யாழ்ப்பாணம், கொக்குவில் கிழக்குப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளை நுகர்ந்துகொண்டிருந்தனர் என்ற குற்றச்சாட்டில் ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.குறித்த பகுதியிலுள்ள
ஆலய வளாகத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் இளைஞர்கள் கூடி நிற்பதாக கோப்பாய் பொலிஸாருக்கு
இரகசியத் தகவல் கிடைத்தது.
இதனடிப்படையில் மேற்கொண்ட விசாரணையில் அவர்களிடம் இருந்து 210 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருன் பறிமுதல் செய்யப்பட்டதாக
பொலிஸார் தெரிவித்தனர்.இதேவேளை, யாழ்ப்பாணம்
நகர்ப் பகுதியில் 248 கிராம் கஞ்சாவுடன் குருநகரைச் சேர்ந்த 46 வயதுடைய ஒருவர் யாழ். மதுவரித் திணைக்கள அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.மதுவரித் திணைக்கள
அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து
குறித்தநபர் யாழ். நகரப் பகுதியில்
விற்பனைக்குத் தயாராக
தனது மோட்டார் சைக்கிளில் கஞ்சாவினை மறைத்து வைத்திருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவரை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மதுவரி
உதவி ஆணையாளர், வடமாகாணம் பிரபாத் ஜெயவிக்கிரவின் வழிநடத்தலின் கீழ் யாழ்ப்பாண மதுவரித் திணைக்கள
பொறுப்பதிகாரி ரகுநாதன் தலைமையிலான அணியினரால் குறித்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக