத் தொடர்வதற்கு வைத்தியசாலையின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டும் என வைத்தியசாலையின் வைத்தியர் கோரியுள்ளார். அத்துடன் வைத்தியசாலையில் கண்காணிப்பு கமரா மற்றும் 
பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டால் அதனை வைத்திய சங்கத்தினர் பரிசீலனை செய்து வைத்தியரை தொடர்ந்து பணி செய்வதற்கு அனுமதிக்க முடியும் என தெரிவித்தனர்.
 அச்சுறுத்தல் விடுத்தவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் குறித்த வைத்தியருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த காரணத்தால் தொடர்ந்தும் அவ்வாறான நிலை தோன்றலாம் என வைத்தியர் 
அச்சமடைந்துள்ளார். எனவே வைத்தியர் தனது சேவையினை மீண்டும் தொடர்வதற்கு
 வைத்தியசாலையின் பாதுகாப்பு உறுதிப்படுத்த வேண்டும் அவ்வாறு உறுதிப்படுத்தினால் தொடர்ந்தும் சேவையை மேற்கொள்ள முடியும் என வைத்தியர் சங்கத்தினர் தெரிவித்தனர்.
என்பது குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




மரண அறிவித்தல் திருமதி கனகசபை புஸ்பராணி 30.04.2023

தோற்றம் -21-02-1946-மறைவு-30-04-2023.
யாழ். தெல்லிப்பழையை பிறப்பிடமாகவும்  நவற்கிரி புத்தூரைய்  வசிப்பிடமாகவும்  கொண்ட அமரர் திருமதி கனகசபை புஸ்பராணி   அவர்கள் 30-04-2023. அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ் சென்றவர்களான கதிரவேலு -பாக்கியம் அவர்களின் அன்புமகளும் காலஞ் சென்றவர்களான இளையதம்பி -ஆச்சிமுத்து   தம்பதிகளின் அன்பு மருமகளும்  திரு கனகசபை அவர்களின் அன்புமனைவியும் கலக்குமார் .கலையரசி .கலைமகள் .ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவர் 
.அன்னாரின் இறுதிக்கிரியை 
திகதி-  30-04-2023. 10:00 மு.ப — 1:30 பி.ப.மணி  ஞாயிற்றுக்கிழமை .அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று அன்னாரின்  நல்லடக்கம்
30-04-2023. ஞாயிற்றுக்கிழமை  - பி.ப 2:00. மணிக்கு ;.முகவரி   நவற்கிரி  நிலாவரை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும் 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
தகவல்
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு--
மகன் -இலங்கை - 0094755437287.
மகள் -இலங்கை-0094765394630
மகள் -சுவிஸ்- 0041762482376

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>






சனி, 29 ஏப்ரல், 2023

ஆனையிறவில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் இளைஞன் பலி

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.
வடமராட்சி சாரையடி பகுதியைச் சேர்ந்த 27 வயதான சத்தியமூர்த்தி சத்தியன் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இளைஞர் யாழ். போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி 
உயிரிழந்துள்ளார்.
ஹயஸ் ரக வேன் வாகனம் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதி சில தினங்களுக்கு முன்னர் இவ்விபத்து நேர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>







வெள்ளி, 28 ஏப்ரல், 2023

தங்க துப்பாக்கியுடன் அவுஸ்திரேலிய விமான நிலையத்தில் அமெரிக்க பெண் கைது

அவுஸ்திரேலியாவில் சிட்டி விமான நிலையத்தில் அமெரிக்க பெண் ஒருவரின் பயணப் பையில் 24 காரட் தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து சிட்னிக்கு அடையாளம் காணப்படாத
 பெண் வந்துள்ளார்.
மற்றும் துப்பாக்கிக்கான அனுமதி இல்லை என்று ஆஸ்திரேலிய எல்லைப் படை (ABF) தெரிவித்துள்ளது. 
இந்நிலையில், அவளுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். 
ஆஸ்திரேலிய எல்லைப் படையால் வெளியிடப்பட்ட புகைப்படங்கள், விமான நிலைய ஸ்கேன் மூலம் பெண்ணின் சாமான்களைக் காட்டியது, அவரது பையில் துப்பாக்கி இருப்பது தெரியவந்தது.இரண்டாவது புகைப்படம் பையைத் திறந்ததும் கைத்துப்பாக்கியைக் காட்டியது.  
ஒரு ஏபிஎஃப் அதிகாரி ஒரு அறிக்கையில், அதிநவீன கண்டறிதல் தொழில்நுட்பம் ஒரு ஆபத்தான ஆயுதம் நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்க உதவியது என்று கூறினார்.
சட்டவிரோத மற்றும் மிகவும் ஆபத்தான பொருட்களை ஆஸ்திரேலியாவின் எல்லையை கடக்காமல் குறிவைத்து நிறுத்துவதில் ஆஸ்திரேலிய எல்லைப் படை அதிகாரிகள் எவ்வளவு சிறந்து 
விளங்குகிறார்கள் 
என்பதை நாங்கள் மீண்டும் மீண்டும் பார்த்திருக்கிறோம் என்று ஆஸ்திரேலிய எல்லைப் படை கமாண்டர் ஜஸ்டின் பாதர்ஸ்ட் கூறினார்.
28 வயதான பெண் மீது குற்றம் சாட்டப்பட்டு, டவுனிங் சென்டர் லோக்கல் கோர்ட்டில் ஆஜராகி ஜாமீன் பெற்றதாக அதிகாரிகள் 
தெரிவித்தனர்.நீதிமன்ற நடவடிக்கைகளின் முடிவு நிலுவையில் உள்ள நிலையில், அவர் தனது விசாவை ரத்துசெய்து ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியேற்றப்படுவதையும் எதிர்கொள்ள நேரிடும்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

வியாழன், 27 ஏப்ரல், 2023

ஆய்வில் அதிர்ச்சி எலிகள் மூலம் பரவும் ஒமைக்ரான் உருமாறிய கொரோனா

கொரோனா உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது எவ்வாறு பரவியது என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். 
கடந்த 2021-ம் ஆண்டு தைவான் நாட்டில் ஒரு ஆய்வு மையத்தில் தனிமையில் இருந்த இளம் பெண் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அவர் ஆய்வகத்தை விட்டு வேறு எங்கும் 
செல்லவில்லை. 
இதனால் அவருக்கு எப்படி கொரோனா பரவியது என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பாதிப்பு ஏற்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பாக அவரை எலி கடித்தது தெரியவந்தது. எலி மூலம் கொரோனா பரவியதா என அப்போது பெரும் கேள்வி எழுந்தது.
இதனைத் தொடர்ந்து ஆப்பிரிக்கா அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் எலிகள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் எலிகளுக்கு டெல்டா ஒமைக்ரான் வகையான உருமாறிய கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 
இது தொடர்பாக வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரி 
மற்றும் பிற இந்திய நிறுவனங்களின் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



புதன், 26 ஏப்ரல், 2023

கம்பளையில் பரசிட்டமோல் மருந்தை அதிகமாக உட்கொண்டதால் சிறுமி உயிரிழப்பு

இலங்கை கம்பளை உடவெல்ல பிரதேசத்தில் ஏழு வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மத்திய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
காய்ச்சல் காரணமாக அரசு மருத்துவமனையில் பரசிட்டமோல் மருந்தை அளவுக்கு அதிகமாக உட்கொண்டதால் சிறுமி உயிரிழந்ததாக 
கூறப்படுகிறது.
காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமியை பெற்றோர் குருந்துவத்தை பிரதேச வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
வைத்தியசாலை வைத்தியர் சிபாரிசு செய்த மருந்தை வைத்தியசாலையின் மருந்தகத்தில் இருந்து எடுத்து சிறுமிக்கு வழங்கிய போதும் நோயின் தாக்கம் குறையவில்லை என உறவினர்கள்
 தெரிவிக்கின்றனர்.
அதனையடுத்து, சிறுமியை கம்பளை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற பெற்றோர், அங்கு குருந்துவத்தை பிரதேச வைத்தியசாலையினால் வழங்கப்பட்ட மருந்துகள் பரிசோதிக்கப்பட்டன. மருத்துவமனையில் அதிக அளவு மருந்துகள் கொடுத்துள்ளது 
தெரியவந்துள்ளது.
ஆபத்தான நிலையில் உள்ள சிறுமி கம்பளை வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
அப்போது மருத்துவர்களால் மயக்க மருந்து செலுத்தப்பட்ட சிறுமி சுயநினைவு பெறாமல் உயிரிழந்தார்.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

செவ்வாய், 25 ஏப்ரல், 2023

இலங்கையில் 119 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு அவதியில் நோயாளர்கள்

இலங்கையில் தற்போது 119 வகையான அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சு 
தெரிவித்துள்ளது.
எனினும் நோயாளிகளுக்கு தேவையான 14 வகையான உயிர்காக்கும் மருந்துகள் மருத்துவ வழங்கல் திணைக்களத்தில் இருப்பதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்திருந்தார்
நேற்றைய தினம் (24-04-2023) சுகாதார அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.
அந்த 14 வகை உயிர்காக்கும் மருந்துகளில் இரண்டு வகையான மருந்துகள் இலங்கையில் உற்பத்தி செய்யப்படுகின்றன
இந்திய கடன் திட்டத்தில் 99% சதவீத மருந்துகளை இறக்குமதி செய்ய பயன்படுத்தப்பட்டுள்ளன.இதன்படி, இலங்கையில் முந்நூறுக்கும் மேற்பட்ட மருந்து வகைகள் கடன் திட்டத்தில் இருந்து 
பெறப்பட உள்ளன.
எதிர்வரும் மே மாத இறுதிக்குள் மருந்துப் பற்றாக்கு
றையை மட்டுப்படுத்த முடியும் எனவும் சுகாதார அமைச்சு கூறுகிறது.இதேவேளை இந்தோனேசிய கடன் திட்டம் மூலமும் இலங்கைக்கு மருந்துகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்து 
வருவதாக சுகாதார இராஜாங்க அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க
 மேலும் தெரிவித்தார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>




திங்கள், 24 ஏப்ரல், 2023

முத்துப்பேட்டை அருகே அசதியில் தண்டவாளத்தில் படுத்து உறங்கியவர்கள் விபத்தில் 3 பேர் பலி

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே, இரவில் நடைபெற்ற கோயில் திருவிழாவிற்கு சென்றுவிட்டு, அசதியில் தண்டவாளத்தில் படுத்து உறங்கியவர்கள் மீது ரயில் 
மோதியது.
அதிகாலையில் நேரிட்ட விபத்தில் இரண்டு மாணவர்கள் உள்ளிட்ட 
மூன்று பேர் பலி

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



ஞாயிறு, 23 ஏப்ரல், 2023

வடக்கு ஜேர்மனியில் ரயில் ஒன்றுடன் மோதிய கார்;விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

வடக்கு ஜேர்மனியில் ரயில் ஒன்றுடன் கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து ஹன்னோவர் நகருக்கு வெளியே நியூஸ்டாட் ஆம் ருபென்பெர்க் அருகே இடம்பெற்றுள்ளது.
இதில் காரில் பயணித்த மூவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்களில் 22 வயதுடை ஆண் ஒருவரும் 21 மற்றும் 22 வயதுடைய இரு பெண்களும் உள்ளடங்குவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
சாலையின் முழு அகலத்தையும் மூடாத தடுப்புகள் மூடப்பட்டிருந்தாலும், கார் ஒரு குறுக்கு வழியில் சென்ற நிலையில் விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




சனி, 22 ஏப்ரல், 2023

நெடுந்தீவில் வெளிநாட்டிலிருந்து சென்றவர்கள் கொடூரமாக கொலை

வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் நால்வர் வீடொன்றினுள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதில் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவமானது-22.04.2023 இன்று காலை இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
நெடுந்தீவு பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து ஐந்து பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதுடன், பெண்ணொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு  கொண்டு செல்லப்பட்டுள்ளார். 
சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் வெளிநாட்டிலிருந்து வந்துள்ளதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் 
தெரிவித்தார். 
இதன்போது இரண்டு பெண்களும் இரண்டு ஆண்களும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
நெடுந்தீவைச் சேர்ந்த இருவர், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர் மற்றும் வெளிநாட்டிலிருந்து வந்த ஒருவர் உட்பட ஐவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.
3 பெண்களும் 2 ஆண்களுமே கொலை செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
நெடுந்தீவு மாவளி இறங்குதுறையை அண்டிய 12ஆம் வட்டாரத்தில் கடற்படை முகாமுக்கு அண்மையிலுள்ள வீடொன்றில் இருந்தே வெட்டுக்காயங்களுடன் சடலங்கள் மீட்கப்பட்டன.
நெடுந்தீவைச் சேர்ந்த இருவர், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர் (ஒருவர் பாண்டியன்தாழ்வு), மற்றொருவர் வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர் என ஐவரின் சடலங்களே மீட்கப்பட்டன.
மற்றொருவர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
இன்று முற்பகல் 11 மணிவரை வீட்டிலிருந்து யாரும் வெளியில் வராத நிலையில் உள்ளே சென்று பார்த்த போது நால்வர் சடலமாகக் காணப்பட்டனர். ஒருவர் குற்றுயிராகவும் மீட்கப்பட்டார்.
மற்றொருவர் அறை ஒன்றினுள் சடலமாக மீட்கப்பட்டார்.
விசாரணைகளின் பின்னரே சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை வழங்க முடியும் என்று பொலிஸார் கூறினர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்திலிருந்து மேலதிக பொலிஸார் மற்றும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் நெடுத்தீவுக்குச்
 சென்றுள்ளனர்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




வெள்ளி, 21 ஏப்ரல், 2023

வற்றாப்பளை வீதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள குழந்தை இயேசு கோவில் - வற்றாப்பளை வீதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் 
உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து சம்பவம் .21-04-2023.இன்றைய தினம்.நண்பகல் குழந்தையேசு கோவில் பத்திமாதா சந்தி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்து சம்பவத்தில் கைவேலி புதுக்குடியிருப்பினை சேர்ந்த 49 வயதுடைய 5 பிள்ளைகளின் தந்தையான சந்தியா பரமேஸ்வரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 
கோப்பாபிலவு பகுதியில் இருந்து வந்த கன்டர் வாகனம் வீதியை கடக்க முற்பட்ட உந்துருளியில் பயணித்தவரை மோதித்தள்ளியுள்ளது.
விபத்திற்குள்ளான உந்துருளி தீ பற்றி எரிந்துள்ளது. காயமடைந்த குடும்பஸ்தர் புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்
விபத்திற்குக் காரணமான கன்டர் வாகனத்தின் சாரதி புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
விபத்து தொடர்பிலான விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>