siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 8 செப்டம்பர், 2020

பருத்தித்துறையில் உயிரிழந்த நபர் மீண்டும் உயிருடன்..

 

யாழ்.பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்த நபர் உயிர் பிழைத்ததாக தெரிவிக்கப்பட்டமையினால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.குறித்த நபர் உயிருடன் இருந்ததாக உறவினர்கள் தெரிவித்த
 போதும், வைத்தியசாலை நிர்வாகம் அதனை மறுத்துள்ளது.நெல்லியடி – இராஜ கிராமத்தை சேர்ந்த ஒருவர் மயங்கி விழுந்த நிலையில், பருத்துறை
 ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அவர் உயிரிழந்துள்ளதாக
 வைத்தியர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.உயிரிழந்தவரின் சடலம் பிரேத அறைக்கு அனுப்பபட்டுள்ளது. பிரேத அறைக்கு
 சென்ற உறவினர்கள் குறித்த நபர் உயிருடன் இருப்பதாக கூறியிருக்கின்றனர்.இதனையடுத்து 
பிரேத அறையிலிருந்து உடலை வைத்தியசாலைக்குள் உறவினர்கள் கொண்டு சென்றிருக்கின்றனர். எனினும் அவர் இறந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து வைத்தியசாலையில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த நபர் 1990 அம்புலன்ஸ் வண்டி மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு வரும் போதே உயிரிழந்துள்ளார். எனினும், உறவினர்களால் வைத்தியசாலையில் குழப்ப நிலை ஏற்படுத்தப்பட்டதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக