திருகோணமலை பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
26-09-20.அன்று இரவு, 9.45 மணியளவில் திருகோணமலை பிரதான வீதியில் அமைந்துள்ள பல நோக்கு கூட்டுறவு சங்க சந்தியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
அதி சொகுசு வாகனம் ஒன்று முச்சக்கர வண்டியுடன் மோதுண்ட பின்னர் அருகிலுள்ள மின்கம்பத்துடன்
மோதுண்டுள்ளது.
இதன்போது, முச்சக்கர வண்டியின் சாரதி பலத்த காயங்களுடன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக