நைஜீரியாவின் மத்திய மாநிலமான கோகி நகரில் ஒரு பரபரப்பான வீதியில் பெற்றோல் பௌசர் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி தீப்பிடித்ததில் 23 பேர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.லோகோஜா – அபுஜா நெடுஞ்சாலையில் புதன்கிழமை டேங்கர் வாகனம் வேகக் கட்டுப்பாட்டை
இழந்து ஐந்து கார்கள், மூன்று முச்சக்கர
வண்டிகள் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளான
நிலையிலேயே இவ்வாறு தீப்பிடித்து எரிந்துள்ளது.இந்த அனர்த்தத்தில் 23 பேர் கொல்லப்பட்டதாகவும், ஒரு குழந்தை காயங்களுடன் உயிர் தப்பியதாகவும், பெடரல் சாலை பாதுகாப்பு ஆணையகத்தின் அதிகாரியொருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.இந்த சம்பவத்துடன் விபத்துக்குள்ளான
வாகனங்களில் பயணித்தவர்களே
இவ்வாறு உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.இந் நிலையில் “பெடரல் சாலை பாதுகாப்பு ஆணையத்தால் உறுதிப்படுத்தப்பட்ட 23 பேரின் மரணம், நம் நாட்டிற்கு ஏற்பட்ட துயர சம்பவங்களின் மற்றொரு
சோகமான சம்பவத்தை பிரதிபலிக்கிறது” என்று ஜனாதிபதி அந் நாட்டு ஜனாதிபதி முஹம்மடு புஹாரி ஒரு அறிக்கையில்
சுட்டிக்காட்டியுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக