siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 2 செப்டம்பர், 2020

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இலங்கையர் மரணம்


ஐக்கிய அரபு இராச்சியத்தில் அமைந்துள்ள உணவகமொன்றில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் இலங்கைப் பிரஜையொருவர்
 உயிரிழந்துள்ளார்.
மாத்தறை பகுதியைச் சேர்ந்த ரங்கன சமித் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் தலைநகர் அபுதாபி மற்றும் அதன் சுற்றுலா மையமான டுபாயில் கடந்த தினங்களில் இரண்டு வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியிருந்தன.
கடந்த திங்கட்கிழமையன்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்ததாக அந்நாட்டு 
ஊடகங்கள் தெரிவித்தன.
அதேநேரம் தலைநகர் அபுதாபியில் நடந்த வெடிப்பில் இரண்டு பேர் கொல்லப்பட்டதாக அபுதாபி அரசாங்க ஊடக அலுவலகம் 
தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், ஐக்கிய அரபு இராச்சியத்தில் அமைந்துள்ள உணவகமொன்றில் இடம்பெற்ற சிலிண்டர் வெடிப்புச் சம்பவத்தில் இலங்கைப் பிரஜையொருவர் உயிரிழந்துள்ளார் என
 தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக