siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 21 அக்டோபர், 2022

நாட்டில் சப்ரகமுவ பல்கலைக்கழக விடுதியில் சடலமாக மீட்கப்பட்ட மாணவன்

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தில் இறுதியாண்டில் கல்வி கற்கும் பல்பொல பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய மாணவன் இன்று அதிகாலை பல்கலைக்கழக விடுதியில் 
உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணைகள் இதுவரை இடம்பெற்றுள்ள நிலையில், மரணத்திற்கான காரணம் இதுவரை கணடறியப்படவில்லை.
உயிரிழந்த மாணவரும் பல்கலைக்கழகத்தின் கபடி 
அணியில் அங்கம் வகித்தவர் என பல்கலைக்கழக மாணவர் நலன்புரி பணிப்பாளர் பேராசிரியர் மனோஜ் ஆரியரத்ன தெரிவித்தார்.
சடலம் தற்போது பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வியாழன், 20 அக்டோபர், 2022

பலாலி சர்வதேச விமான நிலையம் தொடர்பில் மகிழ்ச்சி தகவல்

யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்தின் விமான சேவைகள் இம்மாத இறுதியில் ஆரம்பிக்கப்படுமென துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா
 தெரிவித்தார்.
பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் விரைவாக ஆரம்பிக்கப்படுமென தெரிவித்த அமைச்சர், இந்திய அரசின் நிதியுதவியுடன் அது முன்னெடுக்கப்படும் என்றும் 
குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற, வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது, எதிர்க்கட்சி எம் .பி புத்திக பத்திரண எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் 
இவ்வாறு தெரிவித்தார்.
பலாலி விமான நிலையத்தை சர்வதேச தரத்துக்கு உயர்த்தியுள்ளோம். அதற்கு தேவையான சான்றுகளை விமான சேவைகள் அதிகார சபையினூடாக பெற்றுக்கொண்டதாகவும் அமைச்சர் கூறினார்.
பின்னர் இந்தியாவின் விமான சேவைகள் நிறுவனத்துக்கு அழைப்பு விடுத்தாகவும் ஏற்கனவே அந்த விமான சேவை நிறுவனத்தினர் அதற்கு இணங்கியிருந்தனர்.

எனினும் பலாலி விமான நிலையம் திறக்கப்பட்ட பின்னர் அங்கு விமானம் வருகை தரவில்லை. அது அவர்கள் பக்க தொழில்நுட்ப ரீதியிலான பிரச்சினைகளாக இருக்கலாம். அது தொடர்பான நடவடிக்கைகள் பின்தங்கியுள்ளன.
எவ்வாறாயினும் இந்த மாத இறுதியில் விமானங்கள் சில வரும் என்று தெரிவிக்கப்படுகிறது. முடிந்தளவு அந்த விமான சேவை மூலம் இந்திய சுற்றுலாப் பயணிகளை அழைத்து வருவதற்கு எதிர்பார்க்கின்றோம். அதேவேளை, இந்திய அரசாங்கத்தினால் இந்த 
விமான நிலையத்தின் அபிவிருத்தி பணிகளுக்காக நிதி வழங்கப்பட்டுள்ளது.
அதனை பயன்படுத்தி ஓடுபாதையை நீடிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அங்கு பெரிய விமானங்கள் வரக் கூடிய வகையில் ஓடுபாதையை 
அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



புதன், 19 அக்டோபர், 2022

பாடசாலை மாணவர்களை யாழ் தியேட்டருக்கு அழைத்து சென்ற பதிவு.

யாழ்ப்பாணத்தில் கடந்த. 14-10-2022.வெள்ளிக்கிழமை ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தை பார்க்க முல்லைத்தீவு வலய பாடசாலை மாணவர்களை தனியார் கல்வி நிறுவனம் ஒன்று அழைத்துச் சென்ற 
சம்பவம் தொடர்பில்
வடமாகாண கல்வி அமைச்சு கவனத்தில் எடுத்துள்ளது.சனி, ஞாயிறு போன்ற வார இறுதி நாட்களில் தனியார் கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் திரையரங்கிற்கு அழைத்துச்
செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இதற்காக மாணவி ஒருவரிடம் இருந்து 1500 ரூபாய் வசூலித்துள்ளதாகவும் 
தெரியவந்துள்ளது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



செவ்வாய், 18 அக்டோபர், 2022

கரவெட்டியை சேர்ந்த இளைஞன் மர்மமான முறையில் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் கரவெட்டியை சேர்ந்த இளைஞர் ஒருவர் இன்று மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
நீர்வேலி பகுதியில் மேசன் வேலையில் ஈடுபட்டு வந்த விஜயபாகு நிதர்ஷன் எனும் 27 வயதுடைய இளைஞர் நேற்றிரவு உறங்கி விட்டு அதிகாலையில் எழும்போது உயிரிழந்துள்ளார்.
வீடு ஒன்றின் கட்டுமான பணிக்காக நீர்வேலி பகுதியில் தங்கியிருந்து வேலை செய்து கொண்டிருந்தபோதே குறித்த சம்பவம் 
இடம்பெற்றுள்ளது.
குறித்த இளைஞரின் உயிரிழப்பு தொடர்பில் விசாரணை செய்யப்பட்ட வேலை குடும்பத் தகராறு காரணமாக சில தினங்களுக்கு முன்னர் கைகலப்பு ஏற்பட்டு உடலில் காயங்கள் ஏற்பட்டமையால் வைத்தியசாலையில் 
சிகிச்சை பெற்று வந்துள்ளார் என கோப்பாய் பொலிசார் 
தெரிவித்தனர்.
இறப்புச் சம்பவம் தொடர்பான உடற்கூற்று பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக சடலம் யாழ்ப்பாணம் போதனாவைத்திய சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



திங்கள், 17 அக்டோபர், 2022

நாட்டில் மீண்டும் அதிகரித்த டொலரின் பெறுமதி இன்றைய நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய (ஒக்டோபர் 17) நாளுக்கான நாணய மாற்று விகித அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இதன்படி, இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி 360 ரூபா 35 சதமாகவும், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 370 ரூபா 86 சதமாகவும் பதிவாகியுள்ளது.
இதேவேளை, மற்ற வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் பெறுமதியில் சற்று ஏற்ற, இறக்கம் காணப்படுகின்றது
.ஸ்டெர்லிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை பெறுமதி 418ரூபா 52 சதமாகவும் அதேசமயம் ஸ்டெர்லிங் பவுண்ட் ஒன்றின் கொள்வனவு பெறுமதி 402 ரூபா 72 சதமாக பதிவாகியுள்ளது.
அத்துடன், யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 363 ரூபா 49 சதமாக பதிவாகியுள்ளதுடன் யூரோ ஒன்றின் கொள்வனவு பெறுமதி 348 ரூபா 65சதமாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




ஞாயிறு, 16 அக்டோபர், 2022

இடம்பெற்ற விபத்தில் கொலம்பியாவில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 20 பேர் உயிரிழப்பு

கொலம்பியாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள துறைமுக நகரமாக டுமாகோவிற்கும் காலிக்கும் இடையே பஸ் ஒன்று சென்றுகொண்டு இருந்தது. 

அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 
மேலும், படுகாயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு சிகிச்சைக்காக 
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



இடம்பெற்ற கோர விபத்தில் கனடாவில் பிறந்தநாள் அன்றே உயிரிழந்த இளைஞர்

கனடா மார்க்கமில் கடந்த வாரம் இடம்பெற்ற வித்தில் தமிழர்கள் இருவர் உயிரிழந்துள்ள நிலையில், விபத்து தொடர்பில் உறவினர்கள் பதில்களை எதிர்பார்க்கிறார்கள்.
இந்த விபத்தில் 21 வயதான படீரன் புவனேந்திரன் மற்றம் 23 வயதான நிலுக்சனா புவனேந்திரன் ஆகியோர் உயிரிழந்துள்ள நிலையில் அவர்களின் மாமாவான சுவென் பூபாலசிங்கம் இவ்வாறு
 கூறியுள்ளார்.
இது எதையும் மாற்றப்போவதில்லை. ஆனால், வேறு எந்த குழந்தைகளுக்கும் இவ்வாறு நடக்காமல் இருக்க, எங்களுக்கு ஏதாவது ஒரு 
நீதி வேண்டும்.
தனது பிறந்தநாளில் உயிரிழந்த வில்பிரிட் லாரியர் பல்கலைக்கழக மாணவர் படீரன் புவனேந்திரன் மற்றும் ஜார்ஜ் பிரவுன் கல்லூரி மாணவி நிலுக்சனா புவனேந்திரன்ஆகியோரின் இறுதிச் சடங்குகளை பூபாலசிங்கம் ஏற்பாடு 
செய்து வருகிறார்.
டாஷ்போர்டு கேமரா காணொளி சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டது. ஸ்டீல்ஸ் அவென்யூ கிழக்கின் வடக்கே மார்க்கம் ரோடு மற்றும் எல்சன் வீதியில் டிரக் வண்டி கார் மீது மோதியது. 
பிற்பகல் 2:05 மணியளவில் அவசரகால குழுக்கள் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டனர். 46 வயதான டிரக்கின் சாரதி காயமின்றி சம்பவ இடத்திலேயே இருந்ததாக யோர்க் பிராந்திய காவல்துறை கூறுகிறது.
14-10-2022.சனிக்கிழமை வரை எந்த குற்றச்சாட்டும் பதிவு 
செய்யப்படவில்லை.
விபத்தை நேரில் பார்த்த யாரேனும், அவர்கள் ஏற்கனவே காவல்துறையிடம் பேசவில்லை என்றால், அவர்கள் முன் வருமாறு புலனாய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



சனி, 15 அக்டோபர், 2022

நாட்டில் மோசமான வானிலையால் 21,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

நாட்டில் சீரற்ற காலநிலை காரணமாக 11 மாவட்டங்களின் 34 பிரதேச செயலகப் பிரிவுகளில் 21,888 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதுவரை 03 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.
வரகாபொல, தும்பலிஎத்த பகுதியில் அமைந்துள்ள இரண்டு மாடி வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் காணாமல் போன இருவரின் சடலங்களும் அவர்களுள் அடங்கும். அந்த வீட்டில் இருந்த 47 வயதுடைய பெண்ணின் சடலம் இன்று காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதன் பின்னரே 24 வயதுடைய இளைஞனின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
வீட்டின் மீது மண் மேடு சரிந்து விழுந்ததில் 3 பேர் வீட்டில் தங்கியுள்ளனர்.
அவர்களில் ஒருவர் மீட்கப்பட்டு வரக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க
 தெரிவித்துள்ளார்.
மோசமான வானிலை காரணமாக 264 பேர் தற்போது 4 பாதுகாப்பான மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் 
குறிப்பிட்டுள்ளார்.
களனி, பட்டியாவெல நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அருகிலுள்ள பாலத்தின் மீது கனரக வாகனங்களை செலுத்த வேண்டாம் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வெள்ளி, 14 அக்டோபர், 2022

இலங்கையில் கோதுமை மாவின் விலை சடுதியாக குறைப்பு

சந்தையில் கோதுமை மாவின் விலை தற்போது குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன இந்த விடயத்தினை 
தெரிவித்துள்ளார்.
இதன்படி, தற்போது ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விலை 290 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது என அவர் 
குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் ஒரு கிலோகிராம் கோதுமை மா 300 ரூபா முதல் 400 ரூபா வரையில் விற்பனையானது எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இதேவேளை, 25 கிலோகிராம் நிறையுடைய கோதுமை
 மா மூடை ஒன்றின் விலை 7,250 ரூபாவாகும் என அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
கோதுமை மா இறக்குமதி செய்யப்பட்டுள்ளதன் காரணமாக, இவ்வாறு விலை குறைவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

வியாழன், 13 அக்டோபர், 2022

ஒரேநாளில் யாழில் திடீரென லட்ஷதிபதியான நபர்.குவியும் வாழ்த்துக்கள்.

யாழ்ப்பாண மாவட்ட தேசிய அபிவிருத்தி லொத்தர் சபையின் கிளை முகவரில் ஒருவரான கனகலிங்கம் திலகவதி என்பர் மூலம், தேசிய 
லொத்தர் சீட்டினை பெற்றுக்கொண்ட கொக்குவிலை 
சேர்ந்த வி.சிவராஜ் என்பவருக்கு 35 இலட்சம் ரூபா கிடைத்துள்ளது.குறித்த நபருக்கான காசோலையினை வழங்கிவைக்கும் நிகழ்வு 13-10-2022.அன்று  இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வு 13-10-2022.அன்று  யாழ். கே.கே.எஸ் வீதியில் அமைந்துள்ள லொத்தர் சபை முகவரின் கூடத்தில் கனகலிங்கம் திலகவதி தலைமையில் இடம்பெற்றது.
காசோலையினை வழங்கிவைப்பதற்காக தேசிய லொத்தர் சபையின் தலைவர் அஜித் குணரத்ன நாரகல கலந்துகொண்டு வெற்றிபெற்ற பயனாளிக்கு வி.சிவராஜ்க்கு காசோலையினை கையளித்தார்.
இந் நிகழ்வில் வடகிழக்கு பிராந்திய முகாமையாளர் ஐ.டி.பி.குமாரசிறி யாழ். மாவட்ட விற்பனை மேம்படுத்தல் அதிகாரி எம்.தவகோகுலன்,மற்றும் லொத்தர் சபையின் யாழ் மாவட்ட கிளை முகவர்கள், வாடிக்கையாளர்கள் பயனாளிகள் பலரும் கலந்துகொண்டனர்.
அத்துடன் தேசிய அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவர் அஜித் குணரத்ன நாரகல யாழ். மாவட்டத்திற்கு விஜயம் செய்ததுடன் காரைநகர், மாதகல், யாழ் மத்திய நகர், கோப்பாய், மருதங்கேணி ஆகிய பகுதிகளுக்கு
 சென்று கடந்த மாதங்களில் தமது லொத்தர் சபை முகவர்களின் மூலமாக எற்படுகின்ற குறைபாடுகள் அவர்களுக்கு தேவையான இடவசதிகள் தொடர்பாகவும் கலந்துறையாடப்பட்டது என்பது 
குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





புதன், 12 அக்டோபர், 2022

மின்னல் தாக்கி ஓமந்தையில் 11 உயிர்கள் சம்பவஇடத்தில் உயிரிழப்பு

வவுனியா, ஓமந்தை பகுதியில் மின்னல் தாக்கத்தின் காரணமாக 11 மாடுகள் பலியாகியுள்ளன.இன்று மாலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,வவுனியா, ஓமந்தை, அரச முறிப்பு பகுதியில் மாலை நேரம் மாடுகள் மேய்ச்சலில் ஈடுபடுக்கொண்டிருந்த போது மழை பெய்த்துள்ளது

இதன்போது, மாடுகள் மேய்சலில் ஈடுபட்ட பகுதியில் உள்ள மரத்தின் மீது இடி மின்னல் தாக்கம் ஏற்பட்டு மாடுகளை தாக்கியமையால் 11 மாடுகள் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளன.
இதேவேளை, வவுனியாவில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் கடந்த 7 ஆம் திகதி இடி, மின்னல் தாக்கத்தினால் மாமடு பகுதியில் குடும்ப பெண் ஒருவர் மரணமடைந்துள்ளமை
 குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




செவ்வாய், 11 அக்டோபர், 2022

காசர்கோடு மாவட்டத்தில் கோவில் உணவை மட்டுமே உண்டு வாழ்ந்து வந்த சைவ முதலை. உயிரிழப்பு

கேரளத்தின் காசர்கோடு மாவட்டம் அனந்தபுரம் ஸ்ரீ அனந்தபத்மநாபசுவாமி திருக்கோவில் குளத்தில் வசித்த முதலையாழ்வார்”பபியா”.பூஜை நேரங்களில் குளத்திலிருந்து கோவிலுக்கு வந்து ஸ்வாமியை தரிசித்து 
விட்டு ப்ரஸாதம் பெற்றுவிட்டு
பக்தர்களுக்கு எந்த வித இடையூறும் ஏற்படுத்தாது அமைதியாக குளத்திற்கு திரும்பிவிடுவார்! என்னதான் குளத்தில் வசித்தாலும் குளத்திலுள்ள மீன்களை உட்கொள்ளாது கோவில் ப்ரஸாதத்தை மட்டுமே உண்டு 
வாழ்ந்து வந்ததால் இவருக்கு “சைவ முதலை” என்ற 
மற்றொரு பெயருண்டு.
நேற்று இந்த முதலையாழ்வார் உடல்நலக் குறைவால்
 வைகுந்த ப்ராப்தம் அடைந்தார் . திருக்கோவில் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டு பூஜைகள் நடந்த பிறகு , அடக்கம் செய்யப்பட்டது.சனாதன தர்மத்தில் பக்தியுள்ள
விலங்குகளுக்கு கூட தனி மரியாதை உண்டு.தமிழகத்தில் பக்தியில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் சில மனித மிருகங்களுக்கு இந்த செய்தியை தெரிவிக்க ஆசைப்படுகிறேன்.திருநாவுக்கரசு ,தலைவர் ,
தேசிய சிந்தனை பேரவை.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




திங்கள், 10 அக்டோபர், 2022

பலாலிக்கும் சென்னைக்கும் இடையிலான விமான சேவை குறைந்த கட்டணத்தில்

யாழ்  பலாலி சர்வதேச விமான நிலையத்திலிருந்து தமிழகத்திற்கான விமான சேவையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.இந்த சேவை அடுத்தவாரம் ஆரம்பிக்கப்படும் என ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி 
வெளியிட்டுள்ளது.
பலாலிக்கும் சென்னைக்கும் இடையிலான விமானக் கட்டணம் கொழும்பு மற்றும் சென்னைக்கு இடையிலான விமானக் கட்டணங்களை விட கணிசமாகக் குறைவாக இருக்கும் என விமான சேவை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விமான சேவைகளை மீள ஆரம்பிப்பது மற்றும் குறைவான விமானக் கட்டணங்கள் வடமாகாண மக்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்று வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா 
தெரிவித்தார்.
இதேவேளை, விமான சேவைகளை மீள ஆரம்பிப்பதற்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பாதுகாப்பு படைத் தளபதி சந்தன விஜயசுந்தர தெரிவித்துள்ளமை 
குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



ஞாயிறு, 9 அக்டோபர், 2022

நாம் மிளகாய் தூள் தொட்டு மாங்காய் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளாம்

உப்பு, மிளகாய் தூள் தொட்டு மாங்காய் சாப்பிட்டால் உடலுக்கு என்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து
 காண்போம்.
கோடையில் அதிகப்படியான வெப்பத்தால் உடலின் நீர்ச்சத்தை இழந்து, அதனால் உடல் வெப்பமடைந்து காய்ச்சல் அல்லது சில நேரங்களில் சுய நினைவை இழக்க நேரிடும். ஆனால் மாங்காயை உட்கொண்டு வருவதன் மூலம், அதில் உள்ள சக்தி வாய்ந்த குளிர்மிக்க உட்பொருள், உடலில் நீர்ச்சத்தை சீராக பராமரித்து, இப்பிரச்சனையைத் தடுக்கும்.
மாங்காயில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இது உடலில் எலக்ட்ரோலைட் அளவை பராமரிக்க உதவி, அதனால் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைத்து, இதய நோயின் அபாயத்தில் இருந்து 
பாதுகாக்கும்.
நீங்கள் அசிடிட்டி மற்றும் நெஞ்செரிச்சலால் அவஸ்தைப்பட்டு வந்தால், பச்சை மாங்காயை சாப்பிடுங்கள்.
பச்சை மாங்காய் கல்லீரல் சம்பந்தமான பிரச்சனைகளைத் தடுக்கும். ஏனெனில் மாங்காய் பித்தநீரின் சுரப்பை அதிகரிக்கும் மற்றும் குடலை பாக்டீரியா தொற்றுக்களில் இருந்து பாதுகாக்கும்.
பச்சை மாங்காயில் ஆவியாகக் கூடிய உட்பொருட்கள் மற்றும் நார்ச்சத்து உள்ளது. இது செரிமான திரவத்தின் உற்பத்தியைத் தூண்டி, செரிமான பிரச்சனைகளில் இருந்து தடுத்து, செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
பருவ நிலை மாற்றம் அல்லது ஏதேனும் வைரஸ் தொற்றுக்களால் நீங்கள் அடிக்கடி நோய்வாய்ப்படுபவராயின், பச்சை மாங்காயை சாப்பிடுங்கள். ஏனெனில் பச்சை மாங்காயில் வைட்டமின் சி மற்றும் 
ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது.என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>






சனி, 8 அக்டோபர், 2022

நினைவஞ்சலி 1ம் ஆண்டு அமரர் கதிரவேலு இராசலக்சுமி 08.10.22

தோற்றம்-04-07-1932.-  மறைவு-20 09 2021       
  முதலாம் ஆண்டு திதி 08-10-2022              
    யாழ் நவற்கிரி புத்தூரை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட  திருமதி கதிரவேலு இராசலக்சுமி
அவர்களின் முதலாம் ஆண்டு திதி 08-10-2022 .சனிக்கிழமை அன்று .அன்னார் காலஞ்சென்ற கதிரவேலுவின் பாசமிகு மனைவியாரும் காலஞ்சென்ற வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்
 காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும் 
மற்றும் யோகேஸ்வரன்  அரற்புதமலர் கருணாநந்தன்  ஜெந்தி குகனேசன் சுதமதி ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவர்இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
அன்னாரின் நீங்காத நினைவுகள்
காலங்கள் கடந் தாலும் விழிகளில் என்றும் உங்கள் உருவம் தான்கேட்டவை எல்லாம் கிடைக்கும் வரம் ஒன்று இருந்தது
போல் உணர்கின்றோம் இப்போது
வானம் கைகளால் பிடிக்க முடியாத தூரத்தில் இருந்தாலும்
நிலவை அன்னத்தில் கதையாக்கி ஊட்டிடுவாய் நெஞ்சில்
நம்பிக்கை எனும் விதையை விதைத்த முதல் 
கடவுள் நீங்கள்!
மின்னல் வெளிச்சத்தில் பரவும் ஒளிப்பாம்பைப் போல்
கண்களின் கண்ணீரில் பரவும் ஆனந்த 
கீதம் உங்கள் அன்பு
ஒரு உயிராய் இந்த உலகில் உள்ள அத்தனை உறவுகளின்
அன்பையும் எமக்கு 
தந்தவர் நீங்கள்!
மறைந்து போனாலும் என்றும் மறந்து போகாத அன்பை
காட்டிச்சென்றவர் நீங்கள்
உங்கள் அன்பை தோற்கடிக்கும் அளவுக்கு அன்பை
இவ்வுலகில் எவரும் தந்துவிட
 முடியாது!
என்றும் உங்கள் நினைவுகளுடன் நாம்
உங்கள் ஆன்மா சாந்திக்காக பிராத்திக்கின்றோம்
தகவல்: குடும்பத்தினர்
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
    நினைவஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! ஓம் சாந்தி  ஓம் சாந்தி
வீட்டு முகவரி: 
நவற்கிரி புத்தூர் 
யாழ்ப்பாணம்.
தகவல்
குடும்பத்தினர்


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


வெள்ளி, 7 அக்டோபர், 2022

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் பலவற்றின் விலை குறைப்பு!



நாட்டில் லங்கா சதொச நிறுவனம் 6 அத்தியாவசியப் பொருட்களின் விலையை குறைத்துள்ளது. 
இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இவ்வாறு அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
குறைக்கப்பட்ட உணவு வகைகள் மற்றும் புதிய விலைகள் 
ஒரு கிலோகிராம் உள்ளூர் உருளைக்கிழங்கின் விலை 35 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, 430 ரூபாயாக இருந்த ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கின் புதிய விலை 
395 ரூபாவாகும்.
ஒரு கிலோ கொண்டைக்கடலையின் விலை, 35 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, 685 ரூபாயாக இருந்த ஒரு கிலோ கொண்டைக்கடலையின் புதிய விலை 
650 ரூபாவாகு
ஒரு கிலோகிராம் சிவப்பு பருப்பின் விலை 17 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, 415 ரூபாயாக இருந்த ஒரு கிலோகிராம் பருப்பின் விலை 
398 ரூபாவாகும்.
ஒரு கிலோகிராம் நாட்டு சம்பாவின் விலை 08 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி 228 ரூபாவாக இருந்த ஒரு கிலோகிராம் நாட்டு சம்பாவின் விலை 220 ரூபாவாகும். 
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் வெள்ளை நாடு 05 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது அதன்படி 179 ரூபாவாக இருந்த ஒரு கிலோகிராம் வெள்ளை நாட்டரிசியின் விலை
 174 ரூபாவாகும்.
ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் விலை ரூபாவால் 03 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது அதன்படி 278 ரூபா வெள்ளை சீனியின் தற்போது 275ரூபாவாகும்.  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


வியாழன், 6 அக்டோபர், 2022

இடம்பெற்ற விபத்து ஒன்றில் யாழில் இளைஞன் ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.இந்த விபத்து சம்பவம் 05-10-2022.அன்று மாலை 3.45 மணியளவில் யாழ். வைத்தியசாலை வீதி, கொட்டடி லைடன் சந்தியில் இடம்பெற்றதுள்ளது.
இந்த விபத்து சம்பவத்தில் யாழ். கொட்டடியை சேர்ந்த 21 வயதான றொபிக்‌ஷன் என்ற இளைஞரே உயிரிழந்தார் என்று பொலிஸார் கூறினர்.யாழிலிருந்து கொட்டடி நோக்கி வேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியின் அருகில் இருந்த மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியது என்று பொலிஸார் 
தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிள் பயணித்த இருவரில் ஒருவர் சம்பவத்தில் இடத்தில் உயிரிழந்தார்.மற்றொருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


புதன், 5 அக்டோபர், 2022

கிரீன் கார்ட் அமெரிக்க விசாவிற்காக காத்திருப்போருக்கான மகிழ்ச்சி தகவல்

கிரீன் கார்ட் 2024ஆம் ஆண்டிற்கான அமெரிக்க பன்முகத்தன்மை விசா திட்டம் (US Diversity Visa Program.)05-10-2022- இன்று முதல் விண்ணப்பத்திற்காக திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கிரீன் கார்ட் பொதுவாக கிரீன் கார்ட் (Green Card) என அறியப்படும் பன்முகத்தன்மை விசா திட்டமானது
 .05-10-2022.இன்று இரவு 09.30 மணி முதல் திறக்கப்படும் என 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் இந்த விடயத்தை டுவிட்ட பதிவொன்றில் தெரிவித்துள்ளது.அத்துடன் இதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் நவம்பர் 8ஆம் திகதி இரவு 10.30 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களை அமெரிக்க தூதரகத்தின் இணையத்தளம் வழியாக சமர்ப்பிக்கலாம்.பன்முகத்தன்மை விசா திட்டம் மூலம் ஒவ்வொரு வருடமும் எழுந்தமானமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 50,000 இற்கும் மேற்பட்ட நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
எனினும் நிரந்தர குடியுரிமை பெறுவதற்காக அமெரிக்காவிற்கு அதிகளவில் புலம்பெயர்ந்தோரை அனுப்பாத நாடுகளில் இருந்து மட்டுமே இவர்கள் தெரிவு செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



செவ்வாய், 4 அக்டோபர், 2022

நாட்டில் உணவுப் பொதியின் விலை அதிகரிப்பு. வெளியான முக்கிய செய்தி

இலங்கையில் சமூகப் பாதுகாப்பு வரி விதிக்கப்பட்டதன் பின்னர் பெரும்பாலான உணவு வகைகளில் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அசேல சம்பத் இதனை தெரிவித்துள்ளார்.
வரி விதிக்கப்பட்ட உடனேயே, பெரும்பாலான பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளதாகவும் அசேல சம்பத் குறிப்பிட்டுள்ளார். மதிய உணவுப் பொதியின் விலையை அதிகரிப்பது தொடர்பில் நாங்கள் 
இதுவரை எந்தவொரு கூட்டு தீர்மானமும் எடுக்கவில்லை 
என்றும், ஆனால் பெரும்பாலான ஹோட்டல்கள் உணவுப் பொதியின் விலையை ரூ.10, ரூ.15, மற்றும் ரூ.20 என உயர்த்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விலையேற்றத்தால் பிரைட் ரைஸ், கொத்து மற்றும் இதர துரித உணவு வகைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.லிட்ரோ எரிவாயுவின் சமீபத்திய விலைக் குறைப்பு, மதிய உணவுப் பொதிகளின் விலையை ஒரு கணிசமான விலையில் வைத்திருக்க மிகவும் உதவியாக இருந்தது.
எவ்வாறாயினும், நாளை முதல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை லிட்ரோ நிறுவனம் குறைத்த பின்னர் முடிவை அறிவிப்போம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



திங்கள், 3 அக்டோபர், 2022

நொச்சிக்குளத்தில் கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் வைத்தியசாலையில்

திருகோணமலை – ஹொரவ்பொத்தானை பிரதான வீதி நொச்சிக்குளம் பகுதியில் டிமோ பட்டா வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 15 பேர் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து நேற்றிரவு (02) 11.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் கஹடகஸ்திகிலிய பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் காயமடைந்துள்ளதாகவும், அதில் 
எட்டு பேர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மட்டக்களப்பு பகுதிக்கு நிகழ்வொன்றிற்கு சென்று வீடு திரும்பும் போது இவ்விபத்து இடம்பெற்றதாகவும், விபத்து இடம்பெற்றமைக்கான காரணம் இன்னும் தெரியவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இவ்விபத்து தொடர்பான விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



ஞாயிறு, 2 அக்டோபர், 2022

மரண அறிவித்தல் திரு. மூத்ததம்பி விசுவரட்ணம் ( விசுவப்பா) 02.10.22

உதிர்வு -02-10-2022 
யாழ். ஆவரங்கால் 10ம் கட்டையை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட. 
திரு. மூத்ததம்பி விசுவரட்ணம் ( விசுவப்பா) 
           அவர்கள் 02/10/2022 ஞாயிறு இன்று இறைபாதம் அடைந்தார். 
அன்னார் காலஞ்சென்றவர்களான மூத்ததம்பி குஞ்சுப்பிள்ளை  தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லையா தெய்வானை அவர்களின் அன்பு மருமகனும், 
காலஞ்சென்ற வள்ளிப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,
சிவனேஸ்வரன் (இலண்டன்), பங்கேஸ்வரன் (ஜேர்மனி), விமலாதேவி (கனடா), நிர்மலாதேவி (நெதர்லாந்து), வசந்தாதேவி (இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,
காலஞ்சென்றவர்களான தம்பு,செல்வரட்ணம், சீவரட்ணம், சபாரட்ணம்,நவரட்ணம் மற்றும் கனகரட்ணம், நாகம்மா, யோகம்மா, இராசபூபதி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
காலஞ்சென்ற கந்தசாமி நல்லம்மா, ஆகியோரின் மைத்துணரும் 
விமலராணி (இலண்டன்), அனுசியா (ஜேர்மனி ), செல்வலிங்கம் (கனடா), குலேந்திரலிங்கம் (நெதர்லாந்து), மகேந்திரம் ( Luxan Travels )ஆகியோரின் அன்பு மாமனாரும்,
றெஜித்தன்( ஆவரங்கால் ஒன்றியம் பிரித்தானியா. நிர்வாகசபை உறுப்பினர்)
 நிரூஜன்,சமீரா, றெமீனா, நிவேதா, நிரூபன், நித்திலா, பிரதீஷ் ,தாரகா, தரணி, லக்சன்,மேனுஷா, தீபிகா, செந்தூர்க்குமரன், தனுஜா, நிவேஜா, தினேஷ், மயூரன், டிஸாந்தன்,ஆகியோரின் பாசமிகு பேரனும். 
அவனிகா, ஆதன்யா, ஆரபி, அக்சரா ஆகியோரின் அன்பு பூட்டனுமாவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி 
அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து ,
 எமது ஆறுதலையும் பகிர்ந்து கொள்கின்றோம் 
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!!
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு 
சிவனேஸ்வரன்  00447495930223
பங்கேஸ்வரன்   004917647693450
விமலாதேவி     0016475634313
நிர்மலாதேவி    0031633925346
வசந்தாதேவி     0094766325382 
விமலராணி      00447578626586
மகேந்திரம்       0094779860614

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

நாட்டில் நடந்த உண்மை சம்பவம் வீட்டு முற்றத்தில் கதிரையில் அமர்ந்திருக்கும் பேய்.

இலங்கையில் குறித்த பிரதேசம் ஒன்றில் நள்ளிரவு 12 மணி நேரம் பேய் வீடு தேடி வந்து கதிரையில் இருக்கும் காட்சி சமூகவலைத்தளங்களில் 
வைரலாகி வருகினறன்.
மனிதர்கள் நடமாட்டத்தை அவதானித்த பேய் அங்கிருந்து திடீரென காணாமல் போய்விட்டன.  காணொளியினை முகநூலில் ஒருவர் பதிவிட்டமை குறிப்பிடதக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



சனி, 1 அக்டோபர், 2022

டெங்கு நோயால் யாழில் 8 பேர் உயிரிழப்பு.மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

யாழ். மாவட்டத்தில் இவ் வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 2548 டெங்கு நோயாளர்கள் உறுதி செய்யப்பட்டதுடன் எட்டு மரணங்களும் பதிவாகியுள்ளதாக யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் 
தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்ட விசேட நுளம்புக் கட்டுப்பாட்டு நிகழ்ச்சித் திட்டம் தொடர்பாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில்,”கடந்த சில மாதங்களாக யாழ். மாவட்டத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து 
வருவதுடன் அதிக மரணங்களும் பதிவாகின்றன.கோவிட்-19 தொற்று காரணமாக. மாகாணங்களிற்கிடையே ஏற்படுத்தப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட போக்குவரத்து காரணமாக கடந்த இரண்டு வருடங்களிலும் டெங்கு நோயாளர்கள் மற்றும் பதிவாகிய மரணங்களின் எண்ணிக்கையும் ஒப்பீட்டளவில் மிக குறைவாகும்.
யாழ். மாவட்டத்தில் இவ் வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 2548 நோயாளர்கள் உறுதி செய்யப்பட்டதுடன் எட்டு மரணங்களும் பதிவாகியுள்ளன.கடந்த ஐந்து வருடங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் மரணங்களின் எண்ணிக்கை
 குறைவாகக் காணப்பட்டது.
இவ் வருடம் நடந்த மரணங்களில் பெரும்பாலானவை நோயாளர்கள் தாமதமாக வைத்திய ஆலோசனையினை நாடியதாலேயே நிகழ்ந்துள்ளன.எனவே காய்ச்சல் போன்ற டெங்கு நோய்க்கான அறிகுறிகளுடையவர்கள் உடனடியாக தகுதி வாய்ந்த மருத்துவர் ஒருவரையோ அல்லது வைத்தியசாலைகளினையோ நாடி உரிய வைத்திய ஆலோசனையைப் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
டெங்கு நோயினை கட்டுப்படுத்துவது தொடர்பாக செப்டெம்பர் மாதம் (30.09.2022)ம் திகதி அரச அதிபர் தலைமையில் யாழ். மாவட்ட டெங்கு தடுப்பு கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது.அவ்வாறே எதிர்வரும் வாரத்தில் பிரதேச மட்ட டெங்கு தடுப்பு கண்காணிப்பு குழு கூட்டங்கள், பிரதேச செயலர் பிரிவு வாரியாகவும் கிராமிய மட்டங்களில் கிராம சுகாதார மேம்பாட்டு குழு கூட்டங்களும் இடம்பெறும்.
இனி வரும் மாதங்களில் யாழ். மாவட்டம் பருவப்பெயர்ச்சி மழையினை அதிகம் பெறும் காலமாகும்.எனவே இம்மாதங்களில் இனங்காணப்படும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம்.
 பருவப்பெயர்ச்சி 
மழையுடன் ஏற்படக்கூடிய டெங்கு பெருந்தொற்றினைத் தடுப்பதற்கு வாராந்தம் உறுதி செய்யப்படும் டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை
 குறைக்கப்பட வேண்டும்.
எனவே நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை டெங்கு பரவுவதற்கான அதிக ஆபத்துள்ள பிரதேசங்களாகக் கருத்தில் கொண்டு எதுவித காலதாமதமும் இன்றி சமூக பங்களிப்புடன் நுளம்புகள் உருவாகும் மூலங்களை அழிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படல் வேண்டும்.
இதனைக் கருத்தில் கொண்டு மத்திய சுகாதார அமைச்சானது நாடு முழுவதும் அதிக ஆபத்துள்ள பிரதேச செயலர் பிரிவுகளில் விசேட நுளம்புக் கட்டுப்பாட்டு நிகழ்ச்சித் திட்டத்தினை முன்னெடுக்கின்றது.இது 
தொடர்ச்சியாக முன்று நாட்கள் இரண்டு கட்டங்களாக நடைபெறும். முதலாவது டெங்கு கட்டுப்பாட்டு நிகழ்ச்சித் திட்டம் ஒக்டோபர் (3.10.2022)ம் திகதி முதல் (5.10.2022)ம் திகதி வரை சங்கானை, கரவெட்டி, ஊர்காவற்துறை, நல்லூர், சண்டிலிப்பாய், மற்றும் உடுவில் ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளில் முன்னெடுக்கப்பட உள்ளது.
அவ்வாறே எதிர்வரும் ஒக்டோபர் (12.10.2022)ம் திகதி முதல் (14.10.2022) ம் திகதி வரை சாவகச்சேரி, கோப்பாய், யாழ்ப்பாணம், பருத்தித்துறை, மற்றும் தெல்லிப்பளை ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளில்
 இடம்பெறவுள்ளது.
இதன் போது சுகாதார உத்தியோகத்தர்கள், பாதுகாப்புப் படையினர். பொலிஸ், கிராம உத்தியோகத்தர்கள், உள்ளுராட்சி மன்ற உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அடங்கிய குழுக்கள் அதிக டெங்கு ஆபத்து உள்ளதென அடையாளங் காணப்பட்டுள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் உள்ள அரசதனியார்
 நிறுவனங்கள், மதஸ்தலங்கள், பாடசாலைகள் , உயர் கல்வி நிறுவனங்கள், வீடுகள், தொழிற்சாலைகள் , கட்டடநிர்மாணங்கள் நடைபெறும் இடங்கள், மற்றும் மீன் பிடி துறைமுகங்கள் என்பனவற்றிற்கு நுளம்புகள் பெருகக்கூடிய ஆபத்துள்ள இடங்களை அடையாளம் காணும் நோக்கத்துடன் பரிசோதிப்பதற்காக வருகை தருவர்.
எனவே உங்கள் வீட்டின் உட்பகுதிகளிலும், வெளிச் சுற்றாடலிலும் டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்கள் உள்ளனவா என்பதனை கிரமமாக பரிசோதனை செய்வதுடன் அவற்றை அப்புறப்படுத்தவும் 
நடவடிக்கை எடுக்கவும்.
அரச தனியார் நிறுவனங்களின் பொறுப்பதிகாரிகள் தமது நிறுவனங்களில் கூட்டு முயற்சியாக சிரமதான பணிகளை முன்னெடுக்கவும்.மேலும் கைவிடப்பட்ட காணிகள், வீடுகள் என்பனவற்றின் உரிமையாளர்கள் அவற்றை துப்பரவாக பேணுமாறு
கேட்டுக் கொள்ளப்படுவதுடன், அவ்வாறான இடங்களில் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய ஆபத்துகள் காணப்படுமாயின் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.டெங்கு நோயிலிருந்தும் அதனால் ஏற்படக்கூடிய மரணங்களில் இருந்தும் எம்மையும் எமது சமுகத்தையும் பாதுகாக்க ஒன்றிணைவோம் ” என அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>