siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 14 அக்டோபர், 2020

கற்பகபுரத்தில் தற்கொலை செய்து கொண்ட இரு பிள்ளைகளின் தாயார்:

வவுனியா, கற்பகபுரம் கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்பட்ட புதிய கற்பகபுரம் பகுதியில் இரு பிள்ளைகளின் தாய் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் 
தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவமானது.14.10-20. இன்று காலை 7.00 மணிக்கும் 8.45 மணிக்கும் இடையியலான நேரத்தில் இடம்பெற்றுள்ளது.
சடலமான மீட்கப்பட்டவர் முத்துக்குமார் கஜனி (வயது 27) என உறவினர்கள் அடையாளப்படுத்தியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
இன்றைய தினம் வீட்டில் இருந்து காலை 6.30 மணி அளவில் 3 வயது மற்றும் 7 வயது பிள்ளைகளுடன் கணவர் அவரது தாயார் 
வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதன் போது குறித்த குடும்ப பெண் வீட்டில் தனிமையில் இருந்துள்ளார். காலை 8.45 மணி அளவில் வீடு திரும்பிய கணவர் வீட்டிக்குள் சென்ற சமயத்தில் மனைவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்படுதை அவதானித்துள்ளார்.
இதனை அடுத்து, இது தொடர்பில் அயவர்களின் கற்பகபுரம் கிராம சேவையாளருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கிராமசேவையாளர் இது தொடர்பில் வவுனியா பொலிஸாருக்கு 
தகவலை வழங்கினார்.
உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்ற திடீர் மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிஷோர் விசாரணைகளை மேற்கொண்டதுடன் தடயவியல் பொலிஸாரின் விசாரணைக்கு உட்படுத்துமாறு உத்தரவு 
பிறப்பித்துள்ளார்.
இதேவேளை, தான் கடன் தொல்லையினால் தற்கொலை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக குறித்த பெண் அவரது தாயாரிடம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்ததாக மரணித்த பெண்ணின் தாயார் தெரிவித்துள்ளதாகவும் அயலவர் தெரிவித்திருந்தமையும் 
குறிப்பிடத்தக்கது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>


திங்கள், 12 அக்டோபர், 2020

நாட்டில் தனிமைப்படுத்தலில் இருந்து விலகிய கான்ஸ்டபிள் பணி நீக்கம்

நாட்டில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய மற்றும் தனிமைப்படுத்தலில் இருந்து விலகிய பொலிஸ் சாரதியான கான்ஸ்டபிள் ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதனை பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
குறித்த கான்ஸ்டபிளுக்கு எதிராக வழக்கு தாக்கல் 
செய்யப்பட்டுள்ளது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>

ஹிஜ்ஜிராபுர பகுதியில் வீடொன்றில் இருந்து ஆணின் சடலம் மீட்பு

ஹட்டன் – ஹிஜ்ஜிராபுர பகுதியில் வீடொன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
வீட்டின் உரிமையாளர் வழங்கிய தகவலுக்கு அமைய இன்றைய தினம் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர்
 தெரிவித்துள்ளனர்.
60 வயது மதிக்கத்தக்க ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன் 3 நாட்களுக்கு முன்னரே அவர் இறந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் 
மேற்கொண்டு வருகின்றனர்
நிலாவரை.கொம் செய்திகள் >>>


பனங்­கா­மம் பறங்­கி­யாற்­றுப்­ப­கு­தி­யில் மணல் அகழ்­வில் ஈடு­பட்­ட ­வர் ­கைது

முல்­லைத்­தீவு மாவட்­டத்­துக்­குட்­பட்ட பனங்­கா­மம் பறங்­கி­யாற்­றுப்­ப­கு­தி­யில் அனு­ம­தி­யின்றி மணல் அகழ்­வில் ஈடு­பட்­டார் என்ற குற்­றச்­சாட்­டில் ஒரு­வர் மல்­லாவி பொலி­ஸா­ரால்(10) நேற்­று­முன்­தி­னம் 
கைது­செய்­யப்­பட்­டுள்­ளார்.
நண்­டாங்­கண்­டல் பகு­தி­யைச் சேர்ந்­த­வரே கைது­செய்­யப்­பட்­டார்.
அவ­ரு­டைய உழவு­ இயந்­தி­ரத்தை பொலி­ஸார் பொலிஸ் நிலை­யத்­தில் தடுத்து­ வைத்­துள்­ள­னர்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>

தாய்லாந்தில் இடம்பெற்ற ரயில் – பஸ் மோதிய விபத்தில் 18 பேர் பலி

தாய்லாந்தில் இடம்பெற்ற ரயில் – பஸ்  மோதிய விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
பெங்கொக்கின் கிழக்கு பகுதியிலே பஸ் ஒன்று ரயிலொன்றுடன் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


ஞாயிறு, 11 அக்டோபர், 2020

சேருநுவர பொலிஸ் பிரிவில் உயர்தர மாணவன் தற்கொலை

திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவு, புன்னியடி பிரதேசத்தில் .10-10.20.அன்று இரவு மாணவன் (19-வயது) ஒருவர் 
தற்கொலை செய்துள்ளார்.
தற்கொலை செய்துகொண்டவர் மூதூர் பொலிஸ் பிரிவு, பாரதிபுரம் பிரதேத்தை வதிவிடமாக கொண்ட அ.தனுஷன் எனவும் நாளை (12) இடம்பெறவிருக்கும் உயர்தர பரீட்சையை எழுத
 இருந்த மாணவராவார்
நிலாவரை.கொம் செய்திகள் >>>>




சனி, 10 அக்டோபர், 2020

கட்டுகஸ்தொட்டயில் தனது கர்ப்பிணி மனைவியை கொல்ல முயன்றவர் கைது

 

¨
தனது மனைவியான 24 வயதுடைய கர்ப்பிணியை கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்ற நபர் பொலிஸில் சரணடைந்த நிலையில் கைது செய்ப்பட்டுள்ளார்.
நேற்று (09) இரவு கண்டி – கட்டுகஸ்தொட்ட பொலிஸ் நிலையம் சென்ற 34 வயதுடைய நபரொருவர் தனது மனைவியை கொலை செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து தனது மனைவியை எவ்வாறு கொலை செய்தார் என குறித்த நபர் பொலிஸாரிடம விளக்கமளித்த சந்தர்ப்பத்தில், சம்பவ இடத்திற்கு பொலிஸ் குழுவொன்று விரைந்து சென்றுள்ளது.
இதனையடுத்து, படுக்கையில் கிடந்த கர்ப்பிணிப் பெண் மயக்கமடைந்து இருப்பதை கண்ட பொலிஸார் அவரை 
காப்பாற்றியுள்ளனர்.
மாமியார் மற்றும் மருமகளுக்கு இடையிலான தகராறைத் தொடர்ந்து அவரது கணவர் அவரைக் கொல்ல முயற்சித்ததாக 
பொலிஸாரின் ஆரம்ப விசாரணையில் தெரிய வந்துள்ளது. நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேக நபர் 13ம் திகதி வரை விளக்கமறியலில் 
வைக்கப்பட்டுள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



அமரர் இராசு பொன்மலர் 31ம் நாள் அந்தியேட்டி கிரியை.14.10.20

தோற்றம்-15-05-1949— மறைவு : 14.09-2020  
யாழ் நவாலியைப் பிறப்பிடமாகவும்.நவற்கிரியை வதிவிடமாகவும் கொண்ட 
அமரர்  இராசு பொன்மலர் 
அவர்கள் 14-09-2020 திங்கடகிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்
அன்னாரின் கிரீமலை  ஆத்மா   சாந்திப்பிரத்தனை 31ம் நாள் அந்தியேட்டி  வீட்டுகிருத்திய்  அழைப்பிதழ்
 . அன்னார், காலஞ்சென்ற நாகர் மீனாச்சி தம்பதிகளின்  பாசமிகு மகளும்
திரு  இராசு அவர்களின் அன்பு மனைவியும்  சுபாசினி சுதாகரன் ரசீகரன்  வசீகரன்  கய னி  சாஜினி(குடும்பநல உத்தியோகத்தர் ) ஆகியோரின் 
அன்புத் தாயாரும்
ஸ்ரீ ரஞ்ன் சரிதா  (ஆசிரியை ) சசிகலா துவாரகா
 (கோப்பாய் ஆசிரிய கலாசாலை  )சற்குணரா  
விஜயகுமார் (யாழ்பல்கலைக்கழகம்)ஆகியோரின் மாமியும் 
திரு தேய்வேந்திரம்   மகேந்திரம் முத்துலட்சுமி மாரிமுத்து ஆகியோரின்  அன்புச்சகோதரியும் 
  ருஷானா மதுசிகா ரிஷ்னா பவிஷ்னா   அபிஷ்னா கபீஷன்   சங்கீத்  சபீஸ்ணா  ஹரிஷ்வின் யதிஸ்னா 
  பவிஷனன் நைனிஹா  ஆகியரின்   பேத்தியும்  ஆவர்    
.12-10-2020. திங்கட் கிழமை அன்று   காலை 08,மணியளவில் கிரீமலை  தித்தக்கரையில்   ஆத்மா   சாந்திப்பிரத்தனை   நிகழ்வுகள்   14,10,2020, அன்று புதன்கிழமை பிற்பகல்,12,மணிஅளவில்    அன்னாரின் இல்லத்தில்  ஆத்மா சாந்திப்பிரத்தனையிலும்  அதனைத்   தொடர்ந்து நடைபெறும் 
மதியபோசன நிகழ்விலும்  கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்
 இங்கனம் -குடும்பத்தினர் 
எமக்கு ஆறுதல் கூறி உறுதுணையாக
 இருந்தவர்களுக்கும், எல்லா வழிகளிலும் உதவிகள் புரிந்தோர்களுக்கும் அன்புத் தெய்வத்தின் மரணச்செய்தி கேட்டு நேரில் ஓடிவந்தவர்களுக்கும் அயல் ஊரில் இருந்து வந்தவர்களுக்கும்,
 தொலைபேசி மூலம் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும்,
 கண்ணீர் அஞ்சலி செலுத்தியோருக்கும் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களுக்கும் நன்றிகள்
31ம் நாள் அந்தியேட்டி கிரியை.14-10-20...புதன்கிழமை அன்று 
>>>>> 
அம்மா -அன்பின் உருவமாய்
அரவணைப்பின் சிகரமாய்
வாழ்ந்தவரே
அன்பின் விருட்சமாகி எமக்கெல்லாம் நிழலாக
நின்று கருணை மழை பொழிந்து கண்ணயராது
எமையெல்லாம் காத்து, வளர்த்து வாழ்வழித்து
கலங்கரை விளக்காய் வாழ்க்கை என்னும் 
ஓடத்திற்கு ஒளி காட்டி வழிகாட்டி
சீரும் சிறப்புமாக வாழ வைத்த எம் அன்னையே! 
குணம் என்னும் குன்றேறி நின்று எம்மை 
மகிழ்ச்சி யென்னும் மாகடலில்
திழைக்க வைத்த எங்கள் மாமியே!
கட்டியணைத்து முத்தமிட்டு பேரன்புடன்
எமையெல்லாம் வளர்த்தெடுத்த எங்கள் பாட்டியே!
கடல் கடந்து எமைக்காண ஓடோடி வந்த எம் பூட்டியே! 
தரணியில் நீங்கள் தந்த அன்பு பாசம் எல்லாம் சரித்திரத்தில்
மாறாத நினைவுகளோடு நாமும் வாழ்வோம்,
உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டும் 
கணவர் பிள்ளைகள், சகோதரர்கள் மருமக்கள் , 
பெறாமக்கள், பேரப்பிள்ளைகள், 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் 
.அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய
 இறைவனை பிரார்த்திக்கின்றோம்
தகவல்-
குடும்பத்தினர்
  வீட்டுமுகவரி 
எல்லாளன் வீதி 
நவற்கிரி மேற்கு 
     புத்தூர் 
நிலாவரை.கொம் செய்திகள் >>>

இணுவிலைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவி கொழும்பில் உயிரிழப்பு

கொழும்பு வெள்ளவத்தையில் வசித்து வந்த யாழ் இணுவில் பகுதியைச் சேர்ந்த களனிப் பல்கலைக்கழகத்தில் 1ம் வருட மாணவி செல்வி யதீசா ஸ்ரீதர் (வயது 20 ) தீடிரென சுகயீனமுற்று உயிரிழந்துள்ளார்
கொழும்பு வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் குறித்த மாணவி சிகிச்சை பயனின்றி நேற்று 08-10-2020 வியாழக்கிழமை
 உயிரிழந்தார்
பெற்றோருக்கு ஒரே மகள் என்பதுடன் இவரின் உயிரிழப்பு பெற்றோர் உறவினர்கள் மாணவர்கள் அனைவரையும் பெரும்
 துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் பிரிவால்
  துயருறும்  பிள்ளைகள் சகோதரர்கள் 
மைத்துனர்கள் மைத்துனிகள் மருமக்கள் பெறாமக்கள்
பேரப்பிள்ளைகள் உற்றார் உறவினர்  நண்பர்கள்அணை வருக்கும் 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றன 
நிலாவரை.கொம் செய்திகள் >>>



வெள்ளி, 9 அக்டோபர், 2020

வவுனியாவில் மரத்துடன் மோதிய உந்துருளி..இருவர் ஸ்தலத்தில் பரிதாபமாகப் பலி

வவுனியா கொறவப்பொத்தானை வீதி ஆறாம்கட்டை பகுதியில்.09-10-20.
 இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளனர்.குறித்த விபத்து தொடர்பாக 
தெரியவருவதாவது;
வவுனியாவில் இருந்து கெப்பிட்டிகொல்லாவை பகுதி நோக்கி மோட்டார் சைக்கிளில் குறித்த நபர்கள் சென்றுகொண்டிருந்த நிலையில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதி 
ஒரத்தில் நின்ற மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியது.இதில் தூக்கிவீசப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே 
பலியாகினர்.கெப்பிற்றிகொல்லாவை பகுதியை சேர்ந்த இருவரே மரணமடைந்துள்ளதுடன், அவர்களது 
சடலம் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்படுள்ளது.சம்பவம் தொடர்பாக மடுகந்தை பொலிசார் மேலதிக விசாரணைகளை 
மேற்கொண்டுள்ளனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>


புதன், 7 அக்டோபர், 2020

மகாறம்பைக்குளத்தில் மகனை தேடியலைந்த மற்றுமொரு தாயும் உயிரிழந்தார்

கடத்தப்பட்ட மகனைத் தேடியலைந்த மற்றுமொரு தாயும் மகன் தொடர்பில் எவ்வித விபரமும் தெரியவராத நிலையில் 
உயிரிழந்துள்ளார்.
மகாறம்பைக்குளம் வவுனியாவைச் சேர்ந்த பெரியசாமி மனோன்மணி வயது 70 என்ற தாயே காணாமற்போன தனது மகனின் முடிவு தெரியாமல் உயிரிழந்தவராவார்.
இவரது மகன் பெரியசாமி செல்வகுமார் வயது 45 கடந்த 2008 ஆம் ஆண்டு ஒட்டுக்குழுவால் கடத்தப்பட்டார்,தனது மகன் கடத்தப்பட்டதை கண்கண்ட சாட்சி தான் என்பதையும் அடிக்கடி
 கூறிவந்தார்.
இந்த நிலையில் வவுனியாவில் தொடர் சுழற்சி முறை உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் 1328 நாட்கள் போராடிவந்தவேளை 
அந்த தாய் உயிரிழந்துள்ளார்

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


செவ்வாய், 6 அக்டோபர், 2020

லண்டனில் தனது மனைவி குழந்தையை கொலை செய்த தந்தை தற்கொலை.

 

லண்டன் பிரன்பேட்டில், வைத்து கணவர் ஒருவர் தன் மனைவி மற்றும் பிள்ளை ஒருவரை வீட்டில் வைத்துக் கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இது தொடர்பாக பொலிசார் தெரிவிக்கையில், மேலும் ஒரு துயரச் சம்பவம் என்று குறிப்பிட்டுள்ளார்கள். கணவர் மன நிலை 
பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.சிவராஜ் என்னும் 40 வயது நபர் தனது மனைவி, காமேஷ்வரியை 
மற்றும் 3 வயது மகனை கொலை செய்து விட்டு, தன்னையும் தாக்கியுள்ளார். இவர்கள் மூவரும் இறந்து விட்டதாக மெற்றோ 
பொலிடன் பொலிசார் தெரிவித்துள்ளார்கள்
.லண்டன் பிரன் பேட்டை சேர்ந்த கிளே-பான்ட் வீதியில் வசித்து வந்தார்கள். இவர்கள் மலேசிய 
தமிழர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.06-10-20..இன்று காலை பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், அவர்கள் அங்கே சென்றவேளை. மூவரும் ரத்த வெள்ளத்தில் இறந்து 
கிடந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரியவருவதாக பொலிசார்
 தெரிவித்துள்ளார்கள்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>






திங்கள், 5 அக்டோபர், 2020

பம்பஹேன பகுதியில் இடம்பெற்ற பாரிய விபத்து ஆபத்தான நிலையில் பலர்

 கினிகத்தேனை – பம்பஹேன பகுதியில் வான் ஒன்று மண்மேட்டில் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் சாரதி உட்பட 13 பேர் காயமடைந்துள்ளனர். இவர்கள் சிகிச்சைகளுக்காக கினிகத்தேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று கினிகத்தேனை பொலிஸார் 
தெரிவித்தனர்.
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேன நகருக்கு அருகாமையில் உள்ள பம்பஹேன பகுதியில் வைத்தே வான் வீதியை விட்டு விலகி மண்மேட்டில் மோதுண்டு இவ்வாறு 
விபத்துக்குள்ளானது.
வானில் 15 பேர் பயணித்துள்ளனர் எனவும், இவர்களில் 13 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 
இவர்களில் ஆறுபேர் படுகாயமடைந்துள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். ஆரம்பகட்ட சிகிச்சைகளின் பின்னர் 9 பேர் மேலதிக 
சிகிச்சைகளுக்காக நாவலப்பிட்டிய வைத்தியசாலைக்கு
 மாற்றப்பட்டுள்ளனர்.
நுவரெலியாவில் மரண வீடொன்றுக்கு வந்து அஞ்சலி செலுத்திவிட்டு கம்பஹா பகுதியை நோக்கி மீண்டும் பயணிக்கையிலேயே காலை 8.45 மணியளவில் விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பில் கினிகத்தேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சாரதிக்கு ஏற்பட்ட தூக்கம் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் 
வெளியிட்டுள்ளனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>


 

யாழ் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் புதிய மாணவர்களுக்கான பதிவுகள் ஒத்திவைப்பு

 கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் 2020 - 2021 கல்வியாண்டிற்கான புதிய மாணவர்களின் பதிவுகள் செவ்வாய்கிழமை 06-10-20.நடைபெற இருந்த போதிலும் கல்வி அமைச்சின் அறிவுறுத்தலுக்கு
 அமைவாக பதிவுகள் மறுஅறிவித்தல் வரை
 ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கலாசாலை அதிபர் வீ.கருணலிங்கம் அறிவித்துள்ளார்.
கம்பஹா மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் 39 வயதுடைய பெண் ஒருவர் அடையாளம் காணப்பட்டார்.
இந்நிலையில் நேற்றைய தினம் ஸ்ரீலங்காவிலுள்ள அரச, தனியார் பாடசாலைகளுக்கு 2ஆம் தவணைக்கான விடுமுறை 
அறிவிக்கப்பட்டிந்தது.
அத்துடன் நிலையில் களனி பல்கலைக்கழகம் மற்றும் யக்கலையில் உள்ள கம்பஹா விக்ரம ஆராச்சி ஆயுர்வேத 
நிறுவனம் ஆகியவை ஒரு வார காலத்திற்கு
 மூடப்படும் எனவும் மாணவர்கள் உடனடியாக விடுதிகளை விட்டு வெளியேறுமாறும் பல்கலைக்கழக மானிய 
ஆணையத்தின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க.04-10-20. நேற்று அவசர கோரிக்கை விடுத்திருந்தமை 
குறிப்பிடத்தக்கது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

 


 

ஞாயிறு, 4 அக்டோபர், 2020

நன்றி நவிலல் திருமதி செல்வரத்தினம் தேவரஞ்சினி 01-10-20

பிறப்பு : 28 -02-1958 - இறப்பு : 01-10-2020 ,
யாழ். சிறுப்பிட்டி மேற்கு நீர்வேலி ராசவீதியைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வரத்தினம் தேவரஞ்சினி (ரஞ்சினி )அவர்களின் நன்றி நவிலல்.எம்மை
 ஆறாத் துயரில் ஆழ்த்தி மீளாத் துயில் கொண்ட செல்வரத்தினம் தேவரஞ்சினி அவர்களின் பிரிவுச் செய்தி கேட்டு, நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசி, மின்னஞ்சல், சமூக 
வலைத்தளங்கள் ஆகியவை மூலமாக எமக்கு 
ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், சகல நிகழ்வுகளிலும் எம்முடன் கைகோர்த்து இன்றுவரை எமக்கு 
சகல உதவிகளையும் செய்த உற்றார், உறவினர், நண்பர்களுக்கு எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை 
தெரிவித்துக்கொள்கின்றோம்.  
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் பிரிவால்
  துயருறும்  பிள்ளைகள் சகோதரர்கள் 
மைத்துனர்கள் மைத்துனிகள் மருமக்கள் பெறாமக்கள்
பேரப்பிள்ளைகள் உற்றார் உறவினர்  நண்பர்கள்அணை வருக்கும் 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றன 
தகவல் ,
தொடர்புகளுக்கு 
குமார் (மகன்-சுவிஸ்.
+41794437491
நிலாவரை.கொம் செய்திகள் >>>



நாட்டில் நாளை தொடக்கம் பாடசாலைகள் மூடப்படுகின்றது


நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்குமான 2ஆம் தவணைக்கான விடுமுறை நாளை 5ஆம் திகதி முதல் வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
எதிர்வரும் 9ஆம் திகதியே பாடசாலைகளுக்கான விடுமுறை காலம், எனினும் கம்பஹா தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றும் பெண் ஒருவரிற்கு கொரோனா தொற்று அடைாளம் காணப்பட்ட நிலையில் இன்றைய தினம் இந்த அறிவிப்பினை கல்வி அமைச்சு 
விடுத்துள்ளது.
அத்துடன் மினுவாங்கொடை மற்றும் திவுலப்பிட்டிய பகுதியில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமையினால் ஒவ்வொரு இலங்கையர்களும் கொவிட்-19 தொற்று நோயின் தீவிரத்தை புரிந்து கொள்ள வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

முகத்துவாரம் கடற்பகுதியில்டலங்களாக மீட்கப்பட்ட இளைஞர்கள்

 

நீர்கொழும்பு, செத்தபாடு –கம்மல்தொட்ட முகத்துவாரம் கடற்பகுதியில் நீராட சென்று காணாமல் போன 3 இளைஞர்களும் சற்றுமுன் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த கடற்பகுதிக்கு நேற்றைய தினம் 7 இளைஞர்கள் நீராட சென்ற நிலையில் அவர்களில் மூன்று பேர் காணாமல் போயிருந்தனர்.
அவர்களில் இரண்டு பேர் தலவாக்கலையை சேர்ந்தவர்கள் எனவும் ஒருவர் பதுளை நமுனுகுலயை சேர்ந்தவர் எனவும்
 தெரியவந்துள்ளது.
நீர்கொழும்பு பகுதியிலுள்ள நண்பர் ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்றிருந்த நிலையிலேயே இந்த அனர்ந்தம் 
நேர்ந்துள்ளது.
காணாமல் போன 3 இளைஞர்களும் தற்போது சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர்
 தெரிவித்துள்ளனர்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




பாரிஸில் உள்ள வீடு ஒன்றில் ஒரு குடும்பத்தை சேர்ந்த ஐவர் வெட்டி கொலை

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள வீடு ஒன்றில் கத்திக் குத்து மற்றும் சுத்தியலால் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு சிறுவர்கள் உட்பட ஐவர் கொடூரமாக ‍கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் கொலையாளி 
உட்பட மேலும் நால்வர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் மூவர் பலத்தகாயமடைந்து உள்ளதாகவும் சர்வதேச செய்திகள் 
தெரிவித்துள்ளன.
இச்சம்பவமானது அந்நாட்டு நேரப்படி  03-10-20.அன்று.காலை 11 மணியளவில் இடம்பெற்றது.
கொலையாளியும் உயிரிழந்தவர்களும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இலங்கை வம்சாவளியினர் எனக் கூறுப்படுகிறது.
பலத்தகாயம் மற்றும் மயக்க நிலையில் காணப்பட்ட ஒருவர் கொலை சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டு கிளிச்சியில் உள்ள பியூஜோன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் பிரான்ஸ் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சம்வம் நடைபெற்றவுடன் குறித்த வீட்டிலிருந்து தப்பி வந்த சிறுவன் ஒருவன் படுகாயமடைந்த நிலையில், அப் பகுதியில் உள்ள மதுபான சாலைக்கு சென்று, தனது மாமாவுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது என்றும், அவர் தனது குடும்பத்தின் மற்றவர்களை கத்தி மற்றும் சுத்தியலால் தாக்கியதாகவும் மதுபானசாலை மேலாளரிடம் கூறி உதவியை 
நாடியுள்ளான்.
அதன் பின்னர் பொலிஸாருக்கு தகவல் அறிவிக்கப்பட்டதும் இதன்போது காவல்துறையினர், சம்பவ இடத்துக்கு வந்திருந்தபோது வீட்டின் கதவு உள்பக்கமாக தாழிட்டு தடுப்பு வைக்கப்பட்டிருந்துள்ளது.
தடுப்பினை உடைத்துக்கொண்டு உள் நுழைந்த 
காவல்துறையினர் மேலதிக வன்முறைகள் எதுவும் நிகழாமல் தடுத்துள்ளனர்.
இதேவேளை காயமடைந்தவர்களில் மூவர் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் எனவும், அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் சந்தேக நபர் பெக்கான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அந்த பகுதி தேசிய மற்றும் நகராட்சி பொலிஸால் 
சுற்றி வளைக்கப்பட்டது.
>>>>>>>>>>>
இரண்டம் இணைப்பு 
 பிரான்சில் குடும்ப வன்முறை. 5 இலங்கையர்கள் பலி. 
மேலும் ஐவர் காயம்
>>>>>>>>>>>>>
சம்பவ இடத்துக்கு சில நிமிட இடைவெளியில் வந்து சேர்ந்த காவல்துறையினர், சம்பவ இடத்தை நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.
வீடு முழுவதும் இரத்தம் தெறித்து இருக்க ஐந்து பேரின் சடலங்களை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.
மேலும் ஐவர் படுகாயமடைந்த நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்துள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
'சாவடைந்தவர்களில் சிறுவர்களும் உள்ளனர்' என காவல்துறையினர் தெரிவித்தனர்.
"சம்பவ இடம் மிகவும் பயங்கரமாக இருந்தது. எங்களில் பலர் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். கத்தி ஒன்றும் பெரிய சுத்தியல் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது!" என காவல்துறை அதிகாரி ஒருவர் எம்மிடம் தெரிவித்தார்.
தாக்குதல் நடத்திய நபர் சம்பவ இடத்தில் 'கோமா' நிலையில் இருந்ததாகவும், இவர்கள் அனைவரும் இலங்கையர்கள் எனவும் பிரெஞ்சு காவல்துறையினர் தெரிவித்தனர்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



சனி, 3 அக்டோபர், 2020

புங்குடுதீவில் வீட்டிற்குள் புகுந்து கோயில் பூசகர் வெட்டிக் கொலை

 புங்குடுதீவு கோயில் அர்ச்சகர் இனம் தெரியாவர்களால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்..02-10-20.நேற்று நள்ளிரவு 
வீடு புகுந்த மர்ம நபர்கள், உதவியாளரை கட்டி வைத்து விட்டு, அர்ச்சகரை வெட்டிக் கொன்றுள்ளனர்.புங்குடுதீவு 
ஊரதீவுச்சிவன் கோயில் அர்ச்சகரான 
கிளிநொச்சியை சேர்ந்த ரூபன் சர்மா (33) என்பவரே வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.புங்குடுதீவில் மாடு வெட்டப்படுவதற்கு எதிராக பூசகர் தொடர்ந்து
 செயற்பட்டு வந்தார். அவர்கள் தொடர்பான தகவலை வழங்கி வந்தார்.இந்தக் கொலையுடன் மாடு வெட்டுபவர்கள் தொடர்புபட்டுள்ளார்களா என்ற கோணத்திலும் 
விசாரணை நடந்து வருகிறது.
(இணைப்பு:01)
<<<<<<<>>>>>
 -யாழ்.புங்குடுதீவு – ஊரதீவு சிவன்கோவில் கேணி அருகில் பூசகர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், குறித்த பூசகர் அடித்து கொலை செய்யப்பட்டு பின்னர் சடலம் அங்கு 
வீசப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக
 பொலிஸார் கூறியுள்ளனர்.ஊரதீவு சிவன் ஆலய குளக்கரையிலேயே அவரது 
சடலம்.03-09-20. இன்று சனிக்கிழமை
 அதிகாலை கண்டறியப்பட்டது என்று 
பொலிஸார் குறிப்பிட்டனர். குறித்த கொலைச்சம்பவம் நள்ளிரவு இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கும்
 ஊர்காவற்றுறை பொலிஸார் பூசகரின் உதவியாளரை பொலிஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி
வருகின்றனர்.
இதேவேளை குறித்த பூசகரி புங்குடுதீவு உள்ளிட்ட தீவக பகுதிகளில் இறைச்சிக்காக கால்நடைகளை வெட்டுவதற்கு கடுமையான எதிர்ப்பு தொிவித்துவந்ததுடன், பொலிஸாருக்கு தவல்களையும் 
வழங்கிவந்துள்ளார்.(இணைப்பு:02)

நிலாவரை.கொம் செய்திகள் >>>

 


 

மட்டுவில் சந்திரபுரம் பகுதியில் தந்தையை அடித்து கொன்ற மகன்

 யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட மட்டுவில் சந்திரபுரம் பகுதியில் மகன் ஒருவர் தாக்குதல் மேற்கொண்டதால் படுகாயம் அடைந்த தந்தை உயிரிழந்துள்ளார்.
03-10-20-இன்று அதிகாலை குறித்த தாக்குதல்
 சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் படுகாயம் அடைந்த தந்தை சாவகச்சேரி வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இருந்தபோதிலும் சிகிச்சை பலன்றி அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நிலாவரை.கொம் செய்திகள் >>>


 

 

 

நபரொருவர் கோணேஸ்வரர் ஆலயத்திலிருந்து விழுந்து பலி

 திருகோணமலை கோணேஸ்வரர் ஆலயத்திலிருந்து விழுந்து நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சம்பவம் 03-10-20.அன்று காலை இடம்பெற்றுள்ளதாக 
தெரியவருகிறது.
உவர்மலை பகுதியைச் சேர்ந்த ஏ.செந்தூரன் (38) என்பவரே உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் சென்ற நிலையில் கோணேஸ்வரர் ஆலயத்தில் இருந்து கற்பாறையில் விழுந்து நிலையில் உயிரிழந்துள்ளார் என தெரியவருகிறது.
இந்த நிலையில் அவரது சடலம் தற்பொழுது கற்பாறை அருகில் வைக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவிப்பதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு 
வருகின்றனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>

 


யாழ் இளைஞன் ரயில் முன் பாய்ந்து இத்தாலியில் தற்கொலை

 இத்தாலியில் வசித்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
யாழ்ப்பாணம் கைதடி, குமாரநகரைச் சேர்ந்த
 நடேசு ஜீவானந்தன் (வயது-36) என்ற இளைஞனே 30-09-20.அன்று இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவராவார்
 இச் சம்பவம் தொடர்பில் அந் நாட்டுப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

 



 

வெள்ளி, 2 அக்டோபர், 2020

கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியதிற்கு அஞ்சலி

பாடகர் “பாடுநிலா” பாலசுப்பிரமணியத்தின் நினைவஞ்சலி கூட்டம் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில்
பாரளுமன்ற உறுபினர் ஸ்ரீதரன் மற்றும் இந்திய துணை தூதுவர் பலா. பாலச்சந்தர் ஆகியோரும் கலந்து 
அ‌ஞ்ச‌லித்தனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>


                           


வியாழன், 1 அக்டோபர், 2020

மரண அறிவித்தல்திருமதி செல்வரத்தினம் தேவரஞ்சினி 01-10-20

பிறப்பு : 28 -02-1958 - இறப்பு : 01-10-2020 ,
யாழ். சிறுப்பிட்டி மேற்கை நீர்வேலி ராசவீதியைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வரத்தினம் தேவரஞ்சினி (ரஞ்சி)அவர்கள்  01-10-2020 அன்று காலமானர்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் பிரிவால்
  துயருறும்  பிள்ளைகள் சகோதரர்கள் 
மைத்துனர்கள் மைத்துனிகள் மருமக்கள் பெறாமக்கள்
பேரப்பிள்ளைகள் உற்றார் உறவினர்  நண்பர்கள்அணை வருக்கும் 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றன 
தகவல் ,
குமார்(மகன்)சுவிஸ். 
+41794437491

நிலாவரை.கொம் செய்திகள் >>>