siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 8 செப்டம்பர், 2020

தண்ணீர் தாங்கியில் மாட்டிய புறாவை துரித கதியில் மீட்டனர்

 

மாத்தறை ஹக்மன வீதியில் உள்ள தண்ணீர் தாங்கியில் சிக்கியிருந்த புறாமை மீட்க மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான நடவடிக்கை சமூக ஊடகங்களில் பரவலாக பாராட்டப்பட்டு வருகிறது.பட்டத்தின் நூலில் சிக்கி, மரணத்திற்கும் வாழ்வுக்குமிடையில் ஊசலாடிக் கொண்டு, 
தண்ணீர் தொட்டியில் சிக்கியிரு்த புறா மீட்கப்பட்டது.
பட்டம் ஏற்றிய நூலில் சிக்கிய புறா, தண்ணீர் தாங்கியில் இருந்ததை அவதானித்த, விவசாயத் திணைக்கள
 அதிகாரியொருவர், வனவிலங்கு
 திணைக்கள அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தார். ஆனால், உயரமான தொட்டியில் ஏறுவதற்கு வசதியில்லாததால், வனவிலங்கு திணைக்களத்தினர் முயற்சியை கைவிட்டனர்.
மறுநாள், மாத்தறை நகரசபை மேயரை தொடர்பு கொண்ட விவசாயத்திணைக்கள அதிகாரி, உணவு
 மற்றும் நீர் இன்றி புறா இறக்கும் அபாயத்தை
 சுட்டிக்காட்டினார்.அவர் விரைந்து 
நடவடிக்கையெடுத்து, தீயணைப்பு வீரர்களை சம்பவ இடத்திற்கு அனுப்பினார்.இந்த நடவடிக்கையில் மத்திய 
சுற்றுச்சூழல் அதிகாரசபை, மாவட்ட செயலகம், மாத்தறை நகரசபை, 
நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை, பெட்ரோலியம் கோர்ப்பரேஷன், வீதி அபிவிருத்தி அதிகாரசபை, 
மகா நிறுவனம், பிரதேசத்திலுள்ள
 தன்னார்வலர்கள் இணைந்து, உயரமான தண்ணீர்த் தாங்கியில் சிக்கிய 
புறாவை மீட்டனர்.
புறா விடுவிக்கப்பட்டதும், அங்கு கூடியிருந்தவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.மீட்கப்பட்ட புறா உடனடியாக மிரிச வனஜிவராசிகள் திணைக்கள அலுவலகத்திற்கு சிகிச்சைக்காக 
கொண்டு செல்லப்பட்டது.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக