இலங்கையர்களின் தனிப்பட்ட தரவுகளை சேகரிக்கும் செயலிகள் தொடர்பில் இலங்கை தகவல் தொழில்நுட்ப பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.நாட்டின் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக கூடிய செயலிகள் தொடர்பில் உரிய ஆய்வுகளை மேற்கொண்டு, ஆபத்து
உள்ளதா என்ற விடயத்தை முன்வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இலங்கை தகவல் தொழில்நுட்ப பிரிவு, பாதுகாப்பு அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்கு
அச்சுறுத்தல் ஏற்படுத்த கூடிய வகையில் செயற்பாடுகளை மேற்கொள்ளும் கணினி மற்றும் கையடக்க தொலைபேசி
செயலிகள் தொடர்பில் உலகளவில் கடந்த நாட்களாக அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்ப
பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டு சுட்டிக்காட்டியுள்ளது.அண்மையில் இந்தியா மற்றும் அமெரிக்கா நாடுகள் பல்வேறு கையடக்க தொலைபேசி செயலிகளுக்கு தடை விதித்தது.எதிர்காலத்தில் ஏற்படவுள்ள சைபர் யுத்தம் போன்ற செயற்பாடுகளுக்காக கையடக்க
தொலைபேசி மூலம் பெற்றுக்கொள்ளப்படும் தரவுகளை பயன்படுத்த முடியும் என்பது தொழில்நுட்ப பிரிவின் நிலைப்பாடாகும்.எனவே, இலங்கையர்களின் தனிப்பட்ட தரவுகளை சேகரித்து நாட்டின் பாதுகாப்பிற்கு
அச்சுறுத்தலாக கூடிய செயலிகள்
தொடர்பில் உரிய ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு, பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளிடம் இலங்கை தகவல் தொழில்நுட்ப பிரிவு
கோரிக்கை விடுத்துள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக